உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இறந்து போன ராணுவ வீரர்; 16 ஆண்டுக்குப் பிறகு திரும்பி வந்ததால் அதிர்ச்சி

இறந்து போன ராணுவ வீரர்; 16 ஆண்டுக்குப் பிறகு திரும்பி வந்ததால் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: இறந்து போனதாக அறிவிக்கப்பட்ட ராணுவ வீரர் ஒருவர், 16 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பி வந்த நிகழ்வு குடும்பத்தினரிடையே இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹிமாச்சல பிரதேசம் கங்ரா மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சுரீந்தர் சிங். இவர் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன நிலையில், ராணுவம் அவர் உயிரிழந்து விட்டதாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து, அவரது மனைவி விதவை ஓய்வூதிய பணத்தை பெற்று வந்தார். இந்த நிலையில், 16 ஆண்டுகள் கழித்து பதன்கோட் நீதிமன்றத்தில் சுரீந்தர் சிங் ஆஜராகியிருப்பது அதிகாரிகளையும், குடும்பத்தினரையும் அதிர்ச்சியில் உறையச் செய்துள்ளது. மனைவி மீனா குமாரி தொடர்ந்த வரதட்சணை கொடுமை வழக்கிற்கு பயந்தே இத்தனை ஆண்டுகள் தலைமறைவாக இருந்து வந்தது தெரிய வந்தது. ராணுவத்தால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டதால், தன்னுடைய அடையாளத்தை மீட்டெடுக்க விரும்பிய சுரீந்தர் சிங், நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். அப்போது தான் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 2009ம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்தில் பழைய நினைவுகளை இழந்து விட்டதாகக் கூறிய அவர், சமீபத்தில் தான் நினைவு திரும்பியதாகவும் சுரீந்தர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். 2020ம் ஆண்டே தான் பணியாற்றி ராணுவ பிரிவினரிடம் சரணடைந்து விடலாம் என்று முயற்சித்துள்ளார். ஆனால், கோவிட் வைரஸ் தொற்று பரவலால் அது நடக்காமல் போய் விட்டதாகவும் சுரீந்தர் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: மிகவும் மன அழுத்தத்தில் இருந்தேன். என் மனைவி எனது மீதும், குடும்பத்தினர் மீதும் வரதட்சணை கொடுமை புகார் அளித்திருந்தார். என்னுடைய வேலையை அவமதித்ததுடன், மோசமாக நடத்தினார். எனவே, வேறு வழியில்லாமல் இங்கிருந்து சென்று விட்டேன். குஜராத், மஹாராஷ்டிரா மாநிலங்களில் ரயில் நிலையங்கள், குடிசை பகுதிகளில் பல ஆண்டுகள் தங்கியிருந்தேன். வீட்டுக்கு திரும்பி செல்லலாம் என்று ஒவ்வொரு முறையும் தோன்றும் போதெல்லாம், மனைவியின் வரதட்சணை கொடுமை புகார் அதனை தடுத்து விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.இது தொடர்பாக ராணுவ உயரதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட நிலையில், ஜாமினில் வெளியே வந்து காங்ராவில் தன்னுடைய சகோதரனுடன் வசித்து வருகிறார். வரதட்சணை கொடுமை வழக்கை விரைந்து முடிக்க வரும் 23ம் தேதி முதல் தினமும் விசாரணை நடத்த பதன்கோட் மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Karthik
ஏப் 17, 2025 20:15

ஒன்னும் அவசரம் இல்ல நிதானமா மெதுவா ஆர அமர சொல்லுங்க உங்க அமர்வுல. வழக்கு தொடுத்த அந்த அம்மா இன்னொரு 20 - 30 வருஷத்துல வயது முதிர்வு காரணமா இறந்தே போயிடுவாங்க.. அதுக்கப்புறம் உங்க விருப்பம் போல சொல்லுங்க தீர்ப்ப. யாரிடமும் இருந்து எந்த ஒரு எதிர்ப்பும் வராது, எந்த ஒரு ஆட்சேபமும் இருக்காது, உங்க தீர்ப்புக்கு மேல்முறையீடு அப்படிங்கற ஒன்று இருக்கவே இருக்காது - எனவே நீதி நிலைநாட்டப்படுகிறது. காலம் கடந்த நீதி அநீதிக்கு சமம் என்று யாரோ சொன்ன ஞாபகம். ஆனால் மக்களே.. நீதி இங்கு நிலைநாட்டப்படுகிறது, நம்புங்க ப்ளீஸ்..


வாய்மையே வெல்லும்
ஏப் 17, 2025 14:06

மீனா குமாரியை கொண்டு ஜெயிலில் அடைக்கவும். அவளுக்கு கொடுத்த மாதாந்திர பென்ஷன் பணத்தை திருப்பி அரசு கஜானாவிற்கு திருப்பி கொடுக்கவேண்டும் அதை கொடுக்காவிட்டால் சாகும் வரை ஜெயிலில் இருக்கவேண்டி உள்ள அவசர உத்தரவை கொடுத்தால்தான் பெண்கள் சுதந்திரத்தை அத்துமீறமாட்டார்கள்.


subramanian
ஏப் 17, 2025 10:48

பெண்கள் இந்த சட்டத்தை துஷ்ப்ரயோகம் செய்கிறார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை