உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுல் மீதான அவதுாறு வழக்கு: சுப்ரீம் கோர்ட் நிறுத்தி வைப்பு

ராகுல் மீதான அவதுாறு வழக்கு: சுப்ரீம் கோர்ட் நிறுத்தி வைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜ.,வுக்கு எதிராக அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் மீதான குற்றவியல் நடவடிக்கைகளை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.காங்கிரஸ் தலைவர் ராகுல், தேர்தல் பிரசாரத்தில், அமித் ஷாவை கொலை குற்றவாளி என்று அழைத்ததாகக் கூறி, 2018ம் ஆண்டு நவீன் ஜா அவதூறு வழக்கு தொடர்ந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zmlafzf7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஜார்கண்ட் ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில், ஜார்க்கண்ட் ஐகோர்ட்டில் நடைபெறும் விசாரணையை தடை செய்ய வேண்டும் என்றும் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் ராகுல் தரப்பில் சுப்ரீம் கோரட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த அவதுாறு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.ராகுல் தாக்கல் செய்த சிறப்பு விடுவிப்பு மனுவை நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.ராகுல் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, பாதிக்கப்பட்டவர் மட்டுமே குற்றவியல் அவதூறு புகாரை தாக்கல் செய்ய முடியும் என்றும், புகாரை ஒரு பிரதிநிதி தரப்பினரால் தாக்கல் செய்ய முடியாது என்றும் பல தீர்ப்புகள் காட்டியுள்ளன என்று வாதிட்டார்.இதனை தொடர்ந்து சிங்விக்கு பதிலளிக்க புகார்தாரரான நவீன் ஜா மற்றும் ஜார்க்கண்ட் அரசுக்கு சுப்ரீம் கோர்ட், நான்கு வார கால அவகாசம் வழங்கியது. மேலும் உத்தரவு வரும் வரை ராகுலுக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

தாமரை மலர்கிறது
ஜன 20, 2025 21:08

சுப்ரிம் கோர்ட் வரம்புமீறி செயல்படுகிறது. பாராளுமன்றம் கடிவாளம் போடுவது நல்லது.


Ramesh Sargam
ஜன 20, 2025 20:30

ஆம் நிறுத்திவைப்பு . ஏன் என்றால் அதைவிட முக்கியமான வழக்கு, ஆம், ஒரு சில்லறை திருடன், அதாவது ஒரு pickpocket கொள்ளையடித்தவன் வழக்கு விசாரிக்கப்படவேண்டும்.


Karthik
ஜன 20, 2025 20:18

நீதிக்கு எப்போதோ சமாதி கட்டிருச்சு இப்போதிருக்கும் அநீதி துறை.


Gopalan
ஜன 20, 2025 19:56

உச்ச நீதிமன்றம் பல ஓட்டைகள் ஏற்படுத்துகின்றன என்று என்னவா அல்லது ஓட்டைகள் அடைக்கிறது என்று என்னவா ?? கடவுளுக்கு தான் வெளிச்சம்.


Barakat Ali
ஜன 20, 2025 19:42

நாமளே கேசு போட்டா அதோட எபெக்ட்டே தனி ன்னு அமித்து சேட்டுக்கு தெரியாதா ????


Dharmavaan
ஜன 20, 2025 19:35

மூல காரணம் கொலீஜியும் எதிர் கட்சி கைக்கூலி அதை நீக்கினால் மட்டுமே நீதி கிடைக்கும் மோடி துணியவேண்டும்


Dharmavaan
ஜன 20, 2025 19:33

கேவலமான நீதித்துறை


Rajan A
ஜன 20, 2025 19:04

Time waste. Instead let them focus on criminal cases. Let this joker outside so that BJP can be safe


Nandakumar Naidu.
ஜன 20, 2025 17:38

இந்திய நாட்டின் உச்சநீதிமன்றமா? தேச விரோத, சமூக விரோத, ஹிந்து விரோத போலி காந்தி குடும்பத்தின் கொத்தடிமை நீதிமன்றமா? தேச மற்றும், ஹிந்து விரோதிக களை காப்பாற்றும் நீதிமன்றமா? வெட்கக்கேடு.


Rajasekar Jayaraman
ஜன 20, 2025 17:36

பயப்படுகிறதா உச்சாநீதிமன்றம் அதென்ன திமுக அமைச்சர்கள் தண்டனை நிறுத்தி வைப்பு எதிர்கட்சி தலைவர் தண்டனை நிறுத்தி வைப்பு அப்போ பொது மக்ககளை மட்டும்தான் தண்டிப்பார்களா.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை