உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ‛முதல்வர் எப்படி சொல்லலாம்? ரேவந்த் ரெட்டியை கண்டித்த உச்சநீதிமன்றம்

‛முதல்வர் எப்படி சொல்லலாம்? ரேவந்த் ரெட்டியை கண்டித்த உச்சநீதிமன்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளுக்கு ஜாமின் வழங்கிய உச்சநீதிமன்றத்தின் உத்தரவை விமர்சிக்கும் வகையில் கருத்து தெரிவித்த அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டியை நீதிபதிகள் கண்டித்து உள்ளனர்.டில்லி மதுபான ஊழல் வழக்கில் பாரத் ராஷ்ட்ர சமிதியைச் சேர்ந்த கவிதாவுக்கு ஐந்து மாத சிறைவாசத்திற்கு பிறகு நேற்று முன்தினம் உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இது தொடர்பாக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறுகையில், ‛‛பா.ஜ.,வுக்கும், முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் கட்சிக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி கவிதாவுக்கு ஜாமின் கிடைத்தது'' என்றார்.இந்நிலையில், முதல்வர் ரேவ்ந்த் ரெட்டி, கடந்த 2015ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இருந்த போது தெலுங்கானா சட்டமேலவைக்கு நடந்த தேர்தலின் போது ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக புகார் எழுந்தது. இது குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில், இந்த வழக்கை ம.பி., மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை நீதிபதிகள் பிஆர் கவாய், பிகே மிஸ்ரா, கேவி விஸ்வநாதன் அமர்வு விசாரித்தது.அப்போது, ரேவந்த் ரெட்டியின் கருத்து குறித்து நீதிபதி கவாய் கூறியதாவது: ரேவந்த் ரெட்டி என்ன சொன்னார் என்பதை படித்து பார்த்தீர்களா? முதல்வரின் இத்தகைய அறிக்கைகள் ஒரு அச்சத்தை ஏற்படுத்தக்கூடும். அரசியல்வாதிகளுக்கும் நீதித்துறையில் உள்ளவர்களுக்கு பரஸ்பர ஒப்பந்தம் உள்ளது என அரசியல்சாசன பதவியில் இருக்கும் ஒருவர் கூறலாமா? அரசியல் காரணங்களுக்காக உத்தரவு பிறப்பிக்கிறோம் என எப்படி சொல்ல முடியும்? நீதித்துறையை மதிக்காவிட்டால், விசாரணையை வேறு எங்காவது மாற்றுவோம். நாட்டில் உச்சபட்ச நீதிமன்றம் இதுதான். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Gokul Krishnan
ஆக 30, 2024 13:25

அன்டோனியோ மரியோ மற்றும் ராவுல் வின்சி போடும் உத்தரவுக்கு வாலாட்டும் இவரை போன்றோர் எப்போதும் திருந்த போவது இல்லை


Easwar Kamal
ஆக 29, 2024 23:46

ஏன் இருக்க கூடாது . அப்படியே இப்போ இருக்கிற ஒன்றிய அரசு ரொம்ப நல்லவனுங்க. சந்திரசேர ராவ் இப்போ காது போன பலூன். இப்போ ஒன்றியம் என்ன சொல்லுதொ அப்டியே செய்வானுவ ஓடுன ஓடுவானுங்க. அதை தன ரேவந் சொல்லவராரு.


Sivagiri
ஆக 29, 2024 22:47

அந்த மாதிரியான அறிவெல்லாம் இன்றய அரசியலில் எதிர்பார்க்க முடியாது . . . அதுபோக , சும்மா கொட்டாவி விட்டாலே, மீடியாவில் டப்பிங் பேசி எதையாவது போட்டு பரபரப்பாகிடறாங்க . .


Corporate Goons
ஆக 29, 2024 22:43

99 சதவீத மக்கள் நீதிமன்றங்களை, ஒட்டுமொத்த அரசியல் சட்டத்தையும் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. ஒரு ரவுடிகளைப்போல்தான் பார்க்கிறார்கள். சட்டம் ஒரு இருட்டறை என்று கூறியது மட்டுமல்ல , கோடானு கோடி மக்களுக்கு திரையிட்டு காட்டியவர் ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்ததை ஒரு நீதிபதியால் எப்படி மறக்க முடிந்தது. அனைத்தும் மோடியின் மோகம், கார்போரேட்டு கொள்ளையர்களின் பணம், பாஜாவின் அரசியல் ஏஜெண்டுகளால் மட்டுமே மறக்க முடியும்


Corporate Goons
ஆக 29, 2024 22:38

அமைச்சர்களும் அரசும் நீதிமன்றத்தை ஆட்சிக்கு வந்தவுடன் மாற்றி தங்களுக்கு ஆதரவாக தீர்ப்பை மாற்றிவிடுகிறார்கள் என்று இந்து தீவிரவாத நீதிபதி, மோடியின் அடிவருடி, வெங்கடேஷ் போன்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் கோர்ட்டுகளிலேயே , தங்கள் தீர்ப்பிலேயே கூறவில்லையா?. தங்கள் அரசியல் , இனவாத மதவாத வெறிகளை கோர்ட்டுகளிலேயே போக்கிக்கொள்ளவில்லையா?. உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு இது தெரியவில்லையா?. இவர்கள் மோடியின் பாஜவின் அரசியல் ஏஜெண்டுகள் என்பதை நாடே, உலகமே அறியும். நீதிமன்றமோ, ஒரு முதலவரோ சொல்லி நாட்டு மக்களுக்கு தெரியவேண்டியதில்லை.


Kundalakesi
ஆக 29, 2024 20:58

No comments simply waste


Ramesh Sargam
ஆக 29, 2024 20:57

நீதிமன்றத்தை விமர்சிக்கும் அளவுக்கு அரசியல்வாதிகளும், மக்களும் இன்று துணிந்துவிட்டனர். நீதிமன்றங்களின் மீதான மதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக தேய்கிறது. இது பெரும் ஆபத்து. இந்த நிலை மாறவேண்டுமென்றால், நீதிமன்றங்கள் தங்களை விமர்சிப்பவர்களை கடுமையாக எச்சரித்து தண்டிக்கவேண்டும்.


kantharvan
ஆக 29, 2024 21:33

ஏன் ஒழுங்கா தீர்ப்பு சொல்லலாமே??


jeyakumar
ஆக 29, 2024 19:58

அரசியல்வாதிகளுக்கும் நீதித்துறையில் உள்ளவர்களுக்கு பரஸ்பர ஒப்பந்தம் உள்ளது - உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை....100000000000000%


kantharvan
ஆக 29, 2024 21:35

உண்மை சுட்டு விட்டது காவாய்க்கு


தாமரை மலர்கிறது
ஆக 29, 2024 19:43

அமலாக்கத்துறை யார் மீது கேஸ் போட்டு உள்ளே தள்ளுகிறார்களோ, அவர்கள் தான் ஜெயிலுக்குள் போவார்கள் என்பது உலகம் அறிந்த விஷயம். ரேவந் ரெட்டி சொன்னது மற்ற எதிர் கட்சி தலைவர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணியாக உள்ளது. திமிர் பிடித்து ஆடாமல், ஒழுங்காக எதிர்க்கட்சிகள் நடக்க வேண்டும் என்பது தான் நிஜம். இதில் உச்சநீதிமன்றம் மத்திய அரசைவிட தான் ஒரு பெரிய ஆள் என்று காட்டி கொள்வதற்காக கண்டிக்கிறது. ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.


kantharvan
ஆக 29, 2024 21:37

ராமர் கோவில் தீர்ப்பு ஒன்று போதாதா? நீங்கள் நீதியை பரிபாலனம் செய்ததை உலகம் அறிந்து கொள்ள ??


Iyer
ஆக 29, 2024 19:23

நிலுவையில் உள்ள மில்லியன் கணக்கான வழக்குகளைப் பற்றி இந்திய நீதிமன்றங்கள் கவலைப்படுவதில்லை. இந்திய நீதிமன்றங்கள் ஜாமீன் வியாபாரிகளாக மாறிவிட்டன. இது பகிரங்க ரகசியம் - உயர் பதவியில் இருக்கும் குற்றவாளிகள் மற்றும் மோசடி செய்பவர்கள் 100-200 கோடிக்கு ஈடாக ஜாமீன் பெறுகிறார்கள் .