உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் நடந்தது தற்கொலைப்படை தாக்குதல்; சதிகாரனுக்கு கார் வாங்கி கொடுத்தவன் கைது

டில்லியில் நடந்தது தற்கொலைப்படை தாக்குதல்; சதிகாரனுக்கு கார் வாங்கி கொடுத்தவன் கைது

புதுடில்லி: டில்லியில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலை, தற்கொலைப்படை தாக்குதல் என்று என்ஐஏ அறிவித்துள்ளது. இதற்கு கார் வாங்கிக்கொடுத்த நபரை என்ஐஏ படையினர் கைது செய்துள்ளனர்.கடந்த 10ம் தேதி டில்லி செங்கோட்டை அருகே போக்குவரத்து சிக்னலில் நிகழ்த்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதல், ஒரு தற்கொலைப்படை தாக்குதல் என்று என்ஐஏ அறிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் காரை இயக்கிய டாக்டர் உமர் நபி உட்பட 13 பேர் பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.கார் ஓட்டிய உமர் நபி, தற்கொலைப்படை பயங்கரவாதியாக செயல்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக, தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. இதில் தொடர்புடைய டாக்டர்கள் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த நிலையில், டில்லி கார் வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்திற்கு உதவிய நபரை என்ஐஏ கைது செய்துள்ளது. காஷ்மீரின் சம்பூரா பகுதியைச் சேர்ந்த அமீர் ரஷித் அலி என்பவனை டில்லியில் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.இந்த நபர், கார் குண்டுவெடிப்பு நிகழ்த்துவதற்காக உமர் நபிக்கு டில்லியில் இருந்து கார் வாங்கி வந்து கொடுத்தது தெரியவந்துள்ளது.மேலும், தற்கொலைப் படை தாக்குதல் நடத்திய உமர் நபிக்கு சொந்தமான மேலும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்கள் உள்பட 73 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் என்ஐஏ தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

மாயவரம் சேகர்
நவ 16, 2025 20:11

காஷ்மீரில் ஆளும் உமர் அப்துல்லா அரசு காவல் துறை அதன் புலனாய்வுத் துறை பொறுப்பு ஏற்க வேண்டும் . காஷ்மீரிலிருந்து இந்தியாவின் பல பகுதிகளுக்கு ஊடுருவ பாக் பண உதவி செய்கிறது அதற்கு காஷ்மீரிவேயே வசிக்கும் தீவிரவாதிகள் மற்ற நகரங்களில் உள்ள மத வெற்றியாளர்கள் உதவியை ஆதரவை பெறுகிறார்கள் . இந்திய அரசியல் கட்சிகளின் சிறுபான்மை வாக்கு வங்கி பிச்சை எடுக்கும் மனப்பான்மை ஒழிய வேண்டும். இந்திய அரசு பலுசிஸ்தான் பகுதி போராளிகளை வெளிப்படையாக ஆதரிக்க வேண்டும் ஆப்கானிஸ்தானத்துடன் கை கோர்த்து பாகிஸ்தானுக்கு பிரசினை உண்டாக்க வேண்டும். எங்கு வலிக்குமோ அங்கு அடிக்க வேண்டும்.


Rathna
நவ 16, 2025 20:04

இந்த சம்பவத்தை பற்றி அந்த சமூகமோ, அதன் தலைவர்களோ, ஒவைசியோ, அல்லது பிரதான எதிர்கட்சிகளோ ஒரு அறிக்கையோ, எதிர்ப்போ தெரிவித்தாக தெரியவில்லை. இந்த தீவிரவாத சம்பவத்தில் அந்த சமூகத்தை சேர்ந்த 2 பேர் தனது குடும்பத்தை நிர்கதியாக விட்டு போய் இருக்கிறார்கள்.


புதிய வீடியோ