வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மாடுகள் இறக்க காரணம் என்ன? வியாதியால் இறந்தால் ஏன் வியாதி? ஏன் மருத்துவம் பார்க்கவில்லை? அல்லது ஏதாவது சதியா? உண்மையை கண்டறிந்து மாடு இறப்புக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.
திருப்பதி : ஒய்.எஸ்.ஆர்.காங்., மூத்த தலைவரும், திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவரான கருணாகர ரெட்டி, கடந்த மூன்று மாதங்களில், தேவஸ்தானம் நடத்தும் கோசாலையில், 100க்கும் மேற்பட்ட பசு மாடுகள் உயிரிழந்ததாக சமீபத்தில் குற்றஞ்சாட்டினார். இது குறித்து, கருணாகர ரெட்டி கூறியுள்ளதாவது:கோசாலையில் எந்த ஒரு மாடும் இறக்கவில்லை என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். ஆனால், தேவஸ்தான தலைவர் பி.ஆர்.நாயுடு, 22 மாடுகள் மட்டுமே இறந்ததாகக் கூறினார். அதே நேரத்தில் செயல் தலைவர் ஷ்யாமளா ராவ், 43 மாடுகள் இறந்ததாகக் கூறியுள்ளார். வெளிப்படையான நிர்வாகத்தை அவர்கள் வழங்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
மாடுகள் இறக்க காரணம் என்ன? வியாதியால் இறந்தால் ஏன் வியாதி? ஏன் மருத்துவம் பார்க்கவில்லை? அல்லது ஏதாவது சதியா? உண்மையை கண்டறிந்து மாடு இறப்புக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.