உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி; பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டம்

பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி; பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு விரைவில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சூழ்நிலையில், முப்படை தளபதிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் உடன் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை நடத்தினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=azvoi1y5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து ராஜ்நாத் சிங்கிடம் ராணுவ தளபதி உபேந்திர திவேதி, கடற்படை தளபதி தினேஷ் திரிபாதி ஆகியோர் விளக்கம் அளித்தனர்.பின்னர் ராஜ்நாத் சிங் கூறியதாவது: பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு விரைவில் தக்க பதிலடி கொடுக்கப்படும். ஒரு குறிப்பிட்ட மதத்தை குறிவைத்து, பயங்கரவாதிகள் ஒரு கோழைத்தனமான செயலைச் செய்தனர். இதில் நாங்கள் பல அப்பாவி உயிர்களை இழந்தோம். அரசாங்கம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று நாட்டு மக்களுக்கு நான் உறுதியளிக்க விரும்புகிறேன். இந்தச் செயலைச் செய்தவர்களை மட்டுமல்ல, திரைக்குப் பின்னால் உள்ளவர்களையும் நாங்கள் கண்டுபிடிப்போம். குற்றவாளிகளை தப்பிக்க விடமாட்டோம். அவர்களுக்கு உரிய நேரத்தில் பதிலடி கொடுக்கப்படும் என நாட்டிற்கு உறுதியளிக்க விரும்புகிறேன். இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

pmsamy
ஏப் 24, 2025 07:23

எவ்வளவு நாளைக்கு பதிலடி மட்டுமே கொடுத்துக்கிட்டு இருப்பீங்க ஒரேடியா பயங்கரவாதத்தை ஒழிக்க அருகதை இல்லையா


சிந்தனை
ஏப் 23, 2025 21:23

பதிலடி கொடுத்து என்ன பயன்... ஹிந்துக்களுடன் எங்களால் சேர்ந்து வாழ முடியாது என்று கூறியதால் முஸ்லிம்களுக்கு தனி நாடு கொடுத்தாகி விட்டது 1947 இல்.... இனி அவர்கள் அங்கே இருப்பதுதான் நமக்கும் பாதுகாப்பு... அவர்களுக்கும் பாதுகாப்பு...


அப்பாவி
ஏப் 23, 2025 19:55

ஜோசப் விஜய் என்று மானஸ்தனை இருந்தாரே எங்கே அவர் பேச்சையே காணோம்


Saravan Ravichandran
ஏப் 23, 2025 18:47

இன்னுமா இவங்கள நம்பறது?


Srprd
ஏப் 23, 2025 18:12

Was it an intelligence failure due to complacency?


எம். ஆர்
ஏப் 23, 2025 17:51

இந்த ரெடிமேடு பதிலை எதிர்பார்த்திருந்தேன் இனியாவது நாங்கள் காஷ்மீரை சொர்க்கமாக மாற்றி விட்டோம் என்று பெருமை பேசி திறியாமல் கவனம் செலுத்தி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் இது ஒட்டுமொத்த உளவுத்துறையின் ஓட்டையைத்தான் காட்டுகிறது.


vivek
ஏப் 23, 2025 18:24

200 ரூபாய் வாங்கும் இந்த கொதாடிமைக்கு லொள்ளு அதிகம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை