உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஞ்சாபில் பயிர் கழிவு எரிப்பு குறைந்தும் டில்லியில் காற்று மாசு குறையவில்லை

பஞ்சாபில் பயிர் கழிவு எரிப்பு குறைந்தும் டில்லியில் காற்று மாசு குறையவில்லை

சண்டிகர் : பஞ்சாபில் பயிர் கழிவு எரிப்பு சம்பவங்கள், குறைந்தபோதும், டில்லியில் காற்று மாசு மிகவும் தீவிரமான நிலையிலேயே உள்ளது.டில்லியில், ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலம் துவங்குவதற்கு முன், காற்று மாசு அதிகரிப்பது பெரும் பிரச்னையாக உள்ளது. அண்டை மாநிலங்களான, ஹரியானா, பஞ்சாபில், பயிர் கழிவுகள் எரிக்கப்படுவதே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.இந்நிலையில், பஞ்சாபில், இந்த ஆண்டில் பயிர் கழிவு எரிப்பு சம்பவங்கள், 50 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.பஞ்சாப் அரசின் தகவலின்படி, இந்தாண்டு, செப்., 15 முதல் அக்., 27 வரையிலான காலத்தில், 1,995 பயிர் கழிவு எரிப்பு சம்பவங்கள் நடந்தன. அதே நேரத்தில் முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில், 4,059 சம்பவங்கள் நடந்தன.மொத்தம், 31 லட்சம் ஹெக்டேர் நிலங்களில் இந்த காலகட்டத்தில் அறுவடை நடக்கும். இந்த நேரத்தில், 200 லட்சம் டன் அளவுக்கு பயிர் கழிவுகள் உருவாவதாக கூறப்படுகிறது. அடுத்து துவங்கும் ராபி பருவத்துக்கு குறைந்த அவகாசமே இருப்பதால், விவசாயிகள் பயிர் கழிவுகளை எரிப்பதாக கூறப்படுகிறது.கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு பயிர் கழிவு எரிப்பு சம்பவம், 50 சதவீதம் குறைந்துள்ளது. ஆனாலும், டில்லியில், காற்று மாசு தொடர்ந்து மிகவும் தீவிரம் என்ற நிலையிலேயே உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Sathyanarayanan Sathyasekaren
அக் 29, 2024 03:15

பஞ்சாப் அரசின் அறிக்கை மீது சந்தேகம் வருகிறது, வெறும் கண்துடைப்பிறகாக எண்ணிக்கையை குறைத்து சொல்கிறார்கள். இதனை கட்டுப்படுத்த இயலாத நீதிபதிகள் ஹிந்துக்களின் கொண்டாட்டங்களின் மீது தடை போடுகிறார்கள்.


Dharmavaan
அக் 29, 2024 08:11

நீதி துறையே கேவலமாக தெரிகிறது ஒரு தலைமை நீதிபதியின் உருவம் பேச்சு நடத்தை எல்லாம் iபிரிவினைவாதத்தை தூண்டுவதாகவும் மத்திய அரசை /ஆளுநர்களை கேவலப்படுத்துவதாகும் ஹிந்து மத எதிர்ப்பாகவும் இருக்கிறது மக்கள் பாராளுமன்றத்துக்கே ஆளும் அதிகாரம் கொடுத்துள்ளனர் நீதி துறைக்கு அல்ல கொள்கைகளை நீதித்துறை பேச முடியாது பாராளுமன்றம் செய்யும் சட்டப்படி நடக்க வேண்டும் அவ்வளவே.. வரம்பு மீறுகிறது.மோடி துணிந்து கொலீஜியத்தை நீக்க வேண்டும் அது ஒன்றே வழி இல்லையேல் நாடு துண்டாகும் நாசமாகும் பெடரலிசம் என்பது சரியா அதை நிரநயிப்பது யார் புரியவில்லை


அன்பு
அக் 29, 2024 19:44

பயிர்க்கழிவுகளை எரிக்காமல் இயற்கை உரமாக பயன்படுத்தலாம்.


கொங்குவேல்
அக் 28, 2024 21:47

பாகிஸ்தான், பங்களா தேஷ்ல எரிக்காங்கபா.. அந்நிய நாட்டு சதி.


அப்பாவி
அக் 28, 2024 21:46

என்னாது குறையலையா? அப்புடீன்னா கண்டிப்பா நேருதான் காரணம். மேலேருந்து சதி செய்யுறாரு.


Ganapathy
அக் 28, 2024 22:34

அடேய் தறுதலைக்கு பொறந்த வெறுந்தல...பஞ்சாப்ல ஆட்சில இருப்பது யார்?


Dharmavaan
அக் 29, 2024 08:12

மடக்கிருக்கன்


Ganapathy
அக் 28, 2024 21:27

ஆனா நாங்க தீவாளிய மட்டும் கொண்டாட விடமாட்டோம். தீவாளியதான் பழி சொல்லி வரி கட்டி தொழில் செய்யும் 10 லட்சம் ஏழை தொழிலாளிகளின் வயிற்றில் அடிப்போம். ...அல்லேலுயா.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை