உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதிகாரிகளுக்கு விடுமுறை கட்டுப்பாடுகள் ரத்து டில்லி அரசு உத்தரவு

அதிகாரிகளுக்கு விடுமுறை கட்டுப்பாடுகள் ரத்து டில்லி அரசு உத்தரவு

புதுடில்லி,:அண்டை நாடான பாகிஸ்தானுடன் ஏற்பட்ட போர் பதற்றத்தை தொடர்ந்து, அதிகாரிகள் விடுமுரை எடுக்க விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடு ரத்து செய்யப்பட்டது.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஏப்ரல் 22ம் தேதி நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணியர் கொல்லப்பட்டனர்.இதையடுத்து, நம் ராணுவம் கடந்த 7ம் தேதி, 'ஆப்பரேஷன் சிந்தூர்' என்ற பதிலடியில் பாகிஸ்தானில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்களை அழித்தது. இந்த பதிலடியில் நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.இதைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் வெடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. அதனால், அரசு அதிகாரிகளின் அனைத்து விடுமுறைகளையும் ரத்து செய்து கடந்த 8ம் தேதி டில்லி அரசு உத்தரவிட்டது.ஆனால், கடந்த 10ம் தேதி இரு நாடுகளும் தாக்குதல்களை நிறுத்திக் கொள்ள முடிவு செய்தன.எனவே, அதிகாரிகள் விடுமுறை எடுக்க விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகளை ரத்து செய்வதாக டில்லி அரசு அறிவித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ