வாசகர்கள் கருத்துகள் ( 1 )
போர்ன் விட்டா கிவிஸ் கான்டெஸ்ட் மூலம் புகழ் பெற்ற டெரிக் ஆங்கிலோ இந்திய சமுதாயம் ..திரிணமூல் காங்கிரசில் கொடுத்த பதவிக்கு அதிகமாகவே கூவினார் ..அம்மணிக்கு போரடித்திருக்கும் ...
திரிணமுல் காங்., - எம்.பி., டெரிக் ஓ பிரையன்; இவர், மூன்றாவது முறையாக ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ளார். இவருடைய தந்தை எம்.பி.,யாகவும், எம்.எல்.ஏ.,வாகவும் இருந்தவர்.டெரிக் ஒரு 'குவிஸ் மாஸ்டர்!' இவர், 'டிவி'யில் குவிஸ் ஷோ நடத்துபவர். பத்திரிகைகளில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருபவர்; மேலும், பல்துறை வித்தகர்.அதே சமயம், திரிணமுல் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருப்பவர். பார்லிமென்டிலும், வெளியிலும் பா.ஜ.,வை கடுமையாக விமர்சிப்பவர். மேற்கு வங்க முதல்வர் மம்தாவிற்கு நெருக்கமாக இருந்த இவர், தற்போது ஓரங்கட்டப்பட்டு உள்ளதாக சொல்லப்படுகிறது.மம்தாவின் மருமகன் அபிஷேக் பானர்ஜியும், டெரிக்கை இப்போது கண்டுகொள்வதில்லையாம். இதனால் வெறுத்துப் போய் முழுதுமாக குவிஸ் ஷோ நடத்தும் முயற்சியில் இறங்கிவிட்டாராம் டெரிக். 'விரைவில், ஒரு ஓடிடி தளத்தில் இவருடைய குவிஸ் ஷோ ஒளிபரப்பாகப் போகிறது' என, சொல்கின்றனர்.
போர்ன் விட்டா கிவிஸ் கான்டெஸ்ட் மூலம் புகழ் பெற்ற டெரிக் ஆங்கிலோ இந்திய சமுதாயம் ..திரிணமூல் காங்கிரசில் கொடுத்த பதவிக்கு அதிகமாகவே கூவினார் ..அம்மணிக்கு போரடித்திருக்கும் ...