உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலால் ஆபத்து : பாதுகாப்பு கேட்கும் பப்பு யாதவ்

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலால் ஆபத்து : பாதுகாப்பு கேட்கும் பப்பு யாதவ்

பாட்னா: பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடமிருந்து தனக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக பீஹார் எம்.பி.யுமான பப்பு யாதவ் போலீஸ் பாதுகாப்பு கேட்டுள்ளார்.பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் மீது பல்வேறு கொலை, அடிதடி, ஆள்கடத்தல் வழக்குகள் உள்ளன. பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலையிலும், அவர் மூளையாகச் செயல்பட்டுள்ளார். தற்போது, அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பீஹாரின் பூர்ணியா தொகுதி லோக்சபா எம்.பி..யான பப்பு யாதவ், சமீபத்தில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் குறித்து எச்சரிக்கை விடுக்கும் விதமாக பேசியதாக கூறப்படுகிறது.இதனால் ஆதிரமடைந்த லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர்கள் பப்பு யாதவிற்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்தது.இது தொடர்பாக பூர்ணியா போலீசில் தனக்கு உரிய பாதுகாப்ப தர வேண்டும் என பப்பு யாதவ்கோரிக்கை விடுத்துள்ளார். பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கும் கடிதம் எழுதியுள்ளார்.அதில் பீஹார் காவல்துறையில் தனக்கு நம்பிக்கை இல்லை தானும் தனது குடும்ப உறுப்பினர்களும் பல தாக்குதல்களை எதிர்கொண்டோம். நேபாளத்தைச் சேர்ந்த மாவோயிஸ்ட் அமைப்புகள் உட்பட பல்வேறு சாதி அடிப்படையிலான குற்றவாளிகள் தன்னை பலமுறை கொல்ல முயன்றனர். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

R K Raman
அக் 29, 2024 20:53

இப்படிப்பட்ட ஆட்களை ஏன் இன்னும் என்கவுண்டர் செய்ய வில்லை?


Rpalnivelu
அக் 29, 2024 07:49

நீங்கள் சொல்வதில் மிக லேசான உண்மை இருக்கிறது. சல்மான் கான் பாதுகாப்பிற்கு மட்டுமே அரசாங்கம் உத்தரவாதம். மற்றவர்களுக்கு விதிபடி என்று விட்டுவிடுகிறது. நிற்க, இந்த பப்பு யாதவின் மேல் ஏகப்பட்ட கொலை, கொள்ளை, கற்பழிப்பு, நில அபகரிப்பு, மிரட்டல் என்று ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கிறதே


பேசும் தமிழன்
அக் 29, 2024 07:39

பப்பு என்ற பெயருள்ள எல்லோரும் இப்படி தான் இருப்பார்களா.... ஏண்டா நீ தானே ஒரு மணி நேரத்தில் அந்த கும்பலை அழித்து விடுவேன் என்று கூறிய ஆள்.... இப்போ எதற்க்கு பம்முவது ஏன் ???


J.V. Iyer
அக் 29, 2024 04:05

பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் அவர்களே நீங்கள் எங்கள் எல்லோருக்கும் ஹீரோ ஆகிவிடுவீர்கள், எல்லா பயங்கரவாதிகளையும் ஹிந்துஸ்தான் எல்லைக்குள்ளும், எல்லை தாண்டியும், காலிஸ்தான் தீவிரவாதிகள், போர்கிஸ்தான், பங்களாதேஷில் உள்ள மதத்தீவிரவாதிகள் எல்லோரையும் சேர்த்து ஒழித்துக்கட்டினால். வாழ்க உங்கள் தொண்டு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை