உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கள்ளக்காதல் விவகாரத்தில் டில்லி நீதிமன்றம் புது விளக்கம்

கள்ளக்காதல் விவகாரத்தில் டில்லி நீதிமன்றம் புது விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'திருமண பந்தத்தில், கணவன் மற்றும் மனைவி பரஸ்பரம் நம்பிக்கையுடன் இருப்பதாக ஒப்பந்தம் செய்கின்றனர்; இதில், மனைவியின் கள்ளக்காதலுக்கு என்ன சம்பந்தம் இருக்கிறது' என, டில்லி நீதிமன்றம் கூறியுள்ளது.

பாதுகாப்பு

ராணுவ மேஜர் ஒருவர், தன் மனைவியின் கள்ளக்காதலை நிரூபிப்பதற்காக, கள்ளக்காதலனான மற்றொரு ராணுவ மேஜருடன் மனைவி சென்ற ஹோட்டலின் கண்காணிப்பு கேமரா பதிவுகளை கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.இதை விசாரித்த டில்லி சிவில் நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளதாவது:ஹோட்டல்களின் வரவேற்பறை உள்ளிட்ட இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் என்பது, அந்த ஹோட்டலின் பாதுகாப்புக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடு. இந்த விபரங்களை மூன்றாம் நபர் கேட்க முடியாது. அது போலவே, ஹோட்டலில் முன்பதிவு செய்துள்ள விபரங்களையும் மற்றவர்களுக்கு தர வேண்டிய அவசியம் இல்லை.இந்த விஷயத்தில் தன் மனைவி, தன் கள்ளக்காதலனுடன் ஹோட்டலுக்கு சென்றுள்ள விபரங்கள் கேட்கப்பட்டுள்ளன. அவற்றை தர வேண்டிய கட்டாயம் ஹோட்டலுக்கு இல்லை.ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த ஆங்கில எழுத்தாளர் கிரஹாம் கிரீனேவின் நாவலில், நம்பகத்தன்மை குறித்து கூறியுள்ளார்.'திருமண பந்தத்தில் பரஸ்பரம் நம்பிக்கையுடன் இருப்போம் என்று கணவன், மனைவிக்குள் ஒரு ஒப்பந்தம் உள்ளது.அந்த ஒப்பந்தம் முறிந்தால், அதில் இந்த இருவருக்கும் மட்டுமே தொடர்பு உள்ளது; மூன்றாம் நபர்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை' என, அதில் அவர் கூறியுள்ளார்.

உத்தரவு

மேலும், இந்த வழக்கில், மனைவி, அவரது கள்ளக்காதலன் பெயர்களை மனுதாரர் குறிப்பிடவில்லை. அவ்வாறு இருக்கும்போது, எந்த வகையில் இந்த வழக்கில் உத்தரவுகள் பிறப்பிக்க முடியும்?தற்போதைய காலகட்டத்தில் திருமணத்துக்கு மீறிய உறவுகள் குறித்த நம் பார்வை மாறியுள்ளது. அதனால் தான் புதிய கிரிமினல் சட்டத்திலும், இதற்கு முன் இது தொடர்பாக இருந்த சட்டப்பிரிவுகள் சேர்க்கப்படவில்லை.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

theruvasagan
மே 25, 2025 22:18

எதுக்கு இங்கிலீஷ்காரனை உதாரணத்துக்கு இழுக்கணும். ஆம்பளை ஒரு ஆசைநாயகி வைத்துக் கொண்டால் மனைவி நாலு ஆசைநாயகர்களை வைத்துக் கொள்ளணும் என்கிற அறிவுரையை அந்த ஜட்ஜ் படிக்கலையா.


Barakat Ali
மே 25, 2025 18:37

[ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த ஆங்கில எழுத்தாளர் கிரஹாம் கிரீனேவின் நாவலில், நம்பகத்தன்மை குறித்து கூறியுள்ளார்.] ஐரோப்பிய கலாச்சாரமும் நம்ம கலாச்சாரமும் ஒண்ணா ????


அப்பாவி
மே 25, 2025 15:28

ஜட்ஜ் ஐயா நிறைய ஆங்கில நாவலா படிச்சி தள்ளியிருக்காரு.


Tamil
மே 25, 2025 13:44

நாடு கெட்டு குட்டிச்சுவராகிக் கொண்டிருக்கிறது என்பதற்கு சாட்சி


Johnson Ponraj
மே 25, 2025 12:23

crazy judgement. some one apply for reverse this judgement,


K.aravindhan aravindhan
மே 25, 2025 11:45

ஒரு வேளை கள்ளக்காதல் விவகாரத்தில் ஹோட்டலில் மனைவி கொலை செய்யப்பட்டிருந்தால் அப்போது இந்த சிசி டிவி பதிவுகளை கொடுப்பார்களா ? இல்லையா


குணா
மே 25, 2025 15:26

அடிச்சி... புடுங்குவாங்க...


Vasan
மே 25, 2025 11:30

A judge can refer a previous judgement of a court for reference. Can he refer a novel as a source for his judgement? There are so many novels and stories in the world.


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 25, 2025 10:05

இதன் மூலம் கணம் மக்கள் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் திருமணம் என்பது இந்த நீதிபதியின் பார்வையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டுமே. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் சம்பந்தப்பட்டவர்கள் சம்பந்தப்பட்டவர்களுடன் மட்டுமே புரிந்து கொள்ள வேண்டும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சம்பந்தப்பட்டவர்கள் வேறு நபர்களுடன் சம்பந்தப்பட்டு அவர்களுக்குள் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் தங்களுக்குள் பரிமாறிக்கொள்ள வேண்டியது இல்லை. ஆகவே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சம்பந்தப்பட்டவர்கள் சம்பந்தப்பட்டவர்களுடன் தாமாகவே பகிர்ந்து கொண்டால் மட்டுமே சம்பந்தப்பட்டவர் மேற்கொண்டு செயலாற்ற முடியும். இல்லை என்றால் புரிந்துணர்வு ஒப்பந்தம் அப்படியே இருக்கும். சம்பந்தப்பட்டவர்கள் வேறு நபர்களுடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சம்பந்தப்பட்டவர்கள் உள் நுழைந்து கேள்வி கேட்கவோ ஆதாரங்கள் திரட்டவோ கூடாது. அது புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறியதாக ஆகி விடும். ஆகவே இதையெல்லாம் விடுத்து சாட்சிகாரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுந்து நேரம் பணம் மிச்சம் செய்து கொள்ளவும்.


போராளி
மே 25, 2025 08:33

ஒருவேளை ...ட ட்ரெய்னிங்கா இருக்கும்


Kasimani Baskaran
மே 25, 2025 07:18

இதையெல்லாம் இராணுவ கோர்ட் விசாரித்து இருக்கவேண்டும்.


புதிய வீடியோ