உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 25 பேர் கைது

டில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 25 பேர் கைது

புதுடில்லி: டில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 25 பேரை அம்மாநில போலீசார் கைது செய்தனர். உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவில் தங்கியிருந்ததாக 13 பெண்கள், 12 ஆண்கள் என மொத்தம் 25 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் உள்ளூர் மக்களுடன் மக்களாக டில்லியில் சட்டவிரோதமாக வசித்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். டில்லியில் கைது செய்யப்பட்ட வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள், தங்களின் சொந்த நாட்டில் இருப்பவர்களுடன் ஐஎம்ஓ செயலி மூலம் தொடர்பு கொண்டு வந்துள்ளனர். சர்வதேச அழைப்புகளுக்கு அடிக்கடி பயன்படுத்தப்படும் இந்த செயலியின் மூலம், இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த போதும், அவர்களின் குடும்பத்தினருடன் அடிக்கடி தொடர்பு கொண்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.உரிய சட்டரீதியான நடவடிக்கைகளுக்குப் பிறகு, கைது செய்யப்பட்ட நபர்கள் விரைவில் வங்கதேசத்திற்கு நாடு கடத்தப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

தாமரை மலர்கிறது
செப் 25, 2025 18:57

இந்தியாவில் ரெண்டு கோடி வெளிநாட்டவர்கள் சட்டவிரோதமாக இருக்கிறார்கள்.


GMM
செப் 25, 2025 14:28

நாடு முழுவதும் சட்ட விரோதமாக தங்கி இருக்கும் மக்கள் மீது நடவடிக்கை எடுக்க சரியான rules and regulations வகுக்க வேண்டும். மாநில பொறுப்பு அதிகாரிகள் நியமனம் . சுணக்கம் என்றால் நடவடிக்கை முறை வகுக்க வேண்டும். தேடுதல், கைது, நாடு கடத்துவது அதிக சிரமம். அரசியல் சாசன படி இந்தியாவில் இரட்டை குடியுரிமை கிடையாது. சிறுபான்மை ஆதரவு மாநில நிர்வாகம் அந்நியரை வெளியேற்ற அதிகம் ஒத்துழைக்காது. கள்ள குடியேறிகள் தானே முன்வந்து அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் விவரம் பதிவு செய்தால் கடும் தண்டனை இல்லை என்று அறிவித்து வாக்காளர் அட்டை, ஆதார், ரேஷன், பான் கார்டு.. போன்றவை உடனே திரும்ப பெற்று ரத்து செய்ய வேண்டும்.


ram
செப் 25, 2025 13:08

சென்னையில் இந்த இடங்களில் அதிகமாக இருக்கிறான்கள்


saravan
செப் 25, 2025 12:01

அய்யய்யோ அப்போ வாக்காளர் பட்டியலில் இருந்து வங்கதேசத்தினர் நீக்கப்படுவர்


G Mahalingam
செப் 25, 2025 09:41

டில்லியில் மட்டுமே 20 லட்சம் பேர் இருக்கின்றனர். சலூன் கடை, பழ மற்றும் காய்கறி வியாபாரம், பிரிட்ஜ் ஏசி ரிப்பேர் இதில் அதிகம் பேர் உள்ளனர்.


Barakat Ali
செப் 25, 2025 09:07

இதை இத்தனை வருடங்களாக செய்ய முடியாமல் இருந்தது ஹிந்துத்வா பேசும் பாஜவுக்குத் தோல்வி ..... கசப்பான உண்மை .....


Indian
செப் 25, 2025 10:16

நீங்க சந்தோஷப்படறீங்களா அல்லது வருத்தப்படறீங்களா ?


Iyer
செப் 25, 2025 10:39

இந்த சட்டவிரோத குடியேறிகள் நேற்றோ இன்றோ இந்தியாவுக்குள் வரவில்லை. 30-40 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசும், 15 வருடங்களாக மம்தா அரசும் - ஓட்டுக்காக இவர்களை இந்தியாவில் குடியேற்றி - ஆதார், வோட்டர் ID பெற்றுக்கொடுத்துள்ளனர். பிஜேபி இந்த சட்டவிரோத குடியேறிகளை வெகு சீக்கிரம் விரட்டி விடும்.


Ramesh Sargam
செப் 25, 2025 08:55

இந்தியா முழுவதும் சட்டவிரோதமாக தங்கியுள்ள மற்ற நாட்டினர் உடனே அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படவேண்டும். கூடவே அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள், அடைக்கலம் கொடுத்தவர்களும் அனுப்பப்படவேண்டும்.


VENKATASUBRAMANIAN
செப் 25, 2025 08:48

யார் சட்டவிரோதமாக தங்கியிருந்தாலும் அவர்களை உடனே திரும்பி அனுப்பிவிட வேண்டும். அவர்களுக்கு யார் துணை போனாலும் அவர்களையும் சேர்த்து அனுப்பிவிட வேண்டும்.


பாரதன்
செப் 25, 2025 08:41

பாரதம் என்ன சத்திரமா. மத்திய அரசு போர்க் கால அடிப்படையில் அந்நியர்களை வெளியேற்ற வேண்டும்.


kumarkv
செப் 25, 2025 08:31

எல்லாம் .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை