வாசகர்கள் கருத்துகள் ( 1 )
புதுசா ஏதாவது சொல்லுங்க தலைவரே
மாண்டியா: 'தற்போதைய காங்கிரஸ் அசல் அல்ல, போலி காந்திகள் மகாத்மா காந்தியின் பெயரில் அரசியல் செய்கிறார்கள்,' என்று ஜே.டி.எஸ்., தலைவரும் மத்திய அமைச்சருமான குமாரசாமி கூறினார்.மாண்டியாவில் குமாரசாமி அளித்த பேட்டி:இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டின் நூற்றாண்டு விழாவை நினைவுகூரும் வகையில், இன்று காங்கிரஸ் தலைவர்கள் பெலகாவியில் காந்தியின் பெயரில் திரண்டுள்ளனர். அதற்காக மாநில அரசு கோடிக்கணக்கான ரூபாய் செலவழிக்கிறது. ஆனால் காந்தியின் கட்அவுட்டை எங்கும் காணவில்லை. காந்திக்கு பதிலாக, காந்தியின் பெயரில் அரசியல் செய்யும் போலி காந்திகள் பெரிய அளவில் கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது.சுதந்திரப் போராட்டத்திற்கு மகத்தான பங்களிப்பை அளித்து, நாட்டு மக்களுக்கு உண்மையான சுதந்திரம் வேண்டும் என்று கனவு கண்ட காந்தியின் பெயரில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.காந்தியின் பெயரில் இவர்களின் பங்களிப்பு என்ன? கடந்த ஓராண்டில் என்ன செய்தார்கள்? காங்கிரஸ் எத்தனை முறை பிளவுபட்டது? நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய அசல் காங்கிரஸ் இன்னும் இருக்கிறதா? இது எந்த காங்கிரஸ்? கர்நாடகாவில் இருக்கும் காங்கிரஸ் அலிபாபா மற்றும் நாற்பது திருடர்கள் காங்கிரஸ்.இந்த அரசு ஆட்சிக்கு வந்து 18 மாதங்களில் இரண்டு பட்ஜெட்டில் ரூ.2 லட்சம் கோடி கடன் உள்ளது, அதை யார் திருப்பிச் செலுத்துவது?. உத்தரவாதம் என்ற பெயரில் அரசு மக்களை ஏமாற்றி வருகிறது.இவ்வாறு குமாரசாமி கூறினார்.
புதுசா ஏதாவது சொல்லுங்க தலைவரே