உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சாவர்க்கர் குறித்து விமர்சனம்: நேரில் ஆஜராக ராகுலுக்கு நீதிமன்றம் சம்மன்

சாவர்க்கர் குறித்து விமர்சனம்: நேரில் ஆஜராக ராகுலுக்கு நீதிமன்றம் சம்மன்

நாசிக்: சாவர்க்கர் குறித்து ஆட்சேபனைக்கு உரிய வகையில் பேசியதற்காக, நேரில் ஆஜராக வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு நாசிக் நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.தொண்டு நிறுவனம் ஒன்றின் இயக்குநர் ஒருவர் நாசிக் நீதிமன்றத்தில் தொடர்ந்த அவதூறு வழக்கில், '' 2022ம் ஆண்டு நவ., மாதம் ராகுலின் பேச்சு மற்றும் அவரது பேட்டியை பார்த்தேன். ஹிந்து மகா சபையின் முன்னாள் தலைவர் சாவர்க்கரின் நற்பெயர் மற்றும் சமூகத்திற்கு அவர் ஆற்றிய பணிகளுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ராகுல் பேச்சு இருந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனக்கூறி இருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி, '' தேசப்பற்றாளருக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டவரின் பேச்சு மற்றும் அறிக்கையை பார்க்கும் போது, அது அவதூறு ஏற்படுத்தும் என்பதற்கு முகாந்திரம் உள்ளது. வழக்கை நடத்துவதற்கான காரணங்கள் உள்ளன. வழக்கு அடுத்து விசாரணைக்கு வரும் போது ராகுல் நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராக வேண்டும்''. இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

nagendhiran
அக் 01, 2024 20:42

பின்ன என்னத்துக்கு பப்பு பாட்டி சவார்கருக்கு தபால்தலை வெளியிட்டாங்க?


Barakat Ali
அக் 01, 2024 18:37

சர்க்கரை மதிப்பது பாஜக மட்டுமல்ல ..... மராட்டியர் அனைவருமே ..... சாவர்க்கர் பற்றி அவதூறு பரப்பி காங்கிரசுக்கு இருக்கும் வாக்குவங்கியிலும் ஓட்டை போடுவதில் ராகுல் வல்லவர் ....


gvr
அக் 01, 2024 16:03

RaGa is a curse on India


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை