உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போலீஸ் ஸ்டேஷனில் கொடுமை; காதலியுடன் சென்ற ராணுவ வீரருக்கு அதிர்ச்சி!

போலீஸ் ஸ்டேஷனில் கொடுமை; காதலியுடன் சென்ற ராணுவ வீரருக்கு அதிர்ச்சி!

புவனேஸ்வர்: ஒடிசா போலீஸ் ஸ்டேஷனில் ராணுவ வீரரின் காதலிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் 5 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.கடந்த 15ம் தேதி ராணுவ வீரர் ஒருவர் தனது காதலியின் உணவகத்தை நள்ளிரவு 1 மணியளவில் மூடி விட்டு கிளம்பும் போது, சில மர்ம நபர்கள் அவர்களை தொந்தரவு செய்துள்ளனர். இது தொடர்பாக புகார் அளிக்க பரத்பூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றுள்ளனர். அங்கு புகாரைப் பெற இருந்த பெண் காவலர், ராணுவ வீரர் மற்றும் அவரது காதலியை தகாத வார்த்தைகளால் திட்டி பேசியுள்ளார். பின்னர், ராணுவ வீரரை சிறைபிடித்த காவலர்கள், அவரது காதலியை இழுத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளனர். இந்த சம்பவம் ஒடிசாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீஸ் இயக்குநர் ஒய்.பி., குரானியா விசாரணைக்கு உத்தரவிட்டார். அதன்படி, டி.எஸ்.பி., நரேந்திர குமார் பெஹேரா தலைமையிலான 5 நபர் குழு, பரத்பூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.இந்த நிலையில், இளம்பெண் பாலியல் தொந்தரவு சம்பவத்தில் ஐ.ஐ.சி., தினகுருஷ்னா மிஸ்ரா, எஸ்.ஐ., பைசாலினி பாண்டா, ஏ.எஸ்.பி.,க்கள் சலிலமயி சாஹு, சகாரிகா ராத் மற்றும் கான்ஸ்டபிள் பலராம் ஹண்டா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

venugopal s
செப் 20, 2024 16:20

இதெல்லாம் சாதாரணமப்பா!


Kanns
செப் 20, 2024 10:41

Good &Required Actions by Superior Police. Abolish Superior Police-Officers-Judges Not Punishing Power-Misusing Subordinates


அசோகன்
செப் 20, 2024 09:55

கொலை செய்தா கூட சஸ்பெண்ட் மட்டுந்தான் பண்ணுவீங்களா..... சஸ்பென்ட் னுனா என்ன சம்பளம் இல்லா லீவு.... இதுக்கு பேரு தண்டனையா ???


Krishnamurthy Venkatesan
செப் 20, 2024 12:13

பாதி சம்பளம் கிடைக்கும்.


Ms Mahadevan Mahadevan
செப் 20, 2024 09:54

தனி மனித ஒழுக்கம் இன்மை தான் காரணம். ஊடகங்கள், சினிமா, தொலைகாட்சி இவை களின் பொறுப்பற்ற தன்மை, ஆன் பிள்ளைகளை பெற்றோர் கண்காணித்து வளர்க்காமை, மது இவைகளும் காரணம். இனியாவது சமுதாயம் விழித்து கொள்ள வேண்டும். காவல் துறையில் நல்லவர்களை அமர்த்த வேண்டும்.


R.RAMACHANDRAN
செப் 20, 2024 08:34

அரசு ஊதியத்தில் பயங்கரவாதிகள்.இது வெளியில் உள்ள பயங்கரவாதிகளுக்கு தனியார் நிதி உதவி அளிப்பதை விட கொடுமையானது.தற்காலிக பணி நீக்கம் மட்டுமே செய்வது குற்றம் செய்ததற்கு தீர்வாகாது.


Palanisamy Sekar
செப் 20, 2024 08:33

இவ்வளவு சம்பவங்கள் நடந்து பிடிபட்டு அடிபட்டு ஜெயிலுக்கு போயி..செய்திகளை படிப்பதே இல்லையா என்ன? போலீஸ் ஸ்டேஷனிலேயே இப்படி என்றால் எங்கு போயி முறையிடுவது தெரியவில்லை. தண்டனைகளை கடுமையாக்குங்கள் இல்லையேல் இதுபோல செய்திகளை நாம் தொடர்ந்து படித்துக்கொண்டே இருக்கணும்


அப்பாவி
செப் 20, 2024 08:25

திருட்டு திராவிடியா மாதிரி திருட்டு ஓடியாக்கள். நம்ம ஓட்டை உடைசல் சட்டங்கள் ஒண்ணும் பண்ணாதுந்னு நல்லாத் தெரியும். வெறும் சஸ்பென்ஷன் தான். ரெண்டு மாசத்தில் ப்ரமோஷநோடு உள்ளே வந்துருவாங்க.


VENKATASUBRAMANIAN
செப் 20, 2024 08:14

இதுதான் இன்று ஆர்எஸ்பாரதி ஊடகங்களில் விவாதம் செய்யும். ஆனால் தமிழ்நாட்டில் நடந்தவற்றை பற்றி மூச்சு விடமாட்டார்கள்


ஜெய்ஹிந்த்புரம்
செப் 20, 2024 07:59

பாஜாக்கா ஆட்சி நடக்குது இல்லையா. ஹா ஹா.


அஸ்வின்
செப் 20, 2024 07:58

சஸ்பெண்டு எல்லாம் ஆகாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை