உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விடுதலை புலிகள் மீதான தடையை உறுதி செய்தது டில்லி தீர்ப்பாயம்

விடுதலை புலிகள் மீதான தடையை உறுதி செய்தது டில்லி தீர்ப்பாயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக இருந்து வருவதால், விடுதலை புலிகள் அமைப்புக்கான தடையை நீட்டிக்கும் மத்திய அரசின் முடிவை தீர்ப்பாயம் உறுதி செய்துள்ளது. தேர்தல் பிரசாரத்துக்காக, கடந்த 1991ல் சென்னை ஸ்ரீபெரும்புதுார் வந்த முன்னாள் பிரதமர் ராஜிவை, இலங்கையில் இருந்து செயல்பட்ட புலிகள் அமைப்பினர் தற்கொலைப்படை தாக்குதல் வாயிலாக கொன்றனர். இதையடுத்து, அந்த அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்தது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த தடை நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 2019ல் புலிகள் அமைப்பு மீதான தடையை ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.இந்த உத்தரவு, மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு கடந்த மே மாதம் அறிவித்தது. இதற்கிடையே, இந்த அமைப்புக்கு தடை விதிக்கும் முகாந்திரங்களை ஆராய்ந்து முடிவு செய்ய, சட்டவிரோத தடுப்பு நடவடிக்கைகள் சட்டத்தின்படி, டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி ப்ரீதம் சிங் அரோரா தலைமையில் தீர்ப்பாயம் ஒன்றை மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்தது.இந்த தீர்ப்பாயமானது, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ், புலிகள் அமைப்பை தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவிப்பதில் ஆட்சேபனை இருப்பவர்கள் அல்லது அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் விளக்கமளிக்கலாம் என தெரிவித்திருந்தது. இதையடுத்து, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ உள்ளிட்ட பலர், புலிகள் அமைப்பு மீதான தடையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி தீர்ப்பாயத்தை அணுகினர். மத்திய உள்துறை அமைச்சகம், தீர்ப்பாயத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், 'புலிகள் அமைப்பினர் தனிநாடு கோரிக்கையை இன்னும் கைவிடாமல், தலைமறைவாக செயல்பட்டு வருகின்றனர். நிதி திரட்டுதல் மற்றும் தனிநாடு குறித்த பிரசார நடவடிக்கைகளை அந்த அமைப்பு தீவிரப்படுத்தியுள்ளது. 'வெளிநாடுகளில் வாழும் இந்த அமைப்பின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் மத்தியில் குறிப்பாக தமிழர்கள் மத்தியில் இந்திய எதிர்ப்பு பிரசாரத்தை தொடர்ந்து பரப்பி வருகின்றனர்' என, தெரிவித்திருந்தது.இதையடுத்து, புலிகள் அமைப்பின் மீதான ஐந்தாண்டு கால தடையை தீர்ப்பாயம் உறுதி செய்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், 'புலிகள் அமைப்பின் நோக்கம், நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை அச்சுறுத்துவதாக உள்ளது. எனவே, அந்த அமைப்பின் மீதான தடை செல்லும்' என, தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Rpalni
டிச 08, 2024 17:37

எப்படிப்பட்ட இயற்கை எழில் கொஞ்சும் இலங்கையை சிங்கள இனவாதிகளும் கேடு கேட்ட விடுதலை புலிகளும் நாசம் செய்தார்கள். கொலையை கலையாய் பயின்ற புலிகள் ஒழிந்தது நல்லதற்கே


Sampath Kumar
டிச 08, 2024 08:15

கிட்ட தட்ட இதே கொள்கை கொண்ட ஆர் எஸ்.எஸ் என்ற பயங்கரவாத அமைபை தடை செய்வீர்களா ஏற்கனவே தடை செய்யப்பட்ட அமைப்பு தானே


N Sasikumar Yadhav
டிச 08, 2024 10:05

தேசபக்தர்களை கொண்ட RSS அமைப்பை கண்டால் உன்னய மாதிரியான தேசதுரோக கும்பலுங்க கதறத்தானே செய்யனும். RSS உன்ன மாதிரி தேச பிரிவினை பேசவில்லை மூர்க்கனே


Madhavan
டிச 08, 2024 07:57

Nalla theerpu ... let us welcome this


Arul. K
டிச 08, 2024 06:24

ஆள் இல்லாத கடையில் டீ எதுக்கு ஆத்தனும்


சம்பா
டிச 08, 2024 03:07

பாதிக்கபட்டவன் தமிழன் பிறகு என்ன


Murthy
டிச 08, 2024 02:39

அந்த பயம் இருக்கட்டும்.....


முக்கிய வீடியோ