உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வட மாநிலங்களில் 3 நாட்களுக்கு "ஆரஞ்ச் அலர்ட்"

வட மாநிலங்களில் 3 நாட்களுக்கு "ஆரஞ்ச் அலர்ட்"

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பஞ்சாப், ஹரியானா, டில்லி, சண்டிகர் உள்ளிட்ட வட மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு பனிமூட்டம் காரணமாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.டில்லியில் இன்று (ஜன.,17) காலை வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் அளவிற்கு குறைந்ததால் கடும் குளிர் நிலவியது. டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கிளம்ப வேண்டிய 120 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளன. 53 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் முன்பதிவு செய்திருந்த பயணிகள் அவதி அடைந்தனர். அதேபோல் டில்லியில் இருந்து 20க்கும் மேற்பட்ட ரயில்கள் தாமதமாக புறப்பட்டன. டில்லி விமான நிலையத்தில் வழக்கமான நேரத்தை விட, 170க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக வந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி