வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நாயுடுகாரு கேட்டா குடுக்காம இருக்க முடியமா?
அமராவதி: வங்கக்கடலில் உருவான மோந்தா புயலால், ஆந்திராவில் ஒட்டுமொத்தமாக, 6,384 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ள மாநில அரசு, முதற்கட்டமாக, 900 கோடி ரூபாயை ஒதுக்கும்படி மத்திய குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வங்கக்கடலில் உருவான மோந்தா புயல், கடந்த அக்டோபர் 29ம் தேதி ஆந்திராவின் மசிலிப்பட்டணம் - கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடந்தது. அப்போது, அம்மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. மணிக்கு 110 கி.மீ., வேகத்தில் வீசிய சூறைக்காற்றால், பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன; மின் கம்பங்கள் சேதமடைந்தன. இதுதவிர அங்குள்ள விளைநிலங்களும் நீரில் மூழ்கின. இந்த புயலால் மாநிலத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதன்படி, முதற்கட்ட மதிப்பீடுகளின்படி மொத்தம், 5,265 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக குறிப்பிட்ட ஆந்திர அரசு தற்போது மறுமதிப்பீடு செய்துள்ளது. இதுதொடர்பாக மத்திய குழு, ஆந்திராவில் நேற்று மீண்டும் ஆய்வு நடத்தியது. அப்போது, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாநில அரசு சார்பில் மறுமதிப்பீடு செய்தபோது, மொத்தம், 6,384 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய குழுவிடம் அறிக்கை அளிக்கப்பட்டது. இதில் ஆந்திராவின் 24 மாவட்டங்களில் உள்ள விளைநிலங்கள், உட்கட்டமைப்புகள் கடும் பாதிப்புக்குள்ளானதாக குறிப்பிட்டுள்ளது. எனவே, முதற்கட்டமாக, 900 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய குழுவிடம் ஆந்திர அரசு வலியுறுத்தியது.
நாயுடுகாரு கேட்டா குடுக்காம இருக்க முடியமா?