உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி குண்டுவெடிப்பு: வெடிபொருட்களை சோதிக்க வீட்டிலேயே ஆய்வகம் அமைத்த சதிகாரன் உமர்

டில்லி குண்டுவெடிப்பு: வெடிபொருட்களை சோதிக்க வீட்டிலேயே ஆய்வகம் அமைத்த சதிகாரன் உமர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி கார் குண்டுவெடிப்பு நிகழ்த்திய சதிகாரன் டாக்டர் உமர் வெடிபொருட்களை சோதிக்க வீட்டில் ஆய்வகம் வைத்திருந்தான். டில்லியில் குண்டுவெடிப்பு நடத்த சோதித்து பார்த்து இருக்கிறான் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.டில்லி செங்கோட்டையில் போக்குவரத்து சிக்னலில் கார் ஒன்று, கடந்த 10ம் தேதி வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் காரை இயக்கிய டாக்டர் உமர் நபி உட்பட, 13 பேர் பலியாகினர்; 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பயங்கரவாத தாக்குதல் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக, தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3iatn0s6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தாக்குதலில் ஈடுபட்ட உமர் நபி, பரிதாபாதில் உள்ள அல் பலாஹ் பல்கலையில் டாக்டராக பணியாற்றியதும், ஜம்மு - காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்தவன் என்பதும் விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டது. தாக்குதலைத் தொடர்ந்து, புல்வாமாவின் கோய்ல் கிராமத்தில் உள்ள உமரின் வீட்டில் பாதுகாப்பு படையினர், கடந்த சில நாட்களாக சோதனை நடத்தி வந்தனர். இதில், பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன; வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.ஜெய்ஷ் - இ - முகமது உள்ளிட்ட பல பயங்கரவாத அமைப்புகளுடன் அவன் தொடர்பில் இருந்ததும் உறுதி செய்யப்பட்டது. இந்த சூழலில், அவனது வீட்டுக்கு போலீசார், சி.ஆர்.பி.எப்., எனப்படும் துணை ராணுவப் படையினர் அடங்கிய பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்றனர். பின்னர், டாக்டர் உமரின் வீடு பாதுகாப்பான முறையில் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. முழு வீடும் தரைமட்டமானதை அடுத்து, கட்டட இடிபாடுகளில் தடயவியல் துறையினர் ஆய்வு செய்தனர்.அப்போது சதிகாரன் டாக்டர் உமர் வெடிபொருட்களை சோதிக்க வீட்டில் ஆய்வகம் வைத்திருந்தான். டில்லியில் குண்டுவெடிப்பு நடத்த சோதித்து பார்த்து இருக்கிறான் என்பது தெரியவந்துள்ளது. மேலும், டெலிகிராம் மூலம் தனது பாகிஸ்தான் கூட்டாளிகள் பகிர்ந்து கொண்ட வெடிகுண்டு தயாரிக்கும் நுட்பங்களையும் சோதித்து இருக்கிறான்.டில்லி குண்டு வெடிப்பு சம்பவத்தின் குற்றவாளிகள் மூவரில் டாக்டர் உமர் வெடிகுண்டு தயாரிப்பதில் நிபுணராக இருந்து இருக்கிறான். அதனால் தான் அவன் தனது வீட்டில் ஒரு ஆய்வகத்தை அமைத்து இருக்கிறான் என்று வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. நவம்பர் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடந்த சோதனையின் போது, பரிதாபாத்தில் உள்ள இரண்டு தனித்தனி வீடுகளில் இருந்து 2,900 கிலோ எடையுள்ள வெடிபொருட்கள் மீட்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

பேசும் தமிழன்
நவ 17, 2025 07:46

இவனது செயலுக்கு இவனது குடும்பமும் ஒரு காரணம்.... என் மகன் செய்தது எங்களுக்கு தெரியவே தெரியாது என்று முட்டு கொடுக்க முடியாது.... அடுத்தவர்களின் உயிரை எடுக்க நினைப்பவன் குடும்பம் மட்டும் எப்படி வீட்டில் சொகுசு வாழ்கை வாழ முடியும் ???


சந்திரன்
நவ 16, 2025 17:03

இவனால் இவன் குடும்பமே நாசமானது இவன் படித்து என்ன பயன் படித்த .. இவனை போன்றோர் படித்தாலும் மத வெறி பிடிச்ச மிருகங்கள் போல வாழ்கின்றனர். இவர்களை பாய் என சகோதரர்களாக பார்க்கும் இந்துக்களை சொல்லனும்


கடல் நண்டு
நவ 16, 2025 15:29

, இறை நம்பிக்கை என்ற பெயரில் கண்மூடித்தனமாக பிற மத வெறுப்பு , தீவிரவாதம் போன்றவைகளை மிக அதிகமாக நம்புகிறார்கள் .பிற . எவ்வித படிப்புகளும் இவர்களுக்கு முக்கியமாக இல்லை.. இந்நிலை தொடர்ந்தால் வருங்காலங்களில் இந்துக்கள் நிலை அதோகதி தான்.


Indian
நவ 16, 2025 12:59

நாட்டு துரோகிக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும்.


ரஹிம் பாய், வேலூர்
நவ 16, 2025 12:58

என்ன அபத்தமான கருத்துக்கள்...எவன் சிறுபான்மையினர்...? 2001 க்கு பின் எந்த கணக்கெடுப்பும் நடக்கவில்லை. மூர்க்கம் 60% உள்ளனர். அவ்ளோ பேரையும் கண்காணிப்பு கேமரா வைத்து பார்க்க முடியாது...இஸ்ரேல் பாணியில் கடும் நடவடிக்கை மட்டுமே பலன் தரும். அனைத்து சலுகைகளையும் நிறுத்த வேண்டும்...ஒவ்வொருதரின் பணப்பரிமாற்றம் கண்காணிக்க வேண்டும்


Rathna
நவ 16, 2025 11:57

மூளை மழுங்கடிப்பட்ட கூட்டம். வெள்ளி கிழமை தோறும் துர்போதனை. இவர்களை போன்றவர்களை முட்டு கொடுக்க பெரிய அரசியல் கூட்டம் எப்போதுமே இந்த நாட்டில் தயாராக உள்ளது.


பேசும் தமிழன்
நவ 16, 2025 12:31

அதுவும் தமிழ்நாட்டில் ஏராளமான கூட்டம் முட்டு கொடுக்க காத்து கொண்டு இருக்கிறது.....நம்ம ஆட்களும் அந்த முட்டு கொடுக்கும் ஆட்களுக்கே ஓட்டு போட்டு கொண்டு இருக்கிறார்கள்.


RK
நவ 16, 2025 11:11

தீவிரவாதிகளை உருவாக்கும் மதராஸாக்களை உச்சநீதி மன்றம் தடை செய்ய வேண்டும். மாற்று மதத்தவர்களை உளவுத்துறை கண்காணிக்கப்பட வேண்டும்.


duruvasar
நவ 16, 2025 10:08

நேற்று பாரூக் அப்துல்லா நாங்கள் இந்தியர்கள் எங்களை நம்புங்கள். காஷ்மீரை கைகாட்டுவது வருத்தமாக இருக்கிறது என நீலி கணீர் விட்டு நாதழுதழுக்க பேசியிருந்தார். நீங்கள் இந்தியர்கள் அல்ல என்று நாங்கள் யாரும் சொல்லவில்லை. இந்திய சோற்றை உண்டு விட்டு இந்தியாவுக்கு எதிராக பாக்கிஸ்தான் உடன் கைகோர்க்காதீர்கள் என்றுதான் கூறுகிறோம். இன்னும் உங்களை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாதமாதிரி பேசுவதை நிறுத்தி உள்ளூர் இளஞர்களுக்கு புத்திமதியை புகட்டி நல்வழிப்படுத்துங்கள். போகிற வழிக்கு புண்ணியம் கிடைக்கும்.


தமிழ்வேள்
நவ 16, 2025 12:12

அந்த மதத்தின் டிசைனே தேசத்துரோகம் உப்பு துரோகம் மட்டும் தான்.இவர்கள் உலகில் வசிக்கும் எந்த ஒரு நாட்டுக்கும் விசுவாசம்/ நன்றி உடையவர்கள் அன்று.. பெற்ற தாய், தாய் மண் இவை இரண்டுமே மதிப்பிற்குரியவை/ வணக்கத்துக்குரியவை அல்ல என்பதே இவர்களின் மதம் போதிக்கும் சித்தாந்தம்..


Thirumal Kumaresan
நவ 16, 2025 09:40

நமது உளவு துறை என்ன செய்கிறது, நமது உளவு துறைகள் இன்னும் சிறைப்பாக வேலை செய்ய வேண்டும், அதிகமான கேமராக்கள் பொறுத்த படவேண்டும் நமது டெல்லியில். பாதுகாப்பு குறைபாட்டையும் மறப்பதற்கு இல்லை,


நிக்கோல்தாம்சன்
நவ 16, 2025 11:26

அவர்கள் எப்பொழுதும் வாழும் நாட்டுக்கு நம்பகமா இருந்ததில்லை , முதுகில் குத்துவதில் வல்லவர்கள், சுல்தான்களின் காலத்தில் கிருஷ்ணதேவராயரை காலத்தில் இருந்து இன்று வரை அவர்கள் பல்வேறு விதத்தில் நிரூபித்து வந்துள்ளனர் நாம்தான் அதனை உணராமல் ஜனநாயகம் அது இது என்று பேசி அவர்களை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளோம் , இன்றும் இந்துக்களும் , கிறிஸ்துவர்களும் , பௌத்தர்களும் ஒன்றிணைந்தால் சதிகார வந்தேறிகள் ஆட்டம்கண்டுவிடுவார்கள்


பேசும் தமிழன்
நவ 16, 2025 12:34

ஆமாம் நீங்கள் அவர்களுக்கு ஆதரவு கொடுத்து கொண்டே இருங்கள்.... ஆனால் நீங்கள் செய்யும் தவறை உளவுத்துறை கண்டுபிடிக்க வேண்டுமாம்.