மேலும் செய்திகள்
நடிகர் தர்ஷனுக்கு இடைக்கால நிபந்தனை ஜாமின்
30-Oct-2024
பெங்களூரு: நடிகர் தர்ஷன் ஜாமின் மனுவை ரத்து செய்ய கோரி, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.சித்ரதுர்காவை சேர்ந்த தனது ரசிகர் ரேணுகாசாமி கொலை செய்யப்பட்டவழக்கில், நடிகர் தர்ஷன் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஜாமினில் வெளியே வந்ததர்ஷன், முதுகுவலி காரணமாக,பெங்களூரு பி.ஜி.எஸ்., அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.இவரது ஜாமினை ரத்து செய்யக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய விசாரணை அதிகாரிகள்,உள்துறைஅமைச்சகத்திடம் அனுமதி கோரினர். இதற்கு அமைச்சகமும் ஒப்புதல் அளித்துள்ளது.இதை உறுதி செய்த நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா, “விரைவில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்,” என்றார்.
30-Oct-2024