உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருப்பதியில் அமித்ஷா சாமி தரிசனம்

திருப்பதியில் அமித்ஷா சாமி தரிசனம்

திருப்பதி: திருப்பதி சென்ற மத்திய அமைச்சர் அமித்ஷா, இன்று (மே 31) தனது மனைவியுடன் சென்று சாமி தரிசனம் செய்தார்.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்று (மே 30) தமிழகம் வந்து, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், சத்தியமூர்த்தி பெருமாள் சத்யகிரீஸ்வரர் கோயில் மற்றும் கோட்டை பைரவர் கோயிலில் தரிசனம் செய்தார். தொடர்ந்து ஆந்திரா மாநிலம் திருப்பதி சென்ற அமித்ஷாவிற்கு தேவஸ்தான அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். திருப்பதி மலையில் உள்ள வகுள மாதா விருந்தினர் மாளிகையில் நேற்று இரவு அமித்ஷா தங்கினார். இந்த நிலையில் இன்று காலை அமித்ஷா தனது மனைவியுடன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார். அமித்ஷா வருகையை ஒட்டி திருப்பதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ