உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மணிப்பூரில் என்கவுன்டர்; ஆயுதக்குழுவினர் 11 பேர் சுட்டுக்கொலை

மணிப்பூரில் என்கவுன்டர்; ஆயுதக்குழுவினர் 11 பேர் சுட்டுக்கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இம்பால்: மணிப்பூரின் ஜிரிபாமில் இன்று மாலை சி.ஆர்.பி.எப்., முகாம் மீது தாக்குதல் நடத்திய, குக்கி ஆயத குழுவை சேர்ந்த 11 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.மணிப்பூரில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மெய்தி மற்றும் குக்கி இனத்தவர்களிடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையில், குக்கி ஆயுத குழுவினர் நேற்று கிழக்கு இம்பாலில் உள்ள கிராமங்கள் மீது துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தினர். அதனை தொடர்ந்து இன்றும் தாக்குதல் நடத்தினர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5qh3w3tl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தாக்குதல் குறித்து சி.ஆர்.பி.எப்.அதிகாரிகள் கூறியதாவது:எங்களுடைய முகாம் மீது இன்று மாலை, 11பேர் கொண்ட குக்கி பயங்கரவாதிகள் குழுவினர், தாக்குதல் நடத்தினர். அதனை தொடர்ந்து நாங்கள் அவர்களுக்கு பதிலடி கொடுத்தோம்.நாங்கள் நடத்திய தாக்குதலில், குக்கி ஆயுதகுழுவை சேர்ந்த 11 பேரை சுட்டு வீழ்த்திவிட்டோம்.மேலும் அவர்கள் வசம் இருந்த பல ஆயதங்களையும் கைப்பற்றிவிட்டோம். இந்த சம்பவத்தில் ஒரு சிஆர்பிஎப் வீரர் படுகாயமடைந்து தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

kulandai kannan
நவ 12, 2024 10:29

Missionaries are funding the Kuki tribals. They adopted the same tactics in East Timor and South Sudan.


Ramesh Sargam
நவ 11, 2024 20:11

ஸ்வீட் எடு, கொண்டாடு. தினம் தினம் தீபாவளிதான்.


Nandakumar Naidu.
நவ 11, 2024 19:55

suuuuuuper.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை