| ADDED : ஜன 22, 2024 09:48 PM
மும்பை: மஹாராஷ்டிராவில் எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கத்தை ஏற்க மறுத்த சபாநாயகர் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மஹாராஷ்டிராவில் சிவசேனா கட்சியின் முதல்வராக உத்தவ் தாக்கரே இருந்த போது, 2022ம் ஆண்டு ஏக்நாத் ஷிண்டே, கட்சியை உடைத்து தன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை திரட்டி பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து முதல்வராக பொறுப்பேற்றார்.ஏக்நாத் ஷிண்டே உட்பட அவருடன் சென்ற ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்ய கோரி, சபாநாயகர் ராகுல் நர்வேகரிடம், உத்தவ் தாக்கரே தரப்பு மனு அளித்தது. .இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில், உத்தவ் தாக்கரே தரப்பு தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜன.10-ம் தேதிக்குள் இறுதி முடிவெடுக்க சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்தது.இதையடுத்து கடந்த 10-ம் தேதி ராகுல் நர்வேகர் வெளியிட்ட அறிவிப்பில் , ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி தான் உண்மையான சிவசேனா என சபாநாயகர் அறிவித்தார். சபாநாயகர் அறிவிப்பை ஏற்க மறுத்து உத்தவ் தாக்கரே தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனு செய்து உள்ளது. இம்மனு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன பெஞ்ச் கடந்த 19-ம் தேதி பதிய உத்தரவிட்டது. இதையடுத்து இன்று நடந்த விசாரணையில், மஹராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷண்டே, சபாநாயகர் ராகுல் நர்வேகர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி பதில் மனு தாக்கல் செயய உத்தரவிட்டனர்.