மேலும் செய்திகள்
காணாமல் போன இளம்பெண் எலும்புக்கூடாக மீட்பு
05-Nov-2024
தட்சிணகன்னடா, மங்களூரின் 'லேடி ஹில்' பெட்ரோல் பங்க் அருகில் நேற்று மதியம், மாருதி காருக்கு பெட்ரோல் போடும் போது, எதிர்பாராமல் தீப்பிடித்தது. காரில் இருந்த ஓட்டுனர், வெளியே வந்ததால் உயிர் தப்பினார். பெட்ரோல் பங்க் ஊழியர்கள், தீயை கட்டுப்படுத்தியதால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இளைஞர் மீது தாக்குதல்
தட்சிணகன்னடா, பன்ட்வாலின், பெங்கெரே கிராமத்தில் வசிப்பவர் முகமது முஸ்தபா, 25. இவர் சஜிபநடு கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்தார். இரண்டு நாட்களுக்கு முன், காதலியை பார்க்க, அவரது வீட்டின் அருகில் சென்றார். இதனால் கோபமடைந்த பெண்ணின் குடும்பத்தினர், அவரை தாக்கி, அரை நிர்வாணமாக்கி கம்பத்தில் கட்டி வைத்து அடித்தனர். காயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சிறுவன் உயிரிழப்பு
தாவணகெரே, ஜகளூரின், சூரகொன்டனஹள்ளி கிராமத்தை சேர்ந்த அஜய்யா, 15, விடுமுறையை முன்னிட்டு, சித்தய்யன கோட்டேவில் உள்ள உறவினர் வீட்டுக்கு, ஏற்று வந்திருந்தார். மதியம் இங்குள்ள தடுப்பணையில் நீந்தி விளையாட சென்றார். ஆழமான பகுதிக்கு சென்ற அவர், நீரில் மூழ்கி உயிரிழந்தார் தொட்டியில் பலி
ஹாவேரியின், ரட்டிஹள்ளி கிராமத்தில் வசித்தவர் பிரஜ்வல், 9. இவர் நேற்று காலை விளையாட செல்வதாக, பெற்றோரிடம் கூறி சென்றார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் தேடிய போது, வீட்டின் அருகில் உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இறந்தது தெரிந்தது.
05-Nov-2024