உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி காற்று மாசுபாடு; மத்திய, மாநில அரசுகள் மீது சுப்ரீம் கோர்ட் காட்டம்

டில்லி காற்று மாசுபாடு; மத்திய, மாநில அரசுகள் மீது சுப்ரீம் கோர்ட் காட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி காற்று மாசுபாடு விவகாரத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் மீது சுப்ரீம் கோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது.தலைநகர் டில்லியில் காற்றின் தரம் கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குளிர்காலத்தில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு காற்று மாசுபாட்டில் தலைநகரே ஸ்தம்பித்து கிடக்கிறது. இந்த காற்று மாசுபாட்டுக்கு முக்கிய காரணமாக, அண்டை மாநிலங்களான பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் நெல் உமிகளை விவசாயிகள் எரிப்பது தான். எனவே, இதனை தடுக்க பெயரளவு நடவடிக்கைகளை மட்டுமே இரு மாநில அரசுகளும் எடுத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, மரக்கட்டைகளை எரிப்பவர்களுக்கும், அதை மீறுபவர்களுக்கும் ஏன் பெயரளவு அபராதம் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியது. மேலும், காற்று மாசுபாட்டை தடுக்கும் சட்டத்திற்கு பல்லை பிடுங்கிய நிலை தான் இருந்து வருவதாகவும், மாசுபாட்டை ஏற்படுத்துபவர்களை தண்டிப்பதற்கு பதிலாக அபராதம் விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொண்டுள்ளதாக நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். மத்திய அரசு தரப்பில் ஆஜரான ஐஸ்வர்யா பாட்டி, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் சுற்றுச்சூழல் துறை செயலாளர்கள் மற்றும் கூடுதல் தலைமை செயலாளர் (விவசாயம்), ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். 10 நாட்களுக்குள் சட்டதிருத்த விதிகளை முழுவதுமாக அமல்படுத்துவோம், என உறுதியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Sivagiri
அக் 23, 2024 23:21

லாரிகளை ஒருநாள் விட்டு ஒருநாள் தடைவிதிக்க வேண்டும் , டூவீலரை தவிர மற்ற அணைத்து வாகனங்களுக்கும் வாரத்தில் இரண்டு நாள் தடை விதிக்க வேண்டும் , கார்களில் யாரும் சிங்கிளா போக கூடாது , புகை வெளியிடும் தொழிற்சாலைகளை உடனடியாக வேறு ஊர்களுக்கு மாற்ற வேண்டும் , போன்ற புகை கட்டுப்பாடுகளால்தான் தப்பிக்கலாம் , சும்மா எங்கோ வயல்காட்டில் எரிப்பதை காரணம் காட்டுவது , படித்த முட்டாள்கள் , தப்பித்துக்கொள்ள செய்யும் தந்திரம்


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 23, 2024 21:39

தில்லி காற்று மாசுபாடு கடந்த நூற்றாண்டிலிருந்து வந்த பிரச்னை யுவர் ஆனர் ....


Dharmavaan
அக் 23, 2024 19:58

கோர்ட் ன் உத்தரவு பிறப்பிக்க கூடாது .அரசியல் கட்சிகள் விவசாயிகளை விரோதித்துக்கொள்ள விரும்பவில்லை


Sudha
அக் 23, 2024 19:27

இந்த ஒரு காரணத்திற்காக டெல்லி யை விட்டு வெளியே ஒரு தலை நகரை உருவாக்கலாம். அது சபிக்கப்பட்ட நகரம்


Anand
அக் 23, 2024 19:12

எப்படி, ஏன் என்று உங்களுக்கு தெரியாது? விவசாய சட்டத்தில் ஒரு பிரிவு இந்த காற்று மாசுபாட்டை தடுக்கவும் இருந்தது, அதை சட்டத்தை எதிர்க்கிறேன் என்று விவசாயிகள் போர்வையில் புல்லுருவிகள் அராஜகம், அட்டூழியம் செய்து டெல்லி ஹரியானாவில் மிகப்பெரிய கலவரத்தை ஏற்படுத்தினார்கள், இது யாரால் என தெரிந்தும் கண்ணை மூடி மவுனம் காத்து இதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என பொது நல மனுக்களை தள்ளுபடி செய்தீர்கள்...... இப்போது மட்டும் காட்டமாம் காட்டம்.


GMM
அக் 23, 2024 17:10

நெல் உமிகளை பல பொருள் தயாரிக்க பயன்படுத்த முடியும். ? மாடுகளுக்கு உணவாக்க முடியும். சர்வதேச டெண்டர் விடலாம். ஒரு ஏக்கருக்கு 10 பசு வளர்ப்பது கட்டாயம். எரித்தால் விளை நிலம் அரசு, உரிமையாளர் கூட்டு பொறுப்பில் மாறவேண்டும். அபராதம், தண்டனை மூலம் போலீஸ், நீதிபதிக்கு சுமை கூடும். விவசாயம் எல்லோருக்கும் தெரியாது. கெஜ்ரிவால் முன்பு வாகன புகையை காட்சி படுத்தி ஜெயில் சென்றுவிட்டார். டெல்லி பெட்ரோல் பங்கு முழுவதும் அடக்கவிலைக்கு /அந்நிய செலவாணிக்கு நிகர் பெட்ரோல் விற்க வேண்டும். 5 -8 ஆண்டுக்கு மேல் வாகனம் பறிமுதல் செய்ய வேண்டும். ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும். 150 கிலோ மீட்டர் தூரத்தில் மாற்று இடம். ரயில் பயணம் மாத சீட்டு மூலம் குறைந்த கட்டணத்தில் 5 ஆண்டுகள் வரை மட்டும் வசூலிக்க வேண்டும்.


அப்பாவி
அக் 23, 2024 16:40

இதெல்லாம் சட்டம் மூலம் தீர்க்க முடியாது. விவசாயிகள் என்ற தத்திகள் திருந்தினால்தான் உண்டு. வேணும்னா டில்லி நிர்வாகத்தை நீதிபதிகளிடம் குடுத்துடலாம். உத்தரவு போட்டே நிலைமையை சரி பண்ணிடுவாங்க கோவாலு.


Smba
அக் 23, 2024 16:13

காட்டத்துக்கு என்ன நடைமுறை ல பாத்தா தெரியும் சிரமம் என்ன னு


முக்கிய வீடியோ