உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விநாயகர் சதுர்த்தி விழாவில் பிரதமரிடம் பேசியது என்ன? சந்திரசூட் சொல்வது இதுதான்!

விநாயகர் சதுர்த்தி விழாவில் பிரதமரிடம் பேசியது என்ன? சந்திரசூட் சொல்வது இதுதான்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தனது வீட்டில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றது குறித்து சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் விளக்கம் அளித்துள்ளார். இதுபோன்ற சந்திப்புகளில் நீதித்துறை சார்ந்த விவகாரங்கள் ஆலோசனை செய்யப்படாது எனக்கூறியுள்ளார்.விநாயகர் சதுர்த்தி விழா செப்., 7 ம் தேதி நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. நீதிபதி சந்திரசூட் இல்லத்தில் நடந்த விழாவில் பங்கேற்ற மோடி, வழிபாடு நடத்தினார். மோடியை, சந்திரசூட் குடும்பத்தினர் வரவேற்று அழைத்து சென்றனர். இது குறித்த வீடியோவை மோடி 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அப்போது இதனை அரசியலாக்கிய சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், அரசியல் சட்டத்தின் பாதுகாவலர்களை அரசியல்வாதிகள் எப்படி சந்திக்கலாம் என கேள்வி எழுப்பின. பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=n0qxany7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக டில்லியில் நடந்த லோக்சட்டா கூட்டத்தில் கலந்து கொண்ட சந்திரசூட் கூறியதாவது: இதுபோன்ற சந்திப்புகள் ஏன் நடக்கின்றன என பலர் நினைக்கின்றனர். அப்போது நீதித்துறை சார்ந்த விஷயங்கள் ஆலோசனை செய்யப்படாது. நீதித்துறை மீது அரசியல்வாதிகள் அதிக மரியாதை வைத்துள்ளது நமது அரசியலமைப்பின் முதிர்ச்சியை காட்டுகிறது. இது அனைவருக்கும் தெரியும். நீதித்துறைக்கான நிதியை மாநிலங்கள் ஒதுக்குகின்றன. இது நீதிபதிகளுக்கானது கிடையாது. மாவட்டங்களில் நீதிமன்ற கட்டடங்கள், நீதிபதிகளுக்கான வீடுகள் தேவைப்படுகின்றன. இதற்காக தலைமை நீதிபதிகள், முதல்வர்களை சந்திக்க வேண்டும்.நானும் அலகாபாத் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பணியாற்றி உள்ளேன். புதிதாக நியமிக்கப்படும் தலைமை நீதிபதி, முதல்வரை அவரது வீட்டில் சந்திப்பார். பிறகு, தலைமை நீதிபதியை அவரது வீட்டில் முதல்வர் சந்திப்பார். இந்த சந்திப்பிற்கு என திட்டம் இருக்கும். அப்போது நீதித்துறை சார்ந்து நடக்கும் திட்டங்கள் குறித்து நீதிபதியிடம் முதல்வர் விளக்குவார். இதற்காக முதல்வரை நீதிபதி சந்திக்கக்கூடாதா ? கடிதம் மூலம் தகவல் பரிமாறினால், திட்டங்கள் முடிவடையாது.இந்த சந்திப்பின் போது நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து எந்த முதல்வரும் எந்த கேள்வியையும் கேட்க மாட்டார். அது போன்ற தருணங்களில் நீதித்துறை தொடர்பான கருத்துக்களை அவர்கள் ஒருபோதும் நிகழ்த்தக் கூடாது. சுதந்திர தினம், குடியரசு தினம், திருமணம் அல்லது இரங்கல் நிகழ்ச்சிகளின் போது முதல்வரும், தலைமை நீதிபதியும் சந்தித்து கொள்வார்கள். இதனால் நீதித்துறை பணிகளில் எந்த பாதிப்பும் இருக்காது. ஆனால், இந்த சந்திப்பில் என்ன பேசப்பட்டது என கேட்கின்றனர். இவ்வாறு சந்திரசூட் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

spr
அக் 29, 2024 21:36

பதவியில் இருந்தாலும், அவரவர் இல்லத்தில் அவர் ஒரு தனி மனிதரே அவருக்குரிய உரிமைகளை அனுபவிக்க, அவருக்குரிய தனிப்பட்ட கடமைகளைச் செய்ய அவருக்கு உரிமையுண்டு. அதில் தலையிட்டு கருத்து சொல்ல எவருக்கும் உரிமையில்லை அங்கு வந்தவர் பிரதமரல்ல சந்திரசூட்டின் நண்பர் அவ்வளவே அலுவலகத்தில் நீதிமன்றத்தில் அவர் தன் தனிமனித உரிமைகளை பயன்படுத்தக் கூடாது. அங்கே அவர் நீதிபதி இதில் தவறேதுமில்லை புரிந்து கொள்ளாமல் விமர்சனம் செய்பவர்கள் அறிவிலிகள் உள்நோக்கம் உடையவர்கள்


சோலை பார்த்தி
அக் 29, 2024 06:36

இந்து பண்டிகைக்கு ஒரு இந்து வை தான் அழைக்க வேண்டும். தீவிரவாதிகளையா அழைக்க முடியும். இந்து என்றாலே சில ஜென்மங்களுக்கு அலர்ஜி யா இருக்கு..


kantharvan
அக் 29, 2024 05:56

என்னதான் திறமையாக வேஷம் போட்டாலும் ஒருநாள் வேஷம் கலையும் இது உலக நியதி .


Kasimani Baskaran
அக் 29, 2024 05:43

கொலீஜியம் இந்திய நீதித்துறையின் சாபக்கேடு. ஆப்ரிக்காவில் கூட இந்த அளவுக்கு வழக்குகள் தேங்கியதோ அல்லது வழக்குத்தொடுத்தவனை வாழ்நாள் முழுவதும் வருமானமாக பார்த்தது கிடையாது. ஒவ்வொரு வழக்குக்கும் கோர்ட் வழங்கும் வாய்த்தாக்களுக்கு மத்திய அரசு ஒரு உச்சவரம்பு விதிக்க வேண்டும்.


அப்பாவி
அக் 29, 2024 03:26

இதைப் போய் பெருசு பண்ணாதீங்க.


Ramesh Sargam
அக் 28, 2024 20:53

ஒரு காங்கிரஸ் கட்சி தலைவரோ, அல்லது வேறு எந்த கட்சி தலைவரோ இதுபோல் நீதிபதி இல்லத்தில் ஒரு விழாவில் பங்கேற்றிருந்தால் அங்கே நீதித்துறை சார்ந்த விஷயங்களை பேசி இருப்பார்கள். ஆனால் மோடிஜி அப்படிப்பட்ட சீப் தலைவர் அல்ல. எங்கு எது எப்படி பேசவேண்டும் என்று நன்கு அறிந்தவர் மோடிஜி.


Dharmavaan
அக் 28, 2024 18:51

ஓய்வுக்கு பின் பதவிக்கு அச்சாரம் இருக்கும்


Dharmavaan
அக் 28, 2024 18:42

கொலீஜியும் முரை நீக்கப்பட வேண்டும்


K.n. Dhasarathan
அக் 28, 2024 17:12

Respected Mr. CJI, It is a matter of Serious Consequences when a Person involved in Cases meets Judge at home whatever Party is there. Who believes that Cases discussed or not ? Sir, why a Judge has to give Explanation.? Already a Comment is there, " your Judgements are correct, but awarding sentences are very Reluctant, Hasteful and Worryful." Sorry Sir, you have to Resign immediately voluntarily. No more Judgements to be delivered, particularly Political issues. We pray that a Correct Man, not good man, to come next as CJI.


panneer selvam
அக் 29, 2024 00:04

தசரதன், as per your statement, all the judges will be caged so that no one could see or talk . How many public functions , you could see Judges are attending . Shall we impeach them ? What about good or sad incidents at Judges houses, people should boycott that functions . Do not illogical thoughts on Judges. They are also part of our society . They know their limitations and boundaries.


panneer selvam
அக் 29, 2024 00:04

தசரதன், as per your statement , all the judges will be caged so that no one could see or talk . How many public functions , you could see Judges are attending . Shall we impeach them ? What about good or sad incidents at Judges houses, people should boycott that functions . Do not illogical thoughts on Judges. They are also part of our society . They know their limitations and boundaries.


Dharmavaan
அக் 28, 2024 15:54

இந்த நீதான் பேச்சு எல்லாமே வக்கிரத்தனமானவை பிரிவினைவாதத்தை தூன்டுபவை மத்திய அரசை கேவலப்படுத்துபவை தேச விரோதிகளுக்கு ஆதரவானவன் இம்பீச்மெண்ட் செய்து துரத்தி இருக்க வேண்டும்


புதிய வீடியோ