உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி வந்த ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்; அவசர தரையிறக்கம்!

டில்லி வந்த ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்; அவசர தரையிறக்கம்!

புதுடில்லி: தாய்லாந்தில் இருந்து இந்தியா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதால், விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டது.தாய்லாந்து, புகெட் தீவில் இருந்து 156 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் இந்தியாவுக்கு புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்தது. இதையடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=c460j5fs&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0விமானத்தில் இருந்து பயணிகள் வெளியேற்றப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது. வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் சோதனை நடத்தினர். சோதனை முடிவில் புரளி என்பது தெரியவந்தது. விமானத்தின் கழிப்பறைக்குள் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக தாய்லாந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

velan Iyengaar
ஜூன் 14, 2025 10:07

மிரட்டல் விட்டவன்க்கு கொடுர மரண தண்டனை கொடுக்க வேண்டும். இனி ஒருத்தனும் மிரட்டல் கனவிலும் நினைக்கக் கூடாது


S. Balakrishnan
ஜூன் 13, 2025 18:19

உளவுத்துறை இன்னும் தீவிரமாக செயல்பட்டு குற்றவாளிகளை வேரறுக்க வேண்டும்.


Krishna
ஜூன் 13, 2025 19:41

விமானதளத்தில் உள்ள பாதுகாப்பு அலுவலர் மிகவும் கண்டிப்புடன் இருக்க வேண்டும்


சாமானியன்
ஜூன் 13, 2025 17:25

ஏர் இந்தியா நிறுவனத்திற்கு பெருத்த நஷ்டம். ஏழறை சனியோ !


Ramesh Sargam
ஜூன் 13, 2025 14:24

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் செயலாகத்தான் இருக்கும்.


முக்கிய வீடியோ