உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கிரைம் கார்னர்

கிரைம் கார்னர்

மூதாட்டி மீது தாக்குதல்பெங்களூரு இஸ்லாம்புரா ஏழாவது கிராசில் வசித்தவர் தில்ஷாத், 60. நேற்று முன் தினம் இரவு, குப்பை போடும் விஷயத்தில், இவருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் கலீமுக்கும் சண்டை நடந்தது. அப்போது கலீம், உருட்டுக்கட்டையால் தில்ஷாத் மண்டையில் தாக்கினார். இதில் காயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.மது குடித்தவர் உயிரிழப்புஹாசனின் எடியூர் கிராமத்தை சேர்ந்தவர் ஹரிஷ், 45. குடிப்பழக்கத்துக்கு அடிமையான இவர், நேற்று முன் தினம் இரவு, ஒயின்ஷாப்பில் அளவுக்கு அதிகமாக மதுபானம் குடித்தார். வீட்டுக்கு செல்ல முடியாமல், ஒயின்ஷாப் அருகிலேயே விழுந்தார். அதே இடத்தில் உயிரிழந்தார். நேற்று காலை இதை பார்த்த அப்பகுதியினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.பெண் அடித்து கொலைராய்ச்சூர் லிங்கசகூரின் யரடோனி கிராமத்தில் வசித்தவர் விஜயலட்சுமி, 33. நேற்று அதிகாலை இவரை மர்ம கும்பல், சேலையால் கழுத்தை நெரித்து, கல்லால் தலையில் அடித்து கொலை செய்து விட்டு தப்பியோடினர். கொலைக்கான காரணம் தெரியவில்லை.நீரில் மூழ்கி சிறுவன் பலிவிஜயநகரா ஹடகலியின் கருவத்தியில் நேற்று முன் தினம் திருவிழா நடந்தது. இதை பார்க்க மனு முச்சட்டி, 13, குடும்பத்துடன் வந்திருந்தார். படகு சவாரி செய்வதற்காக படகில் ஏறும் போது, கால் தவறி விழுந்து, நீரில் மூழ்கி உயிரிழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ