உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது டில்லி விமான நிலையத்தின் 2வது முனையம்

இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது டில்லி விமான நிலையத்தின் 2வது முனையம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் புனரமைக்கப்பட்ட இரண்டாவது முனையம், இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. தலைநகர் டில்லியில், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் உள்ளது. நாட்டின் மிகப்பெரிய விமான நிலையமான இங்கு, நான்கு ஓடுபாதைகளுடன் மூன்று முனையங்கள் உள்ளன. தினமும், 1,300க்கும் மேற்பட்ட விமான இயக்கங்களை இந்த நிலையம் கையாள்கிறது. இந்த விமான நிலையத்தின் இரண்டாவது முனையம், 40 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது. இந்த முனையம், புனரமைப்பு பணிகளுக்காக, கடந்த ஏப்ரலில் மூடப்பட்டது. பணிகள் முடிந்த நிலையில், தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, டில்லி சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தை நேற்று திறந்து வைத்தார். இந்த முனையம், இன்று முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது. 'ஏர் இந்தியா, இண்டிகோ' ஆகிய விமான நிறுவனங்கள், புனரமைக்கப்பட்ட இரண்டாவது முனையத்தில் இருந்து தினமும், 120 உள்நாட்டு விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளன. தற்போது, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் ஆண்டுக்கு, 10 கோடிக்கும் அதிகமான பயணியரை கையாளும் திறன் கொண்டது. சிறப்பம்சங்கள் 1 புனரமைக்கப்பட்ட இரண்டாவது முனையத்தில், 'செல்ப் பேகேஜ் டிராப்' வசதி உள்ளது. விமான நிறுவன ஊழியர்கள் தலையீடு இன்றி பயணியரே தங்கள் லக்கேஜ்களை, 'செக் இன்' செய்து கொள்ளலாம். இது, காத்திருப்பு நேரத்தை குறைக்கிறது. 2 பயணியருக்காக, ஆறு புதிய பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன 3 முனையம் முழுதும் டிஜிட்டல் மயமாக்கப் பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி