உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி இளைஞர்களுக்கு தோள் கொடுக்கும் டெலிவரி வேலை

டில்லி இளைஞர்களுக்கு தோள் கொடுக்கும் டெலிவரி வேலை

புதுடில்லி : டில்லியில் வசிக்கும் 70 சதவீத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் முக்கிய தளமாக, இ - வணிக நிறுவனங்கள் உருவாகி வருகின்றன. குறிப்பாக பகுதி நேர வேலைவாய்ப்புகள் மூலம் இளைஞர்களுக்கு கணிசமான வருவாய் கிடைத்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. டில்லியில், முதல்வர் ரேகா குப்தா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள இளைஞர்கள் பலர் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள பகுதி நேர ஒப்பந்த தொழிலாளர்களாக மாறி வருகின்றனர். அதற்கான அடித்தளத்தை, இ - வணிக நிறுவனங்கள் உருவாக்கி தருகின்றன. இது குறித்து, 'அதிகாரமி க்க இந்தியா' என்ற அமைப்பு, 15 மாவட்டங் களில் 90,000 பேரிடம் கருத்துக் கணிப்பு நடத்தியது. அதில், 'அமேசான், டெல்லிவரி, மீஷோ' போன்ற இ - வணிக நிறு வனங்கள் இளைஞர்களின் வாழ்வை மாற்றுவதில் முக்கிய பங்கு வகிப்பது தெரியவந்தது. மேலும், டில்லியில் வசிக்கும் ஒப்பந்த தொழிலாளர்களில் 70 சதவீதம் பேர், பகுதிநேர வேலை வாய்ப்புகளை பெற்று, தங்கள் வருவாயை ஈட்டி வருவதும் தெரியவந்தது.

இது குறித்து அதிகாரமிக்க இந்தியா அமைப்பின் இயக்குநர் கிரி கூறியதாவது:

'அமேசான், டெல்லி வரி' போன்ற நிறுவனங்கள் தங்களது முதலீடுகள் மூலம் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிலையான வேலைவாய்ப்பு அமைவதற்கான உகந்த சூழலை ஏற்படுத்தி தருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Artist
செப் 10, 2025 18:48

டாஸ்மாக் சரக்கை வீட்டில் டெலிவரி செய்து வேலைவாய்ப்பை அதிகரிக்கலாம் குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுவதை நிறுத்தலாம்


venugopal s
செப் 10, 2025 17:36

ஓ,இது தான் நமது பிரதமர் அவர்கள் வாக்குறுதி கொடுத்த வருடத்துக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பா?


Barakat Ali
செப் 10, 2025 08:53

டில்லி இளைஞர்களுக்கு தோள் கொடுக்கும் டெலிவரி வேலை... தில்லி இளைஞர்கள் மீது ஊ ஊ பீயி ஸ் பொறாமை.. ஏன்னா இவனுங்க மாதிரி தில்லி இளைஞர்கள் நாற பொழப்பு பொழைக்கலை .......


அப்பாவி
செப் 10, 2025 08:28

வேலை செய்யறாங்க. மகிழ்ச்சியா இருக்காங்களான்னு ஆய்வு செஞ்சாங்களா?


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 10, 2025 09:41

மகிழ்ச்சியாக இல்லாததால் தான் வேலைக்கு போகிறார்கள். பொருளாதாரம் உயர்ந்தால் மகிழ்ச்சி கிடைக்கும் என்று ஓடுகிறார்கள். ஆனால் மகிழ்ச்சி என்பது அவரவர் மனநிலையை பொறுத்தது.


KOVAIKARAN
செப் 10, 2025 07:40

மிகவும் உண்மை. இது டில்லி மாநகரத்தில் மட்டுமில்லை. நமது நாட்டில் உள்ள பிற மாநகரங்களில் இது நடைபெற்று வருகிறது. இங்கே கோவையில், ஏராளமான இளைஞர்கள் மட்டுமல்ல, நடுத்தர வயதினர்கூட அதிக வருமானத்திற்காக part -time வேலையாக இதில் பணிபுரிந்து சம்பாதித்து வருகிறார்கள். இவர்களது சேவை, காலை 5.00 மணியிலிருந்து தொடங்கி, இரவு 12 மணி வரை நடக்கிறது. நாங்கள் என்றாவது வெளியூர் சென்று வீட்டிற்கு திரும்பும்போது பத்து மணிக்கு மேல் தாமதமாகி விட்டால், நாங்கள் காரில் வரும்போதே Swiggy அல்லது Zomato வில் ஆர்டர் செய்துவிட்டு வருவோம். அவர்கள் 11 மணி அளவில் எங்கள் இல்லத்திற்கு வந்து டெலிவெரி செய்வார்கள். மழை பெய்து கொண்டிருந்தால் கூட அந்த நேரத்திலும் டெலிவரி செய்வார்கள். பகுதி நேர வேலை என்றாலும், அவர்களின் சேவை மகத்தானது.


Artist
செப் 10, 2025 06:51

அமெரிக்காவில் இதே நிலைமை ..மாணவர்கள் பார்ட் டைம் டெலிவரி செய்கிறார்கள் ..மால்களுக்கு உள்ளே செல்ல நேரமில்லாதவர்களுக்கு காருக்குள் டெலிவரி செய்கிறார்கள் ..மாணவிகள் குழந்தை பார்த்துக்கொள்வது காய்கறிகள் நறுக்கி தருவது வாஷிங் மெஷினிலிருந்து துணி எடுத்து மடித்து வைப்பது போன்ற பார்ட் டைம் வேலை செய்கிறார்கள்


புதிய வீடியோ