உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்திற்கு டில்லி முதல்வர் இரங்கல்

ஆமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்திற்கு டில்லி முதல்வர் இரங்கல்

புதுடில்லி:ஆமதாபாத் விமான நிலையம் அருகே நேற்று நிகழ்ந்த விமான விபத்துக்கு, டில்லி முதல்வர் ரேகா குப்தா இரங்கல் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:ஆமதாபாத்தில் லண்டன் செல்லவிருந்த, 'ஏர் இந்தியா' விமானம் விபத்துக்கு உள்ளானது என்பதை அறிந்து மிகவும் மன வேதனை அடைந்தேன். அந்த விபத்தில் இறந்த பயணியருக்கும், அவர்களின் உறவினர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்.விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன். விமான விபத்தில் இறந்த மற்றும் படுகாயமடைந்த அனைவருக்கும், இந்த கடினமான நேரத்தில், என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை