வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இவர்கள் பூமியில் வாழ தகுதி அற்றவர்கள் மரண தண்டனை கொடுக்கப்பட வேண்டும்
பரிதாபாத்: ஹரியானாவில், வீட்டு வாசலில், 10 அடி குழி தோண்டி மருமகள் புதைக்கப்பட்ட சம்பவத்தில், அவரின் மாமனார் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.ஹரியானாவைச் சேர்ந்த அருண் சிங், 28, உத்தர பிரதேசத்தை சேர்ந்த தனு, 24, என்பவருக்கும் கடந்த 2023ல் திருமணம் நடந்தது. சில மாதங்களிலேயே, தனுவின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணைக் கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. சந்தேகம்
கொடுமை தாங்காமல், தனு தாய் வீட்டுக்கு திரும்பி, ஓராண்டுக்கும் மேலாக தங்கியிருந்தார். பின் மீண்டும் கணவர் வீட்டிற்கு அனுப்பப்பட்ட நிலையில், கொடுமைகள் தொடர்ந்தன.இந்நிலையில், ஏப்ரல் 23ல், தனு வீட்டை விட்டு ஓடிவிட்டதாக அவரது பெற்றோரிடம் அருண் குடும்பத்தினர் தெரிவித்தனர். சந்தேகம் அடைந்த தனுவின் சகோதரி ப்ரீத்தி, போலீசில் புகாரளித்தார். இதற்கிடையே, அருண் வீட்டின் முன் கால்வாய் பணிக்காக, 10 அடி குழி தோண்டப்பட்டிருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.குழியை தோண்டி பார்த்ததில் அங்கு தனுவின் உடல் இருந்தது. அவர், கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது உறுதியானது. அருண், அவரது தாய், தந்தை உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.மாமனார் பூப் சிங், மாமியார், மேலும் ஒரு உறவினர் கைது செய்யப்பட்டனர். இந்த சூழலில், தனு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது உடற்கூராய்வு அறிக்கையில் தெரியவந்தது.இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட பூப் சிங்கிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர், தனுவை பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
வரதட்சணை விவகாரத்தில், தனுவின் கொலை ஏற்கனவே திட்டமிடப்பட்டு ஏப்., 21ல் நடந்தது. முன்னதாக, உறவினர் திருமணத்துக்காக அருணின் தாயார் ஏப்., 15ம் தேதியே, உத்தர பிரதேசம் அனுப்பி வைக்கப்பட்டார். துாக்க மருந்து
சம்பவம் நடந்த அன்று, மனைவி தனு மற்றும் தங்கை காஜல் ஆகியோருக்கு உணவில் துாக்க மருந்தை கலந்து அருண் கொடுத்தார்.தனுவின் அறைக்கு சென்ற மாமனார் பூப் சிங், மயக்கத்தில் இருந்த அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்; பின் கொன்றார். அவரும், அருணும் சேர்ந்து வீட்டின் முன் வெட்டப்பட்ட குழியில் தனுவின் உடலை புதைத்தனர். இந்த விவகாரத்தில் தப்பியோடிய அருணை தேடி வருகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இவர்கள் பூமியில் வாழ தகுதி அற்றவர்கள் மரண தண்டனை கொடுக்கப்பட வேண்டும்