உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பால் பண்ணையாளர்கள் சங்கமம் விழா துவக்கம்

பால் பண்ணையாளர்கள் சங்கமம் விழா துவக்கம்

பாலக்காடு; கேரள அரசு, பால்வள மேம்பாட்டு துறை சார்பில், இரு தினங்கள் நடக்கும் மாவட்ட பால் பண்ணையாளர்கள் சங்கமம் விழா நேற்று துவங்கியது.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், பிளாச்சிமடையில் இரு தினங்கள் நடக்கும் பால் பண்ணையாளர்கள் சங்கமம் விழாவின் கொடியேற்றம், பெருமாட்டி ஊராட்சி தலைவர் ரிஷாவின் தலைமையில் நடந்தது. பால் பண்ணையாளர்களுக்கான கருத்தரங்கை, சித்தூர் வட்டார ஊராட்சி உறுப்பினர் முருகதாஸ் துவக்கி வைத்தார். தொடர்ந்து, பல்வேறு தலைப்பில் பேசினர். இதையடுத்து, பால் பண்ணையாளர்கள் ஊக்குவிப்பு, வினாடி -- வினா, கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடந்தது.இன்று நடக்கும், மாநாட்டை பால்வள மேம்பாட்டு மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் சிஞ்சுராணி துவக்கி வைக்கிறார். இதில், அமைச்சர்கள் கிருஷ்ணன்குட்டி, ராஜேஷ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.சங்கமத்தை ஒட்டி பல்வேறு ரக கால்நடைகளின் கண்காட்சி, கலாசார ஊர்வலம், 'டெய்ரி எக்ஸ்போ' ஆகியவை இடம் பெறுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை