உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அவதூறு வழக்கு: ஜூலை 2ம் தேதி ராகுல் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

அவதூறு வழக்கு: ஜூலை 2ம் தேதி ராகுல் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து ஆட்சேபத்திற்குரிய கருத்துகளை பேசியதாக கூறி, தொடரப்பட்ட வழக்கில், ஜூலை 2ம் தேதி காங்கிரஸ் எம்.பி., ராகுல் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு நடந்த பொதுக்கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. ராகுல் ஆட்சேபத்திற்குரிய கருத்துகளை தெரிவித்தார். பா.ஜ., வைச் சேர்ந்த விஜய் மிஸ்ரா என்பவர் ராகுலுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை சுல்தான்பூரில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.கடந்த பிப்ரவரி 20ம் தேதி, ராகுல் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். அப்போது அவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இந்த வழக்கு இன்று(ஜூன் 26) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ராகுல் வரும் ஜூலை 2ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Rajasekar Jayaraman
ஜூன் 26, 2024 20:57

அவர் இது போலவே பேசிக் கொண்டிருப்பார். சுப்ரீம் கோர்ட் தண்டனைக்கு தடை விதிக்கும் சட்டம் மாற்றப்பட வேண்டும்.


தாமரை மலர்கிறது
ஜூன் 26, 2024 19:56

கண்டிப்பாக ரெண்டுவருடம் ஜெயில் தண்டனை உறுதி. உடனடியாக எம்பி பதவி நீக்கப்படும். பப்புவின் டெல்லி வீடு பறிபோகும்.


Anand
ஜூன் 26, 2024 17:41

இந்நாட்டை விட்டு துரத்துங்கள் யுவர் ஹானர்.


Lion Drsekar
ஜூன் 26, 2024 16:42

அன்றைய தினம் நாடுமுழுவதும் போராட்டம், இவர் செல்லும் இடம் எல்லாம் போக்குவரத்து நிறுத்தம் , கூட்டங்கள் , கட்சிகள், மற்ற சக்திகள் கூட்டம் இவைகளை பார்த்து நீதி பயப்படவேண்டும் இதுதான் இன்றைய அரசியல் , இதில் எந்த கட்சியாக இருந்தாலும் சரி. ஏதாவது ஒரு நீதியரசர் கண்டித்தால் திருந்தும் . ஒரு உதாரணம் , அரசியல் கட்சிகள் போஸ்டர் அடிப்பார்கள் இன்று காது குத்துதல், திருமணம் ,என்று எல்லா இடங்களிலும் அரசியல் காட்சிகளை மிஞ்சிவிட்டது . அதே போல் எதிர்காலத்தில் தனி மனிதருக்கு நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பினால் இவர்களும் பிரியாணி குவார்ட்டர் கொடுத்து கூட்டத்தை அழைத்து செல்லும் காலம் கண்டிப்பாக வரும் . இதுதான் நாம் சுதந்திரம் பெற்றதன் பயன். வந்தே மாதரம்


Ashanmugam
ஜூன் 26, 2024 16:29

இதே போல் ராகுல்காந்தி வெளி நாட்டு அரங்கில் பாரத பிரதமரை மிகவும் இழிவாகவும், கேவலமாகவும் "திருடன்" என பறைசாட்டினார். இந்த வழக்கு இந்நாள் வரை என்ன ஆனது. பிரதமர் இன்று நாடாளுமன்றத்தில் நேருக்கு நேராக ஒருவரை ஒருவர் உள்ளது.


Raa
ஜூன் 26, 2024 16:17

அரசியலமைப்பு சட்ட புத்தகம் இவ்வளவு சின்னதா இருக்கும் என்று பார்த்துதான் தெரிஞ்சுகிட்டேன்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை