உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெஞ்சல் புயல் பாதிப்பு; காங்., கட்சியினர் மீட்பு பணியில் ஈடுபட ராகுல் அறிவுறுத்தல்!

பெஞ்சல் புயல் பாதிப்பு; காங்., கட்சியினர் மீட்பு பணியில் ஈடுபட ராகுல் அறிவுறுத்தல்!

புதுடில்லி: பெஞ்சல் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, காங்கிரஸ் எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் இரங்கல் தெரிவித்துள்ளார்.டிசம்பர் 1ம் தேதி பெஞ்சல் புயல் கரையைக் கடந்தபோது, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் காற்றின் வேகம் மணிக்கு 90 கி.மீ., வேகத்தைத் தொட்டதால், சாலைகள் மற்றும் மின் இணைப்புகள் கடுமையாக சேதமடைந்தன. தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட உள் மாவட்டங்களில் கனமழை மற்றும் சேதம் ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.இந்நிலையில், டில்லி பார்லிமென்ட் வளாகத்தில், ராகுல் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பெஞ்சல் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். வீடுகள் மற்றும் உடைகளை மக்கள் இழந்தது கவலை அளிக்கிறது. நிவாரண பணிகளில் அரசுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உதவ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

nsathasivan
டிச 03, 2024 19:23

அட பப்பு வந்துட்டாரு.கள்ளக்குறிச்சி விஷச்சாராய சாவுகள் 67 நடந்த போது எங்கே இருந்தார்.


Troo Picture
டிச 03, 2024 16:29

அதுக்கு கட்சியில் தொண்டர்கள் வேணுமே ஆபீசர் ?


SUBRAMANIAN P
டிச 03, 2024 13:50

உங்க நிதியிலிருந்து ஆளுக்கு ஒரு லட்சம் குடுங்க. அதான் பல லட்சம் கோடி இருக்கே


Ramesh Sargam
டிச 03, 2024 13:25

என்னெவோரு துரித அறிவுரை? மெய் சிலிர்க்குது போங்க.


xyzabc
டிச 03, 2024 12:52

பப்பு சொல்லி விட்டார். போட்டோஷூட் கு வந்து விடுவார்.


S. Gopalakrishnan
டிச 03, 2024 11:33

புயல் கரையை கடந்து மூன்று நாள்கள் ஆகிறது ! இப்போதுதான் ஐயா கும்பகர்ணன் தூக்கம் கலைந்து எழுந்தார் போலும் !


முக்கிய வீடியோ