வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சிறப்பு. இதேபோன்று ராணுவத்தில் பணிபுரியும் வீரர்கள் முதல், ராணுவ அலுவலகங்களில் பணிபுரியும் மற்ற ஊழியர்கள் வரை எல்லோருக்கும் நல்ல சம்பளம் மற்றும் வசதிகள் செய்துகொடுக்கவேண்டும்.
புதுடில்லி: இந்திய ராணுவத்திற்கு ரூ.659 கோடியில் அதிநவீன உபகரணங்கள் வாங்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது.உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த எம்கேயு லிமிடெட் மற்றும் மெட்பிட் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய ஒருங்கிணைந்த நிறுவனத்துடன் இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. சுமார் ரூ.659.47 மதிப்பில் போடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்திய ராணுவத்திற்கு, இலக்குகளை இரவு நேரத்திலும் துல்லியமாக பார்க்க உதவும் கருவி உள்பட அதிநவீன கருவிகள் வாங்கப்படுகிறது. இந்தக் கருவிகள் இந்திய ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் எஸ்ஐஜி 716 துப்பாக்கிகளின் முழு தூரத்தையும் பயன்படுத்த உதவும். குறிப்பாக, நட்சத்திர ஒளியில் கூட, 500 மீட்டர் தூரம் வரையிலான இலக்குகளைத் துல்லியமாகத் தாக்க உதவுகிறது. தற்போது, பயன்பாட்டில் உள்ள கருவிகளை விட இது மேம்படுத்தப்பட்ட அதிநவீன கருவிகளாகும். இந்த முயற்சி உள்நாட்டு பாதுகாப்புத் துறை திறன்களை மேம்படுத்துவதோடு, உற்பத்தி மற்றும் மூலப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள சிறுகுறு நடுத்தர நிறுவனங்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பு. இதேபோன்று ராணுவத்தில் பணிபுரியும் வீரர்கள் முதல், ராணுவ அலுவலகங்களில் பணிபுரியும் மற்ற ஊழியர்கள் வரை எல்லோருக்கும் நல்ல சம்பளம் மற்றும் வசதிகள் செய்துகொடுக்கவேண்டும்.