உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அடல் சேது பாலத்தில் விரிசல்: ஊழல் நடந்ததாக எதிர்க்கட்சிகள் புகார்

அடல் சேது பாலத்தில் விரிசல்: ஊழல் நடந்ததாக எதிர்க்கட்சிகள் புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட நாட்டின் மிகவும் நீள்மான கடல்பாலத்தில் விரிசல் ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது.மஹாராஷ்டிராவின் மும்பைக்கும் ,நவி மும்பைக்கும் இடையே ரூ. 17 ஆயிரத்து 840 கோடி மதிப்பில் 22 கி.மீ. நீளம் கொண்ட அடல்-சேது கடல் மேல் பாலத்தை பிரதமர் மோடி கடந்த ஜன., 12-ம் தேதி திறந்து வைத்தார். இந்த பாலத்தில் பயணிப்பதன் மூலம் மும்பைக்கும் நவி மும்பைக்கும் இடையிலான பயண நேரம் 2 மணி நேரத்தில் இருந்து 20 நிமிடமாக குறைக்கப்படும். இந்தியாவின் மிகவும் நீண்ட பாலம் என கூறப்படுகிறது.இந்நிலையில் இப்பாலத்தினை இன்று(21.06.2024) மஹாராஷ்டிரா காங். தலைவர் நானா பட்டோல் ஆய்வு செய்தார். அப்போது பாலத்தில் பெருமளவு விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறினார். இதன் வீடியோவை செய்தி சேனல் ஒன்று வீடியோ வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இப்பாலம் கட்டியதில் பெருமளவு ஊழல் நடந்துள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

S Sivakumar
ஜூன் 22, 2024 18:58

பொறியியல் துறையில் இப்படி ஒரு நிகழ்வு எதார்த்தமா அல்லது தரக்குறைவா என்பதை வல்லுனர்கள் தீர்மானிக்க வேண்டும். அதற்கான தீர்வுகளை பரிந்துரை செய்து ஒப்பந்ததாரர்கள் விரைவில் சரி செய்ய வேண்டும். அதற்கான செலவுகள் அனைத்தும் ஒப்பந்ததாரர்கள் எந்த நிபந்தனையும் இன்றி ஏற்றுக் கொள்ள வேண்டும்.


அப்புசாமி
ஜூன் 22, 2024 10:00

அது விரிசல்.இல்லை ஹைன்..


GMM
ஜூன் 22, 2024 08:42

விரிசல் தெளிவாக தெரிகிறது. விசாரிக்க வேண்டும். 22 கிம் நீளம். வடிவமைப்பு, தரம், மேற்பார்வை.. போன்ற குறைபாடுகள் அறிய முடியும். காங்கிரஸ் தலைவர் ஆய்வு செய்ய அதிகாரம் பெற்றவர் அல்ல. உரிய அதிகாரிகள் தான் ஆய்வு செய்ய வேண்டும். பணி அரசியலுக்கு அப்பாற்பட்டது. ஊழல் குற்றச்சாட்டு அரசியலுக்கு உட்பட்டது. பிஜேபியினர் ஊழல் செய்ய வாய்ப்பு இல்லை. அவர்கள் முக்கிய குறிக்கோள் ஊழல் தடுப்பு. காங்கிரஸ் ஊழல் வரலாற்றில் இடம் பெற்றுள்ளன.


Rajinikanth
ஜூன் 22, 2024 00:51

ஏன் யா? உங்களுக்கெல்லாம் சுத்தமாக சிந்திக்கும் திறன் இல்லையா? கடலில் இப்படி ஒரு நீளமான பாலம் கட்டும்போது என்ன என்ன பிரச்சனைகள் வரும் என்று கூட சிந்திக்காமல் கட்டி விடுவார்களா? துளிகூட ஊழல் இருக்காது என்று அடித்துக்கூறுகிறீர்கள்? பிஜேபி ஆகட்டும் DMK ஆகட்டும், காங்கிரஸ் ஆகட்டும். எந்த ஒரு கட்சியிலும் ஊழல் இல்லை என்று நீங்கள் உறுதியாக நம்பினால், உங்களை யாராலும் காப்பாற்ற இயலாது.


தாமரை மலர்கிறது
ஜூன் 21, 2024 23:14

பூமி மிகவும் வெப்பமடைந்து வருவதால் இந்த விரிசல் விழுந்துள்ளது. கட்டிடநிபுணர்கள் இந்தளவு வெப்பத்தை எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. இது ஊழலாக இருக்க துளிகூட வாய்ப்பில்லை. எதிர்க்கட்சிகள் வெறுமனே வெற்றுக்குற்றச்சாட்டை கூறுகின்றன. மோடியின் ஆட்சியில் எந்த பிரச்சனையுமின்றி நாடு சிறப்பாக இருக்கிறது என்ற வைத்தெரிச்சலில் எதையாவது பேசுகிறார்கள்


தமிழ்நாட்டுபற்றாளன்
ஜூன் 22, 2024 01:05

இந்த டெண்டர் வாங்கியவர் எலெக்டரால் பாண்ட் எவ்வளவு கொடுத்து இருக்கிறார் என்று பாருங்கள் விரிசல் குறைவு thaan


Kasimani Baskaran
ஜூன் 21, 2024 22:46

சாலைத்தடுப்பில் வாகனம் மோதியதில் வந்த விரிசல் போல தெரிகிறது. அரண்டவன் கண்ணுக்கு எல்லாம் பேயாகத்தான் தெரியும்.


தமிழ்நாட்டுபற்றாளன்
ஜூன் 22, 2024 01:06

வாகனம் மோதினால் விரிசல் ரோட்டில் ஏற்படும் சிரிப்பு தான் வருது


Priyan Vadanad
ஜூன் 21, 2024 22:34

பாவம்பா நமது பிரதமர். ஏற்கெனெவே நொந்து போயிருக்கிறார். நல்லவர் வேடம் போட்டு இத்தனை நாள் சுகம் காண்டாகிவிட்டது. தேர்தல் அதுவும் ராமர்ப்பிரதேசத்தில், குறிப்பாக ராமர்கோவில் அயோத்தியில் மரண அடி வாங்கி நொந்து சுருண்டு போய் கிடைக்கும்போது நீங்கள் வேறு இப்படி பண்ணுறீங்களே கொஞ்ச நாடுகள் கழித்துதான் குடைந்தால் என்ன?


Sathyanarayanan Sathyasekaren
ஜூன் 22, 2024 02:14

பிரியன் வடநாடு, நீ எப்பேர்பட்டவன் என்று தெரியாது. மூன்றாம் முறை மோடிஜி அவர்கள் நமது நாட்டின் பிரதமர். ராமர் அவரை கைவிடவில்லை, அவருக்கு அயோத்தியா தொகுதி ஹிந்துக்களின் கேவலமான மனநிலையை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார். உன்னுடைய திருட்டு திராவிட கொள்ளை கூட்ட கொத்தடிமையின் சான்று அவருக்கு தேவை இல்லை. அவர் நல்லவரா இல்லையா என்பது எங்களுக்கு தெரியும், இன்பாவிற்கு கழுவிவிட வேண்டுமாம், உன்னை தேடிக்கொண்டு இருக்கிறார்கள் சீக்கிரம் போ


hari
ஜூன் 22, 2024 05:36

ஏலே தயிறுவடை. நிறுத்து உன் 200 ரூபாய் கொத்தடிமை பேச்சை. இங்க நடந்த சாராய சாவ பத்தி பேச வக்கில்லை உனக்கு...


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை