உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சட்டங்களுக்கு அடிபணிய மறுக்கும் எக்ஸ்; ஐகோர்ட் உத்தரவை எதிர்க்க முடிவு

சட்டங்களுக்கு அடிபணிய மறுக்கும் எக்ஸ்; ஐகோர்ட் உத்தரவை எதிர்க்க முடிவு

பெங்களூரு: கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவு பேச்சுரிமைக்கு அச்சுறுத்தலாக இருப்பதால், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக 'எக்ஸ்' சமூக வலைதள நிர்வாகம் அறிவித்துள்ளது. 'எக்ஸ்' சமூக வலைதள பக்கத்தில் இருந்து குறிப்பிட்ட சில கணக்குகள் மற்றும் பதிவுகளை முடக்குமாறு அந்நிறுவனத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்திஇருந்தது. சமூக வலைதளம் இதனை எதிர்த்து 'எக்ஸ்' சமூக வலைதளம் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 'கண்காணிப்பு இல்லாமல் சமூக வலைதளங்கள் நம் நாட்டிற்குள் இயங்குவதை அனுமதிக்க முடியாது' எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

இது தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு:

நம் நாட்டுக்குள் சமூக வலைதள நிறுவனங்கள் முறைப்படுத்தப்படாமல் இயங்குவதற்கு அனுமதி தர முடியாது. நம் நாட்டில் சேவையை தொடர விரும்பும் சமூக வலைதள நிறுவனங்கள் இதனை தெரிந்து வைத்திருப்பது அவசியம். இந்தியாவின் சட்டத்திட்டங்களை, 'எக்ஸ்' சமூக வலைதளம் மதிக்க வேண்டும். பேச்சுரிமைக்கான அரசியலமைப்பு பாதுகாப்பு என்பது இந்திய குடிமக்களுக்கு மட்டும் தான். வெளிநாட்டினருக்கு அதற்கான, 19வது பிரிவு பொருந்தாது. அமெரிக்க சட்டங்களை மதித்து நடக்கும், 'எக்ஸ்' சமூக வலைதளம் இந்திய சட்டங்களுக்கு இணங்கி நடக்க முடியாதா? சமூக ஊடகங்கள் மூலம் எழும் அச்சுறுத்தல்கள் ஒடுக்கப்பட வேண்டும். அதை ஒழுங்குப்படுத்துவதும் அவசியம்.

எச்சரிக்கை

தொழில்நுட்பம் வளரும்போது கட்டுப்பாடுகளும் தேவை. எனவே, இந்திய மண்ணில் எந்தவொரு சமூக வலைதளத்திற்கும் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க முடியாது. இந்திய சந்தைகளை விளையாட்டு மைதானமாக கருதுவதை ஏற்க முடியாது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டிருந்தது. இந்நி லையில், 'கர்நாடக உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மிகுந்த கவலை அளிக்கிறது' என, 'எக்ஸ்' சமூக வலைதள நிர்வாகம் தெரிவித்துள்ளது. 'ஏராளமான போலீஸ் அதிகாரிகள் தனிச்சையாக எச்சரிக்கை நோட்டீஸ் வழங்குவதற்கு , உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு வழி வகுக்கும். தவிர பேச்சுரிமை சுதந்திரத்திற்கும் அச்சுறுத்தலாக அமையும். எனவே, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளோம்' என, 'எக்ஸ்' சமூக வலைதள நிர் வாகம் கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

சாமானியன்
செப் 30, 2025 11:32

X, Face Book, Whatsup, Instagram, YouTube இவைகளெல்லாம் வருவதற்கு முன்னர் நாடு அமைதியாக இருந்தது .மேற்கண்டவைகள் இருப்பதால் B P மாத்திரை ஜோராக விற்பனை ஆகிறது. கருத்து சுதந்தரமாவது கத்தரிக்காயாவது? YouTube ஆல் குருகுலகல்வி அழிந்தது. BT காய்கறிகளால் மலட்டுத் தன்மை அதிகம் ஆனது. சந்தேகம் குடும்பத்தில்.1990 முன்பு இவ்வளவு மோசமாக இல்லை. இந்த வலைதளங்கட்கு கட்டுப்பாடு அவசியமே. சீனாவில் ஈமெயிலே கிடையாது. இஸ்லாம் மதம் தடை செய்யப்பட்ட மதம்.


V Venkatachalam
செப் 30, 2025 10:48

எக்ஸ் தளத்தை நாட்டுப்பற்றுள்ளவர்கள் பயன்படுத்துவதை விட நாட்டை கூறு போட வேண்டும் என்பவர்களும் நாட்டின் இறையாண்மையை அவதூறு செய்பவன்களும் ஜார்ஸ் சோரோஸ்க்கு கூலி வேலை பார்ப்பவன்களும் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம் போடுபவன்களும் அதிகமாக உபயோகப்படுத்துகிறான்கள். மனுவை தள்ளுபடி செய்தது ஒரு தேச சேவை. இந்திய சட்டங்களை சுட்டிக்காட்டிய பின்னரும் அதை மதிக்க மாட்டேன் என்று சொல்வது அடாவடித்தனம். அப்படித்தான் செய்வோம் என்றால் எக்ஸ் தளத்தை இந்தியாவில் மூட வேண்டியது கட்டாயம்.


rama adhavan
செப் 30, 2025 07:23

இந்த நிறுவனத்தின் குப்பை சட்டங்கள் நமக்கு எதற்கு? இதனை உடன் மூடுங்கள். நாட்டை விட்டு ஓட்டுங்கள்.


GMM
செப் 30, 2025 07:18

சமூக வலைதளங்களில் அரசின் கண்காணிப்பு, கட்டுப்பாடு, தணிக்கை அவசியம். பயனர்கள் விவரம் அரசுக்கு தெரியாது. தவறாக பயன்படுத்த எக்ஸ் வருவாய் பாதிக்காது. நாட்டு மக்கள் பாதிக்க படுவர். தளத்தை பயன் படுத்தும் நபர் பெயர், வயது, முகவரி ஒவ்வொரு தளத்தின் கீழ் இருப்பதை முதலில் நிறுவனம் உறுதி செய்ய வேண்டும். இமெயில், வாட்ஸ்அப் போன்ற அனைத்திலும் இதனை அரசு கட்டாயம் ஆக்க வேண்டும்.


m.arunachalam
செப் 30, 2025 07:09

உணவு, உடை மற்றும் இருப்பிடம் அடிப்படை தேவை. இவை தவிர்த்த மற்ற விஷயங்கள் அவ்வளவு முக்கியமானவை அல்ல. இந்த X Y Z , நம்மை அடிமைகளாக ஆக்குகின்றன. பின்னர் நம்மை அதிகாரம் செய்கின்றன. தெளிதல் நலம் .


சிட்டுக்குருவி
செப் 30, 2025 06:29

எந்த ஒரு பேச்சும் தனிமனித உரிமை,மக்களிடையே ஒற்றுமை ,அமைதி,நாட்டின் இறையாண்மை ,நாட்டுமக்களிடையே ஒற்றுமை இவைகளை பாதிக்காமல் இருப்பதுதான் பேச்சுரிமை . இந்த பேச்சுரிமை சட்டம் நாட்டிற்கு நாடு வேறுபடலாம் அல்லது அவர்கள் சட்டத்தை தவறாக ப்புரிந்திருக்கலாம் .எக்ஸ் போன்றவளைதளங்கள் அந்தந்த நாட்டிற்கு ஏற்றார் போல் சட்டங்களை வடிவமைக்கவேண்டும் .அமெரிக்காவின் சட்டங்கள் எல்லா நாட்டிற்கும் பொருந்தாது .


சுந்தர்
செப் 30, 2025 04:06

எக்ஸ் பண்றது X.


Nanda Kumar
செப் 30, 2025 03:42

X boss is another controversial man. Nobody is above our country's law.


Nathan
செப் 30, 2025 03:32

நீதிமன்ற உத்தரவை X தளம் மதித்து நடக்க வேண்டும் இல்லை என்றால் இந்தியர்கள் உங்கள் தளத்தை புறக்கணித்து விடுவார்கள். இங்கு நீதிமன்ற உத்தரவு மதித்து நடந்து கொள்ள வேண்டியது அவசியம்


முக்கிய வீடியோ