டில்லியில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா உடன் சி.பி ராதாகிருஷ்ணன் சந்திப்பு
புதுடில்லி: டில்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் என்டிஏ சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் சி.பி ராதாகிருஷ்ணன் இன்று சந்தித்து பேசினார்.துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர், தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில்,வரும் செட்பம்பர் 9ம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. தேர்தல் முடிவுகள் அன்றைய தினமே அறிவிக்கப்பட்டு விடும். இந்நிலையில் துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜ கூட்டணி சார்பில் வேட்பாளராக சி.பி ராதாகிருஷ்ணனும், இண்டி கூட்டணி சார்பில் வேட்பாளராக சுதர்சன் ரெட்டியும் போட்டியிடுகின்றனர்.இந்நிலையில் சி.பி ராதாகிருஷ்ணன், நேற்று டில்லியில் பாஜ தலைவர் அத்வானியை அவரது இல்லத்தில் சந்தித்து ஆசி பெற்றார். அதை தொடர்ந்து, இன்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து பேசினார். அதை தொடர்ந்து இன்று மாலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டில்லியில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.ராஜ்நாத் சிங் பதிவிட்டுள்ளதாவது:இன்று சி.பிராதாகிருஷ்ணனை சந்தித்தேன். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.ராதாகிருஷ்ணன் ஒரு விதிவிலக்கான துணைத் தலைவராக வருவார் என்றும், இந்திய மக்களுக்கு அவர் தொடர்ந்து ஒரு சக்திவாய்ந்த குரலாக இருப்பார் என்றும் நான் நம்புகிறேன்.இவ்வாறு ராஜ்நாத் சிங் பதிவிட்டுள்ளார்.