உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெண்களுக்கு எதிரான குற்றங்களை மன்னிக்க முடியாது: பிரதமர் மோடி கோபம்

பெண்களுக்கு எதிரான குற்றங்களை மன்னிக்க முடியாது: பிரதமர் மோடி கோபம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜல்கோவான்: ‛‛ பெண்களுக்கு எதிரான குற்றங்களை மன்னிக்க முடியாது'' , என பிரதமர் மோடி கூறினார்.பெண்களை தொழில்முனைவோராக உயர்த்தி, அவர்களை லட்சாதிபதிகளாக்கும் திட்டமான, 'லட்சாதிபதி சகோதரி' திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், மகளிர் சுய உதவிக்குழுவில் அங்கம் வகிக்கும் பெண்களுக்கு, முதல் ஆண்டு ரூ.10,000 உதவித் தொகையும், அரசு உதவித் தொகையாக ரூ 12,500 ,வங்கிக் கடனாக ரூ12,500 ம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் வழங்கப்படும். இந்த உதவித் தொகையை பெற, மகளிர் துவங்க உள்ள சுய தொழில் குறித்த திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் பயனாளர்கள் தேர்வு செய்யப்படுவர். மஹாராஷ்டிராவில் ஜல்கோவான் என்ற இடத்திலும் ,ராஜஸ்தானின் ஜெயப்பூரில் நடைபெற உள்ள விழாவிலும் லட்சாதிபதி சகோதரி திட்டத்தின் கீழ் தேர்வு பெற்ற பயனாளிகளுக்கு உதவிகளை வழங்கி பிரதமர் மோடி பேசியதாவது:நாட்டை கட்டமைப்பதிலும், வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதிலும் இந்திய பெண்கள் சக்தி எண்ணிலடங்கா பங்களிப்பை அளித்து வருகிறது. வளர்ச்சியடைந்த தேசமாக நமது நாட்டை கொண்டு செல்வதற்கும் பெண்கள் முன்வந்துள்ளனர். நாடு சுதந்திரத்திற்கு பிறகு, நமது சகோதரிகள் மற்றும் மகள்களுக்காக முந்தைய அரசுகள் செய்த பணிகளை விட கடந்த 10 ஆண்டுகளில் ஏராளமானவற்றை செய்துள்ளோம்.நமது தாயார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம்; அவர்களின் வேதனையை உணர்ந்து கொண்டுள்ளேன். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என்பது மன்னிக்க முடியாத குற்றம் என்பதை அனைத்து அரசியல் கட்சிகள், மாநில அரசுகளுக்கும் தெரிவித்து கொள்கிறேன். யார் குற்றவாளிகளாக இருந்தாலும் அவர்களையும், அவர்களுக்கு உதவுவோரையும் தப்பிக்க விட மாட்டோம். மருத்துவமனை, பள்ளி, அரசு மற்றும் போலீஸ் அமைப்புகள் என எங்கு புறக்கணிப்பு நிகழ்ந்தாலும் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு வரும் போகும். ஆனால், பெண்களின் வாழ்க்கையையும், அவர்களின் கண்ணியத்தையும் பாதுகாப்பது நமக்கு உள்ள முக்கிய கடமை. இது சமூகத்திற்கும், அரசுக்கும் பொருந்தும்.பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர வலிமையான சட்டங்களை அரசு இயற்றுகிறது. முன்பு, குறிப்பிட்ட காலத்திற்குள் வழக்குப்பதிவு செய்யாமல், தாமதப்படுத்தப்பட்டது. மத்திய அரசின் பாரதீய நியாய சன்ஹீதா என்ற புதிய சட்டத்தில் இத்தகைய தடைகள் அகற்றப்பட்டன. பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக போலீஸ் ஸ்டேஷன் செல்லாமல் ஆன்லைன் மூலம் வழக்குப்பதியலாம். அந்த வழக்கை யாரும் சிதைத்துவிடாமல் இருக்க வழி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்க புதிய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க மாநில அரசுகளுடன் மத்திய அரசு இணைந்து செயல்படும். இந்திய சமூகத்தில் இருந்து இந்த அட்டூழியம் முற்றிலும் அகற்றப்பட வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

SARAVANAN A
ஆக 26, 2024 11:26

உலகில் எதை மன்னித்தாலும் பெண்கள், குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்முறை குற்றங்களை மன்னிக்கவே முடியாது குற்றங்களுக்கான காரணங்களை ஆராய்ந்தால் பலவாறாக கூறலாம் அவற்றில் மின் ஊடங்களிலும், சமூக ஊடகங்களில் பரப்பப்படும் பாலியல் வன்முறை காட்சிகளுக்கு ஒரு வரன்முறையே இல்லாமல் போய்விட்டது. போதை பொருள் புழக்கம், மது போன்றவை இன்னொரு புறம். வல்லூறு பார்வைகளுக்கு இங்கு பஞ்சமில்லைநாகரிகப் போர்வையில் உடுத்தப்படும் ஆடைகள் சம்பத்தபட்ட பெண்களை பாதிப்பதில்லை ஆனால் அவர்களால் பாவப்பட்ட எளிய இலக்கான அப்பாவி சிறுமிகளும், வயது முதிர்ந்த மற்றும் தனிமையில் இருக்கும் பெண்களுமே அதனால் அதிக பாதிப்புக்குள்ளாகிறார்கள். எப்படியெனில், குற்றவாளிகள் நிச்சயமாக ஒருவகையில் பிறல் மனநிலை கொண்டவர்களாகவே இருப்பதால் அவர்களின் மிருக பார்வைகள் எளிய இலக்கை நோக்கியே குறி வைக்கின்றன. அதற்காக அரும்புகளும், மலர்களும் இத்தகைய குரங்குகள் கையால் கருகுவதை சகித்து கொண்டிருக்க முடியாது. மேற்கண்ட காரணிகளை கட்டுப்படுத்தினாலே பெண்கள் பாதுகாப்பை ஓரளவு உறுதி செய்ய முடியும்


Ramesh Sargam
ஆக 25, 2024 20:38

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும் மன்னிக்க முடியாது. நம் நாட்டில் சட்டத்திருத்தம் மிக மிக தேவை இந்நேரம். இப்பொழுது சட்டத்தில் உள்ள ஓட்டைகள் அடைக்கப்பட்டு, இந்த காலகட்டத்திற்கு ஏற்ப சட்டம் இயற்றப்படவேண்டும்.


Mr Krish Tamilnadu
ஆக 25, 2024 20:13

இதுவரை நடந்தவை நடந்தவையாக கூட இருக்கட்டும், பகவத்கீதை வாசகம் போல். இந்த நேரத்தில் இருந்து, இந்த உறுதிப்பாடு முழுமையாக செயல்படுத்தப்பட்டால், பெண்களின் மனதார, பயமற்ற, பேச்சு அளவில் மட்டுமில்லாமல் உண்மையாக, முழு திருப்தியான, சமூக அந்தஸ்து கிடைக்குமானால், இந்தியா வல்லரசு ஆகி விடும். சிறுக சிறுக பெண்களை இழிவுபடுத்தும் சிந்தனையை உருவாக்கும், பாலியல் வெப்சைட்கள், விளம்பரங்கள் இந்தியாவில் தடை செய்யப்பட வேண்டும். இல்லை ஆதார் எண்ணுடன் அனுமதி தர வேண்டும்.


J.Isaac
ஆக 25, 2024 21:07

சாலைகளில் வாகனம் ஒட்டுவதில் கூட ஒரு கட்டுப்பாடு இல்லாமல் மக்கள் மதம் பிடித்து ஓட்டுகிறார்களே


J.Isaac
ஆக 25, 2024 19:23

எந்த நாட்டு பெண்கள் ???


gmm
ஆக 25, 2024 18:04

மாநில அரசியல் கட்சி, போலீஸ், வழக்கறிஞர் மூவேந்தர் கூட்டணி சமூக, தேச விரோத, பெண்களுக்கு எதிரான குற்றம் அதிகரிக்க காரணம். பாதிக்க பட்ட டாக்டர் படுகொலை. சில மணி நேரத்தில் சட்டம் தன் கடமையை செய்யவில்லை. மாநில நிர்வாகமா? அரசா? அரசு அந்நியரிடம் இருந்து மக்களை 24 மணி நேரம் பாதுகாக்கும். மாநில அதிகாரம் மட்டுப்படுத்த வேண்டும். இங்கு தான் தேச விரோத, சமூக விரோத கும்பல் அடைக்கலம் பெற்று வருகிறது. சட்டத்தை அமுல்படுத்த உள்நோக்கம் கொண்டு மாநில அதிகாரம் துஸ்பிரயோகம் செய்யப்படுகிறது.


MADHAVAN
ஆக 25, 2024 17:50

கற்பழிப்பு திலகம் 3000 பெண்களை கற்பழித்த ரேவண்ணாவுக்கு ஆதரவா பிரச்சாரம் செய்தவர் இவர்.


சிவம்
ஆக 25, 2024 15:56

மோடிஜிக்கு ஒரு ஆலோசனை. பாலியல் கொடுங்கோலர்களை சட்டத்திற்கு புறம்பாக பொது இடத்தில் சுட்டு தள்ளி தண்டனை தர முடியாது. அதற்கு பதிலாக காதும் காதும் வைத்த மாதிரி அவனை தீர்த்து கட்ட முடியுமே. பல வெளிநாடு வாழ் தீவிரவாதிகளை மர்ம நபர்களால் போட்டு தள்ளபட்ட நமக்கு, இதில் என்ன கஷ்டம். அதர்மத்தை வெல்ல தீய வழியோ அல்லது மாயவழியோ உபயோக படுத்த வேண்டியதுதானே.


அப்புசாமி
ஆக 25, 2024 15:36

நிர்பயா தீர்ப்பு எட்டு வருஷம் கழிச்சு வெளி வந்ததே . இவிங்க ஆட்சிதான் நடதிச்சு.


Velan Iyengaar
ஆக 25, 2024 15:24

மணிப்பூர் பெண்கள் ???


rsudarsan lic
ஆக 25, 2024 18:05

ராகுல் போய் வந்தாராம் அந்த manipuraa?


N Sasikumar Yadhav
ஆக 25, 2024 18:35

வேளைங்கார் தமிழக கிருஷ்ணகிரி பற்றியும் பேசுங் இன்னும் அந்த பள்ளியின் பெயரைக்கூட சரிவர தெரியாமல் பாதுகாக்கிறது உங்க திராவிட மாடல் அரசு


முக்கிய வீடியோ