உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி குண்டுவெடிப்பு சம்பவம்: குற்றவாளிகளின் ரகசிய டைரிகள் சிக்கின

டில்லி குண்டுவெடிப்பு சம்பவம்: குற்றவாளிகளின் ரகசிய டைரிகள் சிக்கின

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி குண்டுவெடிப்பில் தொடர்புடைய பயங்கரவாதிகள் உமர், முசாம்மில் ஆகியோரின் டைரிகள் சிக்கியுள்ளன. சங்கேத வார்த்தைகளில் எழுதப்பட்ட விவரங்களை கண்டறிய போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.டில்லி குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்து என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதிகளான உமர், முசாம்மில் ஆகியோரின் டைரிகள் சிக்கியுள்ளன. சங்கேத வார்த்தைகளில் விவரங்கள் எழுதப்பட்டு இருந்தது.https://www.youtube.com/embed/whErWYE2g4sமீட்கப்பட்ட டைரி மற்றும் குறிப்பேடுகளில் இருந்து, பயங்கரவாத தாக்குதல் திட்டம் குறித்த முக்கியமான விவரங்கள் கிடைத்துள்ளன . அவர்கள் நீண்ட காலமாக சதி திட்டம் செய்து கொண்டிருந்தது விசாரணையில் அம்பலமானது.மீட்கப்பட்ட டைரிகள் மற்றும் குறிப்பேடுகளில் நவம்பர் 8ம் தேதி முதல் 12ம் தேதி வரையிலான தேதிகளில் சதி திட்டம் நடத்த குறிப்புகள் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இந்த டைரிகளில் 25 நபர்களின் பெயர்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.இவர்களில் பெரும்பாலும் ஜம்மு காஷ்மீர் மற்றும் பரிதாபாத்தைச் சேர்ந்தவர்கள். இது குறித்து என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

சிந்தனை
நவ 13, 2025 21:04

இன்னுமும் கவனக்குறைவாக கையாண்டால் நாட்டுக்கு மிகப்பெரிய நஷ்டம் மிகப்பெரிய ஆபத்துதான்


V RAMASWAMY
நவ 13, 2025 19:50

மீடியா இந்த சமயத்தில் கவனமுடன் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும். சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரிகளும் மற்றவர்களும் விசாரணை சம்பந்தப் பட்ட விபரங்களை மீடியாவுக்கு தெரிவிக்காமலோ கொடுக்காமலோ இருக்க வேண்டும். கருத்து சுதந்திரம் என்பதை சாதமாக உபயயோகித்து பாதக விளைவுகளை உண்டாக்கக் கூடாது. தேவைப்பட்டால் மத்திய அரசு இதற்காக தடை உத்திரவு கூட போடலாம்.


MARUTHU PANDIAR
நவ 14, 2025 16:23

1. உண்மை உண்மை. இந்த சேனல் காரர்கள் பரபரப்புக்குக்காகவும், யார் முந்திக் கொண்டு முக்கிய விவரங்களை ஸ்கூப் என்ற பெயரில் போட்டு உடைக்கறாங்க என்பதைக் காட்டிக் கொள்ள அளவுக்கு அதிகமான போட்டியும் போட்டுக் கொண்டு அலைகிறார்கள். கேவலமான பொறுப்பற்ற செயல். TRP ரேட்டிங்கே குறி என்று இப்படி ஆலாய் பறக்கிறார்கள். 2. இதனால் பல விசாரணைகள் திசை திருப்ப படுகின்றன. தாமதப் படுகின்றன. பயங்கரவாதிகள், மற்றும் ஹேட் ஆசாமிகள் இவற்றைப் பார்த்து உசுப்பேற்றப் படுகிறார்கள். இவர்கள் திருந்தப் போவதில்லை. விசாரணை யின் கால்களில் காரணமின்றி கட்டப்பட்ட இரும்பு குண்டுகள் இவர்கள். பேர்வழிகள் இவற்றை எல்லாம் பார்த்து விட்டு இன்னும் ஆக்ரோஷம் அடைகிறார்கள் என்பதே உண்மை.


MARUTHU PANDIAR
நவ 13, 2025 19:39

அந்த டைரியில் பப்பு பெயரெல்லாம் நிச்சயம் இருக்காது.


Sivasankaran Kannan
நவ 13, 2025 17:15

நீங்க உளவுத்துறை நாயகன் சார்.


Vasan
நவ 13, 2025 14:21

இந்த சம்பவம் பீகார் தேர்தல் முடிந்தவுடனே நடந்துள்ளதே. ஏன்?


N Sasikumar Yadhav
நவ 13, 2025 15:49

அந்த கேள்வியை உங்க பாசமுள்ள பயங்கரவாத டாக்டர்களை பார்த்து கேளுங்க இல்லையென்றால் அந்த பயங்கரவாத டாக்டர்களுக்கு ஆதரவாக இருக்கிறவர்களை கேளுங்க மிகச்சரியான பதில் கிடைக்கும்


oviya vijay
நவ 13, 2025 20:26

வாசன் கப்பு...அப்போ தேர்தல் சமயத்தில் மட்டும் உங்க daleevaru வேல் எடுக்கிறார். தீ மூ க விலும் இந்துக்கள் உள்ளனர் அப்டின்னு buruda...அரசியல் செய்யாமல் அவியலா செய்வாங்க?


sundarsvpr
நவ 13, 2025 13:24

இஸ்லாமிய சகோதரர்கள் இதர வெளிநாட்டு மதங்களுக்கு ஆதரவாக உள்ள அரசியல் கட்சிகளை இவர்களின் நடவடிக்கையை பொதுமக்களாகிய நாம் சந்தேக கண்களோடு பார்ப்பது தவறு இல்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை