உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முடிவுக்கு வருகிறது முட்டுக்கட்டை அரசியலமைப்பு குறித்து விவாதம்

முடிவுக்கு வருகிறது முட்டுக்கட்டை அரசியலமைப்பு குறித்து விவாதம்

புதுடில்லி, பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர், இதுவரை எவ்வித விவாதங்களும் இல்லாமல் அமளியால் முடக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், அரசியலமைப்பு ஏற்கப்பட்டதன் 75வது ஆண்டையொட்டி, இரு சபைகளிலும் விவாதிக்க, இரு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளன.பார்லிமென்ட குளிர்கால கூட்டத்தொடர், கடந்த நவ., 25ல் துவங்கியது. அதானி விவகாரம், மணிப்பூர் வன்முறை தொடர்பாக விவாதிக்க, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தியதால் ஏற்பட்ட அமளியால், இரு சபைகளும் முடங்கின.அரசியலமைப்பு ஏற்கப்பட்டதன் 75வது ஆண்டையொட்டி, கடந்த நவ., 26ல் நடந்த கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசினார். இந்த நிகழ்ச்சி மட்டுமே இதுவரை நடந்துள்ளது.பார்லிமென்ட் முட்டுக்கட்டைக்கு முடிவு காண்பது தொடர்பாக, அரசியல் கட்சிகளின் சபைத் தலைவர்களுக்கு, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று அழைப்பு விடுத்திருந்தார். இந்தக் கூட்டத்தில், பார்லிமென்டை சுமுகமாக நடத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.அரசியலமைப்பு ஏற்கப்பட்டதன் 75வது ஆண்டையொட்டி, இரு சபைகளிலும் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின; இது ஏற்கப்பட்டது.இதன்படி, லோக்சபாவில், 13 மற்றும் 14ம் தேதிகளிலும், ராஜ்யசபாவில், 16 மற்றும் 17ம் தேதிகளிலும் விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதை பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று தெரிவித்தார். இதையடுத்து, நீண்ட முடக்கங்களுக்குப் பின், பார்லிமென்டில் விவாதம் நடக்க உள்ளது.

பெயர் பலகைகள்

லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்களின் இருக்கையில், அவர்களுடைய பெயர்ப் பலகைகளை வைக்கும் நடவடிக்கை துவங்கியுள்ளது. இதன் வாயிலாக, எம்.பி.,க்களை சுலபமாக அடையாளம் காண முடியும். ஒவ்வொரு எம்.பி.,க்கும், அவர்களுடைய இருக்கைக்கு ஏற்ப, ஒரு குறிப்பிட்ட எண் வழங்கப்படும். அந்த எண்ணும், இந்த பெயர்ப் பலகையில் இடம்பெற உள்ளது.

நேற்றும் அலுவல்கள் முடக்கம்

- நமது டில்லி நிருபர் - லோக்சபாவில், நேற்று காலை சபை கூடியதும் சபாநாயகர் ஓம் பிர்லா, கேள்வி நேர அலுவலை எடுத்தார். ஆனால், சபையை ஒத்திவைத்துவிட்டு அதானி லஞ்ச விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று கோரி, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.மணிப்பூர் கலவரம் குறித்து தி.மு.க., உள்ளிட்ட சில கட்சிகள், ஏற்கனவே தாங்கள் அளித்திருந்த ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்களை வலியுறுத்தி குரல் எழுப்பினர்.இவை எதையும் ஏற்க முடியாது என்று சபாநாயகர் கைவிரித்து விட்டதால் அமளி அதிகமானது. இதனால் சபை ஓரிரு நிமிடங்களிலேயே ஒத்திவைக்கப்பட்டது. இந்தியா - சீனா இடையிலான உறவு குறித்தும், வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல் குறித்தும், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அறிக்கை தாக்கல் செய்வதாக இருந்தது.மிகுந்த எதிர்பார்ப்பு சபையில் இருந்தும்கூட, அமளி காரணமாக சபை நாள் முழுதும் ஒத்தி வைக்கப்பட்டதால் அந்த அறிக்கை தாக்கல் நடைபெறாமலே போய்விட்டது. ராஜ்யசபாவில், காலையில் சபை அலுவல்கள் துவங்கியதுமே எதிர்க்கட்சிகள் அளித்திருந்த 18 நோட்டீஸ்களையும் ஏற்க முடியாது என்று, சபை தலைவர் ஜகதீப் தன்கர் அறிவித்துவிடவே அமளி துவங்கியது. சபை அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு அதானி லஞ்ச விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சியினர் கோரினர். இதையடுத்து மதியம் வரை சபை ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் கூடியபோதும் அமளி ஆரம்பமாகவே மறுபடியும் நாள்முழுதும் ஒத்திவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Kalaiselvan Periasamy
டிச 03, 2024 06:41

பெரும்பாலான இந்திய அரசியல் கட்சிகள் தேவையற்ற ஒன்று . இவர்கள் மக்களுக்காக போராடுகிறேன் என்று கூறி கொண்டு தங்கள் சுயநலனில் தான் பெரும் அக்கறை காட்டுகின்றனர் . முக்கியமாக காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிகள். ஏத்தி கட்சியாக செயல் பட திறன் அற்றவர்கள். வயது முதிர்த்தவர்களாகவும் இருந்தாலும் சரி வயது குறைந்தவர்களும் பொறுப்பற்ற முறையிலேயே செயல் படுகின்றனர். இந்த தரமற்றவர்களுக்கு ஒட்டு போட்ட மக்களும் தென்படுகின்றனர். இந்தியா எவளவு முன்னேறினாலும் இந்த தரமற்றவர்களால் இன்னமும் குடிசை நாடாகவே உள்ளது. இந்தியர்களே உங்கள் நாட்டை மிளிர செய்ய தரமற்ற அரசியல்வாதிகளை ஜெயிக்க வைக்காதீர் . நன்றி .


Ramanujam Veraswamy
டிச 03, 2024 05:50

Opposition rais 2or 3 issues and demand discussion but Speaker does not permit. After trouble time, the House get adjourned to meet the next day. This continues till slated last day. But, during the last few days of the Session, Govt bills are get approved in the House, In the midst od din thanks to the strength of the ruling party with its allies. This, we witness session after session and more are less has come to stay. Shame?


Sathyanarayanan Sathyasekaren
டிச 03, 2024 05:14

வங்கதேசத்தில் பயங்கரவாதத்தால் துயரங்களை அனுபவிக்கும் ஹிந்துக்களை பற்றி இந்த கான் காங்கிரஸ் மட்டும் திருட்டு திராவிட கட்சிக்கும், முஸ்லிம்களின் அடிமையான சமாஜவாதி கட்சிக்கும் ஒரு அக்கறையும் இல்லை. சொரணை அற்ற ஹிந்துக்கள் இன்னமும் இந்த கட்சிகளுக்கு வோட்டை போட்டுகொண்டு இருக்கின்றனர்.


தமிழன்
டிச 03, 2024 05:11

இரண்டு தேசிய கட்சிகளும் நாட்டையும் கொள்ளையடித்து மக்களின் வரிப் பணமும் வீணாவது மட்டுமே வாடிக்கையாகிவிட்டது இரண்டு மாநில கட்சிகளும் மாறி மாறி தமிழ்நாட்டை வித்து திண்ணுட்டானுகள் மொத்தத்தில் நோட்டாதான் பெஸ்ட் சாய்ஸ்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை