உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்த பாடலுக்கு காப்புரிமை இளையராஜாவிடம் இல்லை; டில்லி ஐகோர்ட் தீர்ப்பு

இந்த பாடலுக்கு காப்புரிமை இளையராஜாவிடம் இல்லை; டில்லி ஐகோர்ட் தீர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: என் இனிய பொன் நிலாவே பாடலுக்கான காப்புரிமையை, சரிகம நிறுவனம் வைத்துள்ளதால், அதை இளையராஜா பிறருக்கு வழங்க முடியாது என டில்லி ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா ரீமிக்ஸ் செய்து இசையமைத்த 'என் இனிய பொன் நிலாவே' பாடல், 'அகத்தியா' படத்தின் டீசரில் இடம் பெற்று இருந்தது. இதனை எதிர்த்து, 'சரிகம' நிறுவனம் டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. 'அங்கீகாரம் இல்லாமல் பாடல் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக சரிகம நிறுவனம் குற்றம் சாட்டி இருந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ovnrkuop&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த வழக்கு இன்று (ஜன.,31) விசாரணைக்கு வந்தது. அப்போது ' என் இனிய பொன் நிலாவே பாடலை' உபயோகப்படுத்த இளையராஜாவிடம் அனுமதி பெற்றதாக, தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, என் இனிய பொன் நிலாவே பாடலுக்கான காப்புரிமையை, சரிகம நிறுவனம் வைத்துள்ளதால், அதை இளையராஜா பிறருக்கு வழங்க முடியாது என டில்லி ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.அப்பாடலின் இசையமைப்பாளர் இளையராஜா அதை மூன்றாம் தரப்பினருக்கு ஒதுக்க முடியாது. இளைய ராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜாவின் மறுஉருவாக்கம் செய்யப்பட்ட பாடலை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் வெளியிடுவதையும் நீதிமன்றம் தடை செய்து உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Karthi
பிப் 01, 2025 16:04

ஏ ஆர் ரகுமான் அனிருத் இவங்களுக்கெல்லாம் காப்பரும் இல்லையா எல்லாரும் வைத்துக்கொண்டிருக்கிறார்கள் இளையராஜாவுக்கு வந்தா தக்காளி சட்னி மத்தவங்களுக்கு வந்தா ரத்தம் இதுதான் உலகம்


Karthi
பிப் 01, 2025 16:03

ஏ ஆர் ரகுமான் அனிருத் இவர்களெல்லாம் காப்புரிமை இல்லாம இருக்காங்களா? அவர அப்ப ஏதோ வாங்க மறந்துட்டாரு அத வச்சுக்கிட்டு ஓட்டிட்டு இருக்கீங்களே எல்லாருக்கும் காப்புரிமை இருக்கு பார் அவங்கள பத்தி மட்டும் பேசுறது இல்ல


Karthik
ஜன 31, 2025 19:58

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். இவர் ஆரம்பித்து வைத்த விளையாட்டுதான் ராயல்டி எனும் பூமராங். அது இப்போது அவரிடமே திரும்பி விட்டது. இதுதான் கர்மா.வாழ்க்கை ஒரு வட்டம் - அது புரியாதவருக்கு நட்டம்.


Karthi
பிப் 01, 2025 16:05

அப்போ ஏ ஆர் ரகுமான் அனிருத் இவங்களுக்கெல்லாம் காப்பர்மே இல்லையா... எல்லாருக்கும் இருக்குப்பா இளையராஜா செஞ்சா குத்தம் உங்களுக்கு அவ்வளவுதான்


LION Bala
ஜன 31, 2025 18:33

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதன் உதாரணம் இது தான். இளையராஜா ஆரம்பித்த இந்த ராயல்டி விளையாட்டு இப்போது அவருக்கு எதிராக திரும்புகிறது. சங்கீதம் என்பது கவிதை, இசை, ராகம், மொழி, ஓலி இவைகள் ஒன்றாய் இணைந்து பிறந்தது. இது கடவுள் ஒரு சிலருக்கு அருளிய, வரம் கொடை என்றும் சொல்லலாம். முத்துசாமி தீட்சதர், தியாகராஜர் போன்ற மகான்களின் கீர்த்தனைகள், ஆராதனைகள், ராகங்களை நாம் உபயோகிக்கிறோம். இந்த விஷயத்தில் மனிதன் சகிப்புத் தன்மையை கடைபிடிக்க வேண்டும்.


Senthoora
ஜன 31, 2025 16:53

அவர்கள் மக்களுக்காக படைப்புகளை கொடுத்திருக்கிறார்கள். யார்வேண்டுமானாலும் பயன் படுத்தலாம்.


Ray
ஜன 31, 2025 15:43

ராயல்ட்டி பிரச்சினையை ஆரம்பிச்சவருக்கே பூமராங் ஆகுதே ஆளாளுக்கு ராயல்ட்டிங்றான்


R S BALA
ஜன 31, 2025 15:05

சரிகம நிறுவனம் பள்ளிக்கட்டு சபரிமலைக்கு என்ற வார்த்தையே பயன்படுத்த கூடாதுங்கறான் விடுதலை படத்தில் இடம்பெற்ற வள்ளலார் திருவருட்பாவின் அகவல் வரிகளான போற்றிநின்பேரருள் என்றவரியினை எடுத்து பாடல் அமைத்துள்ளார் இளையராஜா அந்த வரிகளை பயன்படுத்த சோனி நிறுவனம் தடைகள் விதிக்கிறது சமூகவலைத்தளங்களில்... இது மிகப்பெரிய அநியாயம் இவற்றிற்கெல்லாம் நிறுவனத்திற்கு சாதகமாக தீர்ப்பு வருவது வேதனையளிக்கிறது..


kantharvan
ஜன 31, 2025 14:34

பிறர்க்கின்னா முற்பகல் செயின் ...


Sivaprakasam Chinnayan
ஜன 31, 2025 15:20

ரொம்ப சரியானது


kalyan
ஜன 31, 2025 14:14

தியாகராஜர் , தீக்ஷிதர் மொசார்ட் போன்ற இசை மேதைகளின் பாடல்களையும் இசையையும் பரவலாக இன்றைய இசையமைப்பாளர்கள் உபயோகிக்கிறார்கள் . அதற்கு எந்த நீதிமன்றம் என்ன தடை விதிக்கும்?


Ray
ஜன 31, 2025 15:29

தீக்ஷிதர்னா சிதம்பரம் தீக்ஷிதரா?


Sivagiri
ஜன 31, 2025 14:02

சரிதான் - - ரிட்டயர்டு ஆனப்புறம் - பழைய பொருட்களை கொடுத்து - இப்டி ஏதாவது நாலு காசு கிடைக்காதான்னு பாக்குறது இயல்புதான் - - - வயசான ஆட்களை மெய்ன்டைன் பண்றது கஷ்டம்தான் . . .


R S BALA
ஜன 31, 2025 16:08

உமக்கு இளமை ஊஞ்சலாடுகிறதோ..


Suppan
ஜன 31, 2025 16:11

RAy உங்களுக்கும் கர்நாடக சங்கீதத்துக்கும் வெகு தூரம்.


முக்கிய வீடியோ