உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / யு.ஏ.இ., இந்திய துாதராக தீபக் மிட்டல் நியமனம்

யு.ஏ.இ., இந்திய துாதராக தீபக் மிட்டல் நியமனம்

புதுடில்லி; யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சின் இந்திய துாதராக மூத்த ஐ.எப்.எஸ்., அதிகாரி தீபக் மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் அலுவலகத்தில் கூடுதல் செயலராக பணியாற்றி வரும் ஐ.எப்.எஸ்., அதிகாரி தீபக் மிட்டலை, மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் புதிய இந்திய துாதராக வெளியுறவு அமைச்சகம் நேற்று நியமித்துள்ளது. கடந்த 2021 முதல் இந்த பதவியில் இருந்த சஞ்சய் சுதீருக்கு பதிலாக மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளார். விரைவில் இந்த பொறுப்பை மிட்டல் ஏற்பார் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே மற்றொரு மேற்காசிய நாடான கத்தாருக்கான இந்திய துாதராக, 2020 - 2022 வரை மிட்டல் பணியாற்றினார். கடந்த 2021ல் ஆப்கானிஸ்தான் ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றிய சில வாரங்களுக்கு பின் அந்நாட்டுடனான முதல் துாதரக உறவை, இவர் பதவியில் இருந்து போது தான் இந்தியா பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி