உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தினமும் ரூ.5.90 கோடி நன்கொடை: ஷிவ் நாடார் தாராளம்

தினமும் ரூ.5.90 கோடி நன்கொடை: ஷிவ் நாடார் தாராளம்

புதுடில்லி: இந்தியாவின் மிகப்பெரிய நன்கொடையாளராக எச்.சி.எல்., நிறுவனத்தின் ஷிவ் நாடார் தொடர்வதாகவும்; மிக இளவயது நன்கொடையாளராக நிகில் கமத் உருவெடுத்துள்ளதாகவும் ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எச்.சி.எல்., நிறுவனர் ஷிவ் நாடார், கடந்த நிதியாண்டில் 2,153 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியதன் வாயிலாக, நாட்டின் மிகப்பெரிய நன்கொடையாளர் என்ற தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். நாள் அடிப்படையில் பார்த்தால், தினமும் அவர் ரூ.5.90 கோடி ரூபாய் நன்கொடையாக கொடுத்துள்ளார்.'ஹூருண்' நிறுவனத்தின் 2024ம் ஆண்டுக்கான நன்கொடையாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. சமுதாய மேம்பாட்டுப் பணிக்காக நன்கொடை வழங்குபவர்களின் பட்டியலை, இந்நிறுவனம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.கடந்த 2023 - 24 நிதியாண்டுக்கான பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த 203 தொழிலதிபர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் நன்கொடையாக மொத்தம் 8,783 கோடி ரூபாய் வழங்கியுள்ளனர். இது, இரண்டு ஆண்டுக்கு முந்தைய நிலவரத்துடன் ஒப்பிடுகையில் 55 சதவீதம் அதிகமாகும். 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக 18 நபர்களும்; 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக 30 நபர்களும்; 20 கோடி ரூபாய்க்கும் அதிகமாக 61 நபர்களும் நன்கொடை வழங்கியுள்ளனர்.இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான ரோஹிணி நிலகேனி, 154 கோடி ரூபாய் நன்கொடை அளித்ததன் வாயிலாக, அதிக நன்கொடை வழங்கிய இந்திய பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

'இண்டோ எம்.ஐ.எம்.,' நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணா சிவுகுலா, 228 கோடி ரூபாய் நன்கொடை வழங்கி, அதிக நன்கொடை வழங்கிய 10 நபர்களின் பட்டியலில் முதல் முறையாக இடம்பெற்று உள்ளார். கல்வியை மேம்படுத்தவே நன்கொடையாளர்கள் அதிக முக்கியத்துவம் வழங்கியுள்ளனர். கல்வி சார்ந்த விஷயங்களுக்காக 3,680 கோடி ரூபாய் வழங்கியுள்ளனர். மொத்த நன்கொடையாளர்களில் 16 சதவீதம் பேர், மருந்து துறையைச் சேர்ந்தவர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Arvind Bharadwaj
நவ 11, 2024 08:55

இன்றைய தேதியின் ஆகப்பெரிய மோசடி இதுபோன்ற நன்கொடை சமாச்சாரங்களே. நன்கொடை தருகிறோம் என்று தாங்களே ஒரு அமைப்பை ஏற்படுத்திக்கொண்டு அந்த அமைப்புக்கு நன்கொடை தந்துவிட்டு அதற்கான வரிவிலக்கை அரசிடம் இருந்து உரிமையோடு கேட்டு வாங்குவதுதான் இதன் பின் உள்ள சூட்சமம். அது போன்ற தொண்டு அமைப்புகளின் செயல்பாடுகள் & நிதிப் பரிவர்த்தனைகளைப் பற்றி வருமான வரித்துறை பெரிய அளவில் கண்டு கொள்ளாது ஆளும் கட்சிகளை நீங்கள் முறைத்துக் கொள்ளாத வரை. சரி. இந்த தொண்டு அளைப்புகள் என்ன பொதுச் சேவை செய்கின்றன என பார்த்தால், தனியார் பல்கலைக் கழகங்களை அமைத்து அதன் மூலம் பீஏ பி.எஸ்சி. பீகாம் போன்ற பட்டப் படிப்புகளுக்குக் காட ஆண்டுக்கு 2 லட்சம் விலை வைத்து கல்லா கட்டி கல்விச் சேவை செய்து வருகின்றன. உதாரணம். விப்ரோ பல்கலைக்கழகம், ஷிவ் நாடார் பல்கலைக் கழகம்.


Murthy
நவ 08, 2024 17:05

பெற்ற மகனை தெருவில் விட்டுவிட்டு எவ்வளவு நன்கொடை கொடுத்தாலும் அவரவர் அனுபவித்ததே ஆகவேண்டும் . .......


ManiK
நவ 08, 2024 16:28

Shiva Nadar is a true patriot and extremely dedicated hard worker. It's amazing to see his maturity and caring for fellow Indians. Youth should take him as a role model, we need 1000s of Shiv Nadars. நீண்ட ஆயுளுடன் நிம்மதியாக அவர் வாழ முருகனை வேண்டுவோம்.


Ram pollachi
நவ 08, 2024 13:25

இரவு பகல் பார்க்காமல் தின்னும் தின்னாமலும் உழைக்கும் இளைஞர்களுக்கு ஒரு பங்கு முதலாளிக்கு பத்து பங்கு லாபம் கிடைக்கிறது என்பது தெளிவாகிறது... இதில் வேலை பார்க்கும் பலர் வேலை பளு காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டு போதைக்கு அடிமையாகி விட்டார்கள், சிலர் விவசாயம் மற்றும் கூலி வேலைக்கு செல்லும் அவலம்... நிலத்தின் விலை தாறுமாறாக சென்றதற்கு காரணம் இந்த துறை, விலை வாசி ஏற்றம், திருமணத்திற்கு பெண் கிடைக்காதது... குடும்ப விரிசல் இப்படி தான் ஒவ்வொரு குடும்பத்திலும் போகுது... பெஞ்ச் என்ற வார்த்தை பள்ளியை விட இந்த துறையை கலக்கி வருகிறது... முதியோர் இல்லங்கள் செழித்து வளர இந்த துறையில் பணிபுரியும் நபர்கள் கூட ஒரு காரணம்.


Venkata Krisshna
நவ 08, 2024 11:20

நீங்கள் சமூக நல் எண்ணத்தில் நன்கொடை வழங்கியதற்கு மிக்க நன்றி. அதே சமயம் நீங்களே உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்றார் போல நல்ல பள்ளிகளை கட்டி இலவசமாக படிப்பு சொல்லிகுடுத்தல் நன்றாக ருக்கும். இங்கு நிறைய இளைஞர்கள் படிப்பு சொல்லித்தர தயாராக உள்ளார்கள். அதுபோல நிறைய ஆசிரியர்கள் பயிற்சியை முடித்து வேலை இல்லாமல் இருக்கிறார்கள் . இது என் தஸ்மையான வேண்டுகோள்


theruvasagan
நவ 08, 2024 11:13

ஒரே நாளைக்கு அஞ்சு கோடி குடுக்கறது ஒரு பெரிய விஷயமா. ஒரு நாளைக்கு 82 கோடி.(வருடத்துக்கு 30000 கோடி) ஈட்டும் நாங்கள்ளாம் எப்படியெல்லாம் சம்பாதிக்கறோம்னு பெருமை அடித்துக் கொண்டதே இல்லை.


Rajamani K
நவ 08, 2024 09:23

முதலில் உங்கள் கம்பெனி க்கு நல்ல லாபம் சம்பாதித்துக் கொடுக்கும் ஊழியர்களை நன்கு நடத்துங்கள். அவர்களுக்கு நல்லது செய்து விட்டு பிறகு தான் தர்மம் செய்யுங்கள். ஊழியர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம். இது எல்லா இட் நிறுவன உரிமையாளர்களுக்கும் வேண்டுகோள்


SUBBU,MADURAI
நவ 08, 2024 07:34

இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் ஆக்டோபஸ் Sorry ஆலமரம்போல தங்கள் கிளைகளை பரப்பி இயங்கி வரும் கட்டுமர குடும்பத்தை சேர்ந்த மிகப் பெரிய கார்ப்பரேட் கம்பெனியான மாறன் குடும்பத்தினரின் சன் நெட்வொர்க் இந்தப் பட்டியலில் கட்ட கடைசி இடத்தில் கூட இடம் பெறவில்லையே? ஏன் அவர்கள் நன்கொடை எதுவும் கொடுக்கலையா? தனக்குப் பிறகு தன்னுடைய கோபாலபுர வீட்டை ஆஸ்பத்திரியாக்கி ஏழை மக்களுக்கு பயன்படுத்த வேண்டும் என உயில் எழுதி வைத்த கொடை வள்ளலாச்சே கருணாநிதி அப்படி அவர் உயில் எழுதி வைத்தது போல இன்று அவருடைய கோபாலபுர வீடு மருத்துமணையாக்கப் பட்டு அதனால் இன்று பல ஏழை தமிழக மக்கள் பலனடைந்து வருகிறார்களே அப்படிப்பட்ட கருணாமூர்த்தி என்ற கருணாநிதியின் கர்ண பரம்பரையில் இருந்து வந்த குடும்பத்தை சேர்ந்த மாறன் சகோதரர்கள் நடத்தும் கார்ப்பரேட் கம்பெனிகள் நன்கொடை அளிக்காதது நமக்கு அதிர்ச்சியாக மட்டுமல்ல ஆச்சரியமாகவும் இருக்கிறது.


HoneyBee
நவ 08, 2024 08:34

இன்னுமா இவர்களை நம்புகிறீர்கள். கட்டுமரம் சொன்னது அத்தனையும் பொய். அம்புட்டு தான் இவுக புத்தி


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 08, 2024 10:25

நண்பர் சுப்பு அவர்களே, காத்துல கைமாத்தா இருநூற்று அம்பது கோடி வாங்கி அதையும் காதுலேயே கைமாத்தா கொடுத்த வித்தகர் அந்த கருணாநிதி. இன்னொரு சிறப்பு என்னவென்றால், எம் ஜி ஆர் தனது வருமானவரி சிக்கலை தீர்க்க சட்டத்துக்கு உட்பட்டு தனது சொத்தின் ஒரு பகுதியை வி என் ஜானகிக்கு விற்று அந்த பணத்தை வருமானவரி கட்டிய போது, "வி என் ஜானகி என்ன தொழில் செய்கிறார், எம் ஜி ஆரின் சொத்தை பல இலட்சங்கள் கொடுத்து வாங்கும் அளவு அவருக்கு எங்கிருந்து பணம் வந்தது" என்று தெருவெங்கும் போஸ்டர் ஒட்டிய அதே கருணாநிதிதான் , தயாளு தனக்கு Fruits & Veges Company Of India Limited என்ற கம்பெனியில் இருந்து இருநூற்று அம்பத்தாறு கோடி கடன் வாங்கி தொலைக்காட்சி நிறுவனம் துவக்க பணம் அளித்தார் என்று வாக்கு மூலம் அளித்தார் என்ன தொழில் தயாளு செய்தார் என்பது குறித்து யாருமே கேட்க முடியாது.


visu
நவ 08, 2024 06:55

இந்த பணத்தில் 10 ஊர்களை தத்தெடுத்திருந்தால் வாழ் நாளில் அந்த ஊர்கள் உச்சத்தை அடைந்திருக்கும் . இது அரசு கையில் சென்றால் 1 ரூபாய்க்கு 25 பைசே மட்டுமே மக்களை சென்றடையும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை