உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி குண்டு வெடிப்பு சம்பவம்: அசாமில் தேசவிரோதிகள் 15 பேர் கைது

டில்லி குண்டு வெடிப்பு சம்பவம்: அசாமில் தேசவிரோதிகள் 15 பேர் கைது

புதுடில்லி: டில்லி குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய வகையில் சமூகவலைதளத்தில் கருத்து பதிவிட்ட தேசவிரோதிகள் 15 பேர் அசாமில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.டில்லியில் நவ.,10ம் தேதி செங்கோட்டை அருகே காரை வெடிக்கச் செய்து பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் குழு அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் குண்டுவெடிப்பு நடத்தியது பயங்கரவாதி உமர் தான் என்பது டிஎன்ஏ சோதனையில் உறுதி செய்யப்பட்டது. மேலும் இந்த சம்பவத்தை டாக்டர்களை பயங்கரவாதிகளாக மாற்றிய முக்கிய சதிகாரன் இமாம் இர்பான் அகமது கைது செய்யப்பட்டு உள்ளான். இந்த சூழலில், டில்லி குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய வகையில் சமூகவலைதளத்தில் கருத்து பதிவிட்ட தேசவிரோதிகள் 15 பேர் அசாமில் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறியதாவது: டில்லி குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய சமூக ஊடக பதிவுகளை பதிவிட்ட 15 பேர் இதுவரை அசாம் முழுவதும் கைது செய்யப்பட்டுள்ளனர்.* ரபிஜுல் அலி (போங்கைகான்), * போரிட் உதின் லஸ்கர் (ஹைலக்கண்டி), * இனாமுல்மத் இஸ்லாம் (இனாமுல்புர்), * அகமது (லக்கிம்பூர்),* ஷஹில் (பார்பெட்டா),* ரகிபுல் சுல்தான் (பார்பெட்டா), * நாசிம் அக்ரம் (ஹோஜாய்), * தஸ்லிம் அகமது (கம்ரூப்), * அப்துர் ரோஹிம் (தெற்கு சல்மாரா) உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவ்வாறு அசாம் முதல்வர் ஹமந்தா பிஸ்வ சர்மா கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ