உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இண்டியா கூட்டணியில் விரிசல் விஸ்வரூபம்: பொய்யான வாக்குறுதி அளிக்கும் கெஜ்ரிவால் என ராகுல் விமர்சனம்

இண்டியா கூட்டணியில் விரிசல் விஸ்வரூபம்: பொய்யான வாக்குறுதி அளிக்கும் கெஜ்ரிவால் என ராகுல் விமர்சனம்

புதுடில்லி; பொய்யான வாக்குறுதிகளை கெஜ்ரிவால் அறிவிக்கிறார். அவர் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து எந்த வார்த்தையும் பேசவில்லை என காங்கிரஸ் எம்.பி.,யும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் விமர்சனம் செய்து உள்ளார். இண்டியா கூட்டணியில் முக்கிய தலைமை, முக்கிய கட்சி அல்லது எதிர்கால உத்திக்கான திட்டங்கள் குறித்து எந்த தெளிவும் இல்லை. இந்த கூட்டணி தொடரும் என்பதிலும் தெளிவில்லை என ஜம்மு காஷ்மீர் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சித் தலைவருமான உமர் அப்துல்லா கூறியிருந்தார். ஏற்கனவே டில்லி சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மியும், காங்கிரசும் தனித்து போட்டியிடுகிறது. கூட்டணி கட்சியினர் ஆதரவு கெஜ்ரிவாலுக்கே அதிகம் உள்ளது.இந்நிலையில், வடகிழக்கு டில்லியின் சீலம்பூரில், தேர்தல் பிரசாரத்தில் ராகுல் பேசியதாவது: ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பொய்யான வாக்குறுதிகளை அளிக்கிறார். நாங்கள் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி வருகிறோம். ஆனால் பிரதமர் மோடியும், அரவிந்த் கெஜ்ரிவாலும் இது குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என மக்கள் கேட்கிறார்கள். இதுகுறித்து கெஜ்ரிவால் ஒரு வார்த்தை கூட பேசாமல் மவுனம் காக்கிறார் . பிரதமர் மோடிக்கும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. பிரதமர் மோடியும், கெஜ்ரிவாலும் பண வீக்கத்தை குறைப்பதாக வாக்குறுதி அளித்தனர். ஆனால் இது தோல்வியில் முடிந்தது. ஏழைகள் ஏழைகளாகவே இருக்கிறார்கள். பணக்காரர்கள் அதிக பணத்தை சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கு உரிய உரிமை கிடைப்பதை பிரதமர் மோடியும், கெஜ்ரிவாலும் விரும்பவில்லை. டில்லியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால் இடஒதுக்கீடு உச்சவரம்பை உயர்த்தும்.கெஜ்ரிவால் அதானியைப் பற்றி எப்போதாவது பேசியிருக்கிறாரா? நாட்டை ஒரு தொழிலதிபர் நடத்த அனுமதிக்க மாட்டோம் என்று நான் தெளிவாக பேசுகிறேன். கெஜ்ரிவால் தேசிய தலைநகரை பாரிஸாக மாற்றுவதாக உறுதியளித்தார். மாறாக ஊழல், மாசுபாடு மற்றும் பணவீக்கம் அதிகரித்துள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலை அகற்றுவோம். பொய்யான வாக்குறுதிகளை அளித்து கெஜ்ரிவால் மக்களை ஏமாற்றி வருகிறார். நாட்டில் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையே போர் நடந்து வருகிறது. அரசியலமைப்பை பாதுகாப்பதில் உறுதியாக நின்றவர் மற்றும் மற்றொருவர் அதை அழிப்பவர். இவ்வாறு ராகுல் பேசினார்.கெஜ்ரிவால் பதிலடிஇது குறித்து சமூக வலை தளத்தில், அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராகுல் டில்லிக்கு வந்து என்னை மிகவும் அவதூறாக பேசினார். ஆனால் அவரது பேச்சுக்கள் குறித்து நான் கருத்து சொல்ல மாட்டேன். காங்கிரசை காப்பாற்ற அவரது போராட்டம், நாட்டை காப்பாற்ற எனது போராட்டம். இவ்வாறு கெஜ்ரிவால் பதிலடி கொடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

krishna
ஜன 14, 2025 16:30

MAFIA MAINO CONGRESS KUMBAL EPPODHUM HINDHUKKALAI PIRITHU ANGI LUNGI DHAYAVIL VAAXHUM M8GA KEVALA DESA VIRODHA KUMBAL.


Ramesh Sargam
ஜன 14, 2025 12:55

இண்டியா கூட்டணி என்று கூறுவதே தவறு. அது இன்றுவரை கூடவே இல்லை. அவர்களுக்குள்ளே எப்பொழுதும் பிரச்சினைதான். இப்பொழுது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. அவ்வளவுதான்.


Kasimani Baskaran
ஜன 14, 2025 12:32

மம்தா இவர்களுக்கே என்றோ வெந்நீர் ஊற்றி விட்டார். இதுக்குதான் புரியாமல் கூட்டணி பிரியாணி என்று உருட்டித்திரிகிறதுகள்...


M S RAGHUNATHAN
ஜன 14, 2025 12:17

முதலில் ராகுல் தான் எந்த மதம் அந்த மதத்தில் எந்த பிரிவு என்று சொல்லப்படும். இவர் முஸ்லிமா, பார்சியா, ரோமன் கத்தோலிக்கரா, ஹிந்துவா. இவர் பெயருக்கு பின் காந்தி என்ற ஜாதிப் பெயர் எப்படி வந்தது. இவர் தங்கை ஒரு கிருத்துவரை மணந்து கொண்டு இருக்கிறார். அவர் எப்படி திருமணத்திற்கு பின் காந்தி என்று தொடர்ந்து வைத்துக் கொண்டு இருக்கிறார். இவர் குழந்தைகளுக்கும் அந்த surname எப்படி தொடர்கிறது. இவர்கள் எத்தனை ஆண்டு காலம் மத்தியிலும், காஷ்மீரிலும் ஆட்சியில் இருந்தார்கள். அங்கு ஏன் தாழ்த்தப் பட்ட மக்கள், பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு சலுகைகள் மறுக்கப் பட்டது. இந்தியாவின் முதல் forgery mannan இந்த ராகுல் மற்றும் அவர் முன்னோர்கள், குடும்பத்தினர்.


பேசும் தமிழன்
ஜன 14, 2025 11:18

கெஜ்ரி உனக்கு இது தேவையா.... கான்கிரஸ் கட்சியை எதிர்த்து கட்சி ஆரம்பித்து விட்டு.. பிறகு அவர்களுக்கே கூஜா தூக்கினால் மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்?? பார்த்தீர்களா இத்தாலி போலி காந்தி கும்பல் வேலையை காட்டி விட்டது.. கான் கிரஸ் கட்சி இந்த நாட்டை பிடித்த கேடு ... முற்றிலும் துடைத்து எறியப்பட வேண்டிய கட்சி.


கண்ணன்
ஜன 14, 2025 10:16

அக்கூட்டணியில் உள்ள எல்லோரும் ஜாமீனில் இருக்கிறார்கள் எல்லோரும் தேசதுரோகிகள், பொய்யர்கள், திருடர்கள்


Indhuindian
ஜன 14, 2025 10:14

கடா கட்கட் ஈயத்தை பாத்து இளிச்சதாம் பித்தளை அல்லது Pot calling the kettle black


Kumar Kumzi
ஜன 14, 2025 08:54

ஒரு தேசத்துரோகி இந்தியாவிலிருந்து துரத்திபடிக்கணும்


xyzabc
ஜன 14, 2025 08:21

திராவிட மாடல் ல எல்லாரும் எப்பொழுதும் பணக்காரர்கள்.


Sundar R
ஜன 14, 2025 08:06

கேஜ்ரிவால் அதானியைக் கட்டிக்கொண்டு அழுகிறார் என்று கூறும் ராகுல் அத்வானியை விட பல மடங்கு பெரிய முதலாளியாக கருணாநிதி குடும்பத்தினரை கட்டிக்கொண்டு அழுகிறாரே தமிழகத்தில் ஆளும் கூட்டணி கட்சியினர் காங்கிரஸைத் தவிர அனைவரும் திமுகவுடன் மோதல் போக்கில் இருக்கிறார்கள். ஈர வெங்காய ராமசாமியை நாம் தமிழர் சீமானும், பாஜகவின் அண்ணாமலையும் ஒன்றாகச் சேர்ந்து ஆதாரத்தை வைத்து அடித்துக் குமுறி, குதறி விட்டார்கள். காங்கிரஸ் திமுகவுக்கு கூஜா தூங்குகிறதா? அல்லது திமுக காங்கிரஸுக்கு கூஜா தூங்குகிறதா? என்பதை திமுகவினரும் காங்கிரஸ் கட்சியினரும் தான் தமிழக மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை