உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கூட்ட நெரிசலில் பக்தர்கள் உயிரிழப்பு எதிரொலி: திருப்பதி டிஎஸ்பி சஸ்பெண்ட்: அதிகாரிகள் மாற்றம்

கூட்ட நெரிசலில் பக்தர்கள் உயிரிழப்பு எதிரொலி: திருப்பதி டிஎஸ்பி சஸ்பெண்ட்: அதிகாரிகள் மாற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பதி: திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்த நிலையில், டிஎஸ்பி உள்ளிட்ட இரண்டு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். மேலும் இரண்டு பேர் டிரான்ஸ்பர் செய்யப்பட்டனர்.திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு தரிசனத்திற்கான இலவச டோக்கன் வாங்க பக்தர்கள் நின்றிருந்த கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. இதில் ஆறு பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர். அவர்களின் குடும்பத்திற்கு ஆந்திர அரசு நிவாரணம் அறிவித்து உள்ளது.இந்நிலையில் கூட்ட நெரிசலை பார்வையிட்ட முதல்வர் சந்திரபாபு நாயுடு, திருப்பதி டிஎஸ்பி ரமண குமார் மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் எஸ்.வி.பால் பண்ணை இயக்குநர் ஹரிநாத ரெட்டி ஆகியோர் சஸ்பெண்ட் செய்வதாக அறிவித்தார். மேலும், திருப்பதி எஸ்பி எல் .சுப்பராயுடு, இணை செயல் அதிகாரி எம்.கவுதமி, திருப்பதி தேவஸ்தானத்தின் தலைமை விஜிலென்ஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஸ்ரீதர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தவும் உத்தரவிட்டு உள்ளார். இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்தும் ஆறுதல் கூறினார்.பிறகு நிருபர்களிடம் சந்திரபாபு நாயுடு கூறியதாவது: கோவில் ஊழியர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன், கோவிலின் புனிதம் கெட்டுவிடாத அளவுக்கு பணியாற்ற வேண்டும். கூட்ட நெரிசல் எப்படி நேரிட்டது என தேவஸ்தான அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Ramesh Sargam
ஜன 10, 2025 13:22

சஸ்பெண்ட், மாற்றம் இதெல்லாம் கண்துடைப்பு செயல். தவறுக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.


அப்பாவி
ஜன 10, 2025 07:27

ஓசில எதைக் கொடுத்தாலும் வாங்குற கும்பலை கட்டுப்படுத்த அந்த ஏழு மலையானால் கூட முடியாது.


முருகன்
ஜன 10, 2025 11:32

தமிழகத்தில் நடந்தால் அரசை குறை கூறுவது வேறு மாநிலங்களில் நடந்தால் மக்களை குறை கூறுவது ஏன் தவறு யார் செய்து இருந்தாலும் தவறு தான்


Kasimani Baskaran
ஜன 10, 2025 07:15

வரிசை பிடித்து நிற்கவேண்டிய இடத்தில முண்டியடித்து முன்னேறினால் ஆபத்து என்பது கூடவா பொதுமக்களுக்கு தெரியாது.


Nandakumar Naidu.
ஜன 10, 2025 04:17

ஆட்டு மந்தைகளை விட மோசமான முறையில் மக்கள் நடந்து கொண்டால் போலீஸ் அதிகாரிகள் என்ன செய்வார்கள்? மக்கள் பொறுப்போடு நிதானமாக வரிசையில் சென்றிருந்தால் இந்த சோக நிகழ்ச்சி நடந்திருக்காது. மக்கள் தான் திருந்த வேண்டும்.


Sk Sk
ஜன 10, 2025 00:33

சரியான அரை வேக்காடு அரசாங்கமாக இருக்கும் போல. இதுவே எங்க தமிழ் நாடா இருந்தா ஒரு பய கூட சஸ்பெண்ட் ஆகா மாட்டான். முடிஞ்சா பதவி உயர்வு கொடுப்போம். கள்ள சாராய பலி, விஷ சாராய பலி, குடிநீரில் மனித கழிவு, அண்ணா பல்கலை சம்பவம், மேலும் பலப்பல .. எதுக்குமே ஒரு ஆக்ஷன் இன்று வரை கிடையாது.


முருகன்
ஜன 09, 2025 23:00

அப்படியே இவரையும் மாற்ற வேண்டும்


புதிய வீடியோ