உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தத்தாத்ரேயா ஹோசபலே கருத்து: ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு விளக்கம்

தத்தாத்ரேயா ஹோசபலே கருத்து: ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'அரசியலமைப்பின் முகவுரையில் இருந்து, 'சோசலிஸ்ட்' மற்றும் 'மதச்சார்பற்ற' என்ற வார்த்தைகளை அகற்ற வேண்டும் என, ஆர்.எஸ்.எஸ்., பொதுச்செயலர் தத்தாத்ரேயா ஹோசபலே வலியுறுத்தவில்லை. 'அவற்றின் உண்மையான உணர்வுகளை மீட்டெடுக்க வேண்டும் என்றே அவர் குறிப்பிட்டார்' என, அந்த அமைப்பு விளக்கம் கொடுத்துள்ளது.டில்லியில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ஆர்.எஸ்.எஸ்., பொதுச்செயலர் தத்தாத்ரேயா ஹோசபலே பேசுகையில், ''அரசியலமைப்பின் முகவுரையில், சோசலிஸ்ட் மற்றும் மதச்சார்பற்ற என்ற வார்த்தைகள் நீடிக்க வேண்டுமா என்பது குறித்து விவாதிக்க வேண்டும். ''காங்கிரசின் எமர்ஜென்சி காலத்தில், இந்த வார்த்தைகள் சேர்க்கப்பட்டன. அவை ஒருபோதும் அரசியலமைப்பின் ஒரு பகுதியாக இல்லை,'' என்றார். ஹோசபலே பேச்சுக்கு காங்., உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, ஆர்.எஸ்.எஸ்., அதிகாரப்பூர்வ வார இதழான, ஆர்கனைசரில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரை:சட்டமேதை அம்பேத்கர் கூறிய கருத்துகளையே தத்தாத்ரேயா ஹோசபலே வெளிப்படுத்தினார். அவரது கருத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை. அரசியலமைப்பு முகவுரையில் இருந்து சோசலிஸ்ட், மதச்சார்பற்ற வார்த்தைகளை நீக்க வேண்டும் என, அவர் பேசவில்லை.மாறாக, காங்கிரசின் அவசரகால கொள்கைகளின் சிதைவுகளிலிருந்து விடுபட்டு, அதன் அசல் உணர்வை மீட்டெடுக்க வேண்டும் என்றே அவர் பேசினார். அரசியலமைப்பின் அசல் நோக்கத்தை மதிக்கவும், காங்கிரசின் பாசாங்குத்தனத்தை அம்பலப்படுத்தவும் அவர் அழைப்பு விடுத்தார்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

venugopal s
ஜூன் 28, 2025 16:35

நாயை அடிப்பானேன் , பிறகு அதன் .. சுமப்பானேன் என்ற பழமொழி ஞாபகம் வருகிறது!


ஆரூர் ரங்
ஜூன் 28, 2025 11:08

எதிர்கட்சி எம்பிக்களை மிசாவில் உள்ளே போட்டுவிட்டு தலையாட்டி பொம்மை பார்லிமெண்டில் நிறைவேற்றப்பட்ட அரசியல் சட்டத்திருத்தம் செல்லுபடியாகுமா என்பதை கோர்ட் விளக்க வேண்டும். அரசியல் சட்டத்தின் அடிப்படை வார்த்தைகளை திருத்த அல்லது மாற்ற பார்லிமெண்ட்டுக்கு உரிமையில்லை என்று தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட் நாட்டின் பெயரையே மாற்றிய எமெர்ஜென்சி அரசின் தவறைத் திருத்த வேண்டும்.


Kulandai kannan
ஜூன் 28, 2025 09:30

What Hosabale said is 100 percent correct.


oviya vijay
ஜூன் 28, 2025 08:11

மதசார்பின்மை என்பதே போலி, கிரிமினல் குற்றம். இவர்கள் கருவறுக்க பட வேண்டும்


நிக்கோல்தாம்சன்
ஜூன் 28, 2025 03:47

மதசார்பற்ற என்று கூறி மதம் சார்ந்து இயங்கும் ஆட்சியாளர்களை தமிழ்நாடு நமக்கு அடையாளம் காட்டுகிறது . அப்படியிருக்கையில் இந்த போலி மதசார்பற்ற வார்த்தையை எதற்கு பயன்படுத்தி ஜனநாயகத்தையே கேள்விக்குறியாக்குகிறார்கள் காங்கிரஸ்


Srivilliputtur S Ramesh
ஜூன் 28, 2025 03:10

நமக்கு அருகில் இருக்கும் நாடுகள் இஸ்லாமிய நாடுகள். அவைகள் எல்லாம் மதச் சார்பின்மை கொண்டவையா ? அவைகள் எல்லாம் தங்களை இஸ்லாமிய நாடுகள் என்றே அறிவிக்கின்றன. ஹிந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள இந்த தேசத்தை இந்து நாடு என்று அறிவிப்பதில் என்ன தயக்கம் ?


J.Isaac
ஜூன் 28, 2025 07:12

பெயரை மாற்றி என்ன உபயோகம். அறியாமை மற்றும் அடிப்படை வசதி வாழும் கோடிக்கணக்கான இந்துக்களின் அறிவு, மற்றும் கல்வி கண்களை திறக்க ஆவண செய்யுங்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை