உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போராட்டம் நடத்தும் மக்களை குற்றவாளிகளைப் போல நடத்துவதா? ராகுல் ஆவேசம்

போராட்டம் நடத்தும் மக்களை குற்றவாளிகளைப் போல நடத்துவதா? ராகுல் ஆவேசம்

புதுடில்லி: டில்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்திய பொதுமக்களை கைது செய்த சம்பவத்திற்கு காங்கிரஸ் எம்பி ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார். காற்று மாசுபாட்டை குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி இந்தியா கேட் பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் டில்லியில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் ஆம் ஆத்மி தலைவர் பிரியங்கா காக்கர் உள்பட பலரும் கலந்து கொண்டனர். பிரியங்கா காக்கர் கூறுகையில், 'டில்லி மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள். தலைநகரில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாட்டை ஒப்புக்கொள்ள அரசு மறுக்கிறது. முதல்வர் ரேகா குப்தா 13 காற்று சுத்திகரிப்பு இயந்திரங்களை வாங்கிய பிறகு தனது அலுவலகம் , வீட்டில் அமர்ந்திருக்கிறார். அவர் இங்கே வந்திருக்க வேண்டும். இது பொதுமக்களின் கோபம். பாஜ அரசு மாசுபாட்டைத் தீர்க்க ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது அனைவருக்கும் தெரியும்,' எனக் கூறினார். இதனிடையே, உச்சநீதிமன்ற உத்தரவை காட்டி, இந்தியா கேட் பகுதியில் போராட்டம் நடத்தக் கூடாது என்று டில்லி போலீசார் அறிவுறுத்தினர். மேலும், விதிகளைப் பின்பற்றி ஜந்தர் மந்தரில் போராட்டத்தை நடத்துமாறும் தெரிவிக்கப்பட்டது. அதை மீறிய போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.இது தொடர்பாக காங்கிரஸ் எம்பி ராகுல் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சுத்தமான காற்று என்பது அடிப்படை மனித உரிமை. அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது என்பது நமது அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட உரிமை. காற்று மாசுபாட்டை தடுக்கத் தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் பொதுமக்களை, ஏன் குற்றவாளிகள் போது நடத்தப்படுகிறார்கள்?காற்று மாசுபாடு கோடிக்கணக்கான இந்தியர்களைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல், நமது குழந்தைகளின் ஆரோக்யத்தையும், நாட்டின் எதிர்காலத்தையும் அச்சுறுத்துகிறது. ஆனால், ஓட்டு திருட்டின் மூலம் அதிகாரத்திற்கு வந்த இந்த அரசு, இந்தப் பிரச்னையைத் தீர்க்கும் முயற்சி கூட செய்யாமல், அலட்சியம் காட்டுகிறது. காற்று மாசுபாட்டிற்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, சுத்தமான காற்று வேண்டி போராட்டம் நடத்தும் பொதுமக்களைத் தாக்குவது சரியான அணுகுமுறை அல்ல. உடனடியாக, காற்று மாசுபாட்டுக்கு தீர்வு காணும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.காற்று மாசுபாட்டிற்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, சுத்தமான காற்று வேண்டி போராட்டம் நடத்தும் பொதுமக்களைத் தாக்குவது சரியான அணுகுமுறை அல்ல. உடனடியாக, காற்று மாசுபாட்டுக்கு தீர்வு காணும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Muralidharan S
நவ 10, 2025 12:17

Gen-Z என்ற போர்வையில் குற்றவாளிகளை வைத்து தானே பங்களாதேஷ், நேபாளம், மணிப்பூர் மாதிரி கலவரம் நிகழ்த்த பாணியில் ....நாடு முழுவதும் நடக்க தூண்டப்படுத்தல் நடக்கிறது.. பிள்ளையையும் கிள்ளிவிட்டு.. தொட்டிலையும் ஆட்டுவது என்பது இதுதான்..


duruvasar
நவ 10, 2025 09:37

சரிதான். போராட தூண்டுபவர்களையும் போராட தூண்டும் ஊடகங்கள் மேல்தான் சட்டம் தன் கடமையை செய்யவேண்டும். அப்பாவி மக்கள் மீது அல்ல


முக்கிய வீடியோ